வியாழன், 27 மார்ச், 2014

தூரிகை மன்னர் வின்சென்ட் மோசஸ் ராஜா!!!

அன்பு வாசக நெஞ்சங்களே! என் ஆருயிர் வாக்காளப் பெருமக்களே!! உங்கள் ஓட்டை தவறாமல் ஏதாவது ஒரு சின்னத்திலோ நாப்பத்தி ஒன்பது ஓ விலோ குத்தி ஜனநாயகத்தின் பெருமைக்கு இன்னும் உரமூட்டப் போற மகாசனங்களுக்கும் சபையோருக்கும் என் வணக்கங்க! என்னது ஓட்டு போட கமிசன் வெட்றதா?!?!?!? அய்யா சாமீ அப்புறம் பதவிக்கு வந்தா உங்களையே மொட்டை போடுவோம் பரவால்லயா????  
நிற்க!! அன்பு சகோதரர், நண்பர் காமிக்ஸ் உலகின் சிறப்பான பக்கங்களில் ஒரு அட்டகாசமான நண்பர் திரு.ராசா ஹீ ஹீ ஹீ வின்சென்ட் மோசஸ் ராஜா தி கிங் ஆப் பிரஷ் அவர்களைக் குறித்து கோள் மூட்டுறதுல எனக்கு ரொம்ப சந்தோசமுங்க! (எப்படியும் உருட்டுக் கட்டையோட மேடம் அடுத்த தடவை வரவேற்கப் போறாங்க!! அந்த ரிஸ்கை எடுத்தாதானே எங்க காமிக்ஸ் ரசிகர்கள ரஸ்க் போட்டு திருப்தி பண்ண முடியும்?!??! ஹீ ஹீ ஹீ ) 
சார் எங்களுடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களில் ஒருவர்! சர்வதேச அளவில் அறிமுகமான கலக்கல் தமிழ் முகம் இவர்! தனது தூரிகையால் தமிழன் பெருமையை அமெரிக்கப் பத்திரிக்கைகள் வரை கொண்டு சேர்த்த படைப்புலக பிரம்மா இவர்! ஆனால் விளம்பர வெளிச்சம் கண்டு ஒதுங்கிப் பதுங்கிப் பின் பாயும் புலி இவர்! 
கொஞ்சுதமிழ் நான்ஜில் நாட்டு மன்னர் இவர். சிறப்பான காமிக்ஸ் முயற்சிகளும் பத்திரிக்கையுலக உலாவலும் கொண்டு திகழும் அருமையான மனிதர்! இவரிடம் இருந்து அனேக விஷயங்களைக் கற்கலாம்! 
தனது முயற்சியில் கண்மணி காமிக்ஸிலும் ஒரு சில கதைகளைப் படைத்துள்ளார்! அவற்றில் சாரின் அனுமதியுடன் ஒரு சில பக்கங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு....
பின் அட்டை 
கடற்கரை மணலில்... வின்சென்ட் மோசெஸ் அவர்களது மகத்தான தூரிகையில் விளைந்த அற்புதமான கதை 





இந்த பக்கங்களை எங்களுக்காக கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி சார்! தங்கள் காமிக்ஸ் காதலுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! இன்னும் சிறப்பான உங்களது படைப்புகளை இன்னும் இன்னும் எதிர் நோக்கி இருக்கிறோம்!!! 
சாரின் மற்றுமொரு அசத்தல் ஓவிய நூல்!!! மாபெரும் மீட்பர்!!!



பின் பக்கம் 

தவிர சுட்டி விகடனில் இலவச இணைப்பாக வரும் கட்டிங் ஓவியங்களை இணைத்து பொம்மை உருவம் செய்யும் எண்ணத்தினை விதைத்து ஆரம்ப அதகளம் செய்தவர் சார்தான்! இன்னும் பல சாதனைகளை புரிந்து எங்களை மெய்மறக்க செய்ய வேண்டியது உங்க கடமை சார்!!
 (ஹீ ஹீ ஹீ எங்க ஓடறீங்க!!!!)



என்றும் அதே அன்புடன்_ உங்கள் தோழன் ஜானி!!!!

2 கருத்துகள்:

  1. சூப்பர் பதிவு ஜானி நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான பதிவு! தொடரட்டும் தங்கள் பதிவு குறைந்தபட்சம் வாரத்திற்கு 1 என்ற விகிதத்தில் !

    பதிலளிநீக்கு

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...