செவ்வாய், 31 ஜூலை, 2018

IND-22-004-தொல்லை தேடிய வல்லி-லெப்டினென்ட் ட்ரேக்-ஜேம்ஸ் ஜெகன்


அன்பார்ந்த வாசக பெருமக்களுக்கு வணக்கங்கள் அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய திரு.ஜேம்ஸ் ஜெகன் அவர்களது அடுத்த அன்பளிப்பு இது. இளம் சிறார்களை விழிப்புணர்வோடு கவனித்து, நல்வழிகாட்டி அரவணைத்து, ஆலோசனைகளை தக்கவாறு அவர்களின் துள்ளல் மனதுக்கேற்ப கொஞ்சம் விட்டுக் கொடுத்து, அவ்வப்போது சற்றே அதட்டி, அவசியமான இடத்தில் கண்டித்தும் அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவற்றிற்கான சரியான பாதையில் நடைபயின்று இந்த உலகை வெல்ல அவர்களை கூர்மையாக்குவது பெற்றோரின், உற்றாரின், அவர்கள் சார்ந்த அனைவரது கடமையும் சமுதாய பணியுமாகும்.. ஆனால் நாம் கேள்விப்படுவதெல்லாம் என்ன? செய்தித் தாள்களை திறந்தாலே இளைய சமூகத்தினர் மீதான போதை மருந்து, பாலியல் வன்கொடுமை, பெற்றோர் கைவிடுதல் போன்று அடுத்தடுத்த தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. நாம் எவ்விதத்தில் இளைய தலைமுறையினருக்கான பாலமாக இருக்கப்போகிறோம்?!?
இதோ ஒரு சிறுமி...பெற்றோரால் கைவிடப்பட்ட நிலைமையில் திருடிப் பிழைத்து வாழ வேண்டிய கொடுமைக்குள்ளாகிறாள்.
ஒரு பெண் தன் முன்னால் நடக்கிற கொலைக்கு சாட்சியாகிறாள். அதனால் கடத்தப்படுகிறாள். அவள் எழுதிய துண்டு சீட்டு அடங்கிய கைப்பை அந்த ஆதரவற்ற சிறுமியிடம் கிடைக்கிறது. அந்த சிறுமி முதலில் காவல் நிலையத்துக்கு சென்று பின்னர் அஞ்சி கடத்தப்பட்ட பெண்ணாக அடையாளம் மாறி வாழ முயற்சிக்கிறாள். லெப்டினென்ட் டிரேக் அறிமுகமே ஒரு சிறுவனை சீர்திருந்த அறிவுறுத்துவதோடு துவங்குகிறது. கடத்தப்பட்ட பெண்ணின் அடையாளத்துடன் வலம் வர முயலும் சிறுமியின் முயற்சி குறுகிய காலத்துக்குள்ளாகவே சிக்கலாகிவிட தன்னைப் பற்றிய உண்மைகளை லெப்.டிரேக் வசம் கூறி தன்னை விடுவிக்கக் கோருகிறாள் சிறுமி.  வில்லன் கொடூரமுகம் காட்டி கராத்தே கலையெல்லாம் பயின்றவனாக இருக்கிறான். அவனுடன் மோதிடும் டிரேக் பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்? பின்னணியில் நடக்கும் கடத்தல் எது? என்பதை பரபரக்கும் இக்கதை நமக்கு சிறப்பான மொழிபெயர்ப்புடன் நம் முன் ஆக்ஷன் விருந்து வைத்து அழைக்கிறது..வாருங்கள் கதைக்குள் புகலாம்...
பிடிஎப் தரவிறக்கத்துக்கு...
தொல்லை தேடிய வல்லி-ஜேம்ஸ் ஜெகன்
நிற்க.. தங்களிடம் ஏதேனும் இந்திரஜால் புத்தகங்கள் இருந்தால் பிடிஎப் செய்து அனுப்பி வையுங்களேன். இங்கே பகிர்ந்து இந்திரஜால பொற்காலத்தை நினைவு கூர்வோம். சேர்ந்து கொண்டாடுவோம்.. அந்த இழந்த நாட்களின் சொர்க்கத்தை...என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் பேட்மேன்..ஸ்பைடர்மேன்...சூப்பர்மேன்..ஹிஹிஹிஅப்படியே பழகிப் போச்சுங்....ஜானி...

திங்கள், 30 ஜூலை, 2018

Ind-22-003-அந்தரத்திலே ஒரு மந்திரவாதி-மாண்ட்ரேக்-ஜேம்ஸ் ஜெகன்

நமது பெருமதிப்புக்குரிய திரு.ஜேம்ஸ் ஜெகன் அவர்களது அடுத்ததொரு அன்பளிப்பு இது..அன்னாரது கடும் பணிச்சூழலிலும் சித்திரக்கதைகள் மீதான ஆர்வம் அருகிவரும் சூழலை களைந்து ஆர்வமுடையோரை புது சித்திரக்கதை உலகில் பயணிக்க செய்ய தன்னாலான முயற்சிகளை தொடர்கிறார்...
ஈரோடு புத்தகத்திருவிழா களை கட்டப் போகும் இரத்தப்படல தருணத்தை சிறப்பாக்கிட சித்திரக்கதை ஆர்வலர்களுக்கான சிறு அன்பளாப்பாக மாண்ட்ரேக் -லொதார் சாகஸத்தில் உருவான 1985ஆம்ஆண்டில் வெளியான அந்தரத்திலே ஒரு மந்திரவாதி..
நிற்க இந்திரஜால் காமிக்ஸ்களை பெயரிடுகையில் முதலில் அது இந்திரஜால் என்பதைக் குறிக்கும் வகையில் IND என குறித்திருக்கிறேன். மலர் எத்தனை என்பது அடுத்தும் இதழ் எத்தனை என்பது அடுத்தும் கதைத் தலைப்பு அதன் பின்னரும் நாயகர் அல்லது அன்பளிப்பு கொடுத்தவர் பெயரும் இடம் பெறும் வகையிலேயே புத்தகங்களை தந்து வருகிறோம். சில நேரங்களில் இட வசதி இருப்பின் விலை விவரங்களை இணைத்து பதிவிடுகிறோம். நண்பர்களும் தொடர்ந்து இதேபோல எண்ணிடுமாறு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறோம்..
லிங்க்?
இங்கே...
https://www.mediafire.com/file/9odxylwo132047v/IND-22-003-%25E0%25AE%2585%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%2587_%25E0%25AE%2592%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BF-Ja13-19-1985.pdf/file

வியாழன், 26 ஜூலை, 2018

MB-004-ஹஸ்தினாபுரத்தில் பாண்டவர்கள்-ஸ்ரீராம்

அன்பார்ந்த பாரத மண்ணின் மைந்தர்களே...மகாபாரதத்தின் கதையிது..பாரதம் தோன்றிய கதையிது.. இதன் நான்காம் பகுதியை வெளியிட உதவிய நண்பர்கள் ஸ்ரீராம், R.T.முருகன், திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் மற்றும் நிறைவான பகுதிகளை முன்வந்து கொடுத்தருளியுள்ள தோழர் மாயாவி சிவா ஆகியோரது ஒத்துழைப்பையும் அன்பையும் நினைவு கூர்ந்து கொண்டு கதைக்குள் புகுவோம்..வாருங்கள் பாரதத்தாயின் புதல்வர்களே...

தரவிறக்க சுட்டி...
https://www.mediafire.com/file/g4pxafm89k858du/MB-004-%25E0%25AE%25B9%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D_%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.pdf/file

IND-22-007-எலக்ட்ரானிக் இட்சிணி-காரிகன்-ஜேம்ஸ் ஜெகன்

வணக்கம் ப்ரியமான தோழர்களே.. ஒத்துழைப்பும் ஒற்றுமையும் ஒருங்கே குவியுமிடத்திடத்தில் மகிழ்ச்சிக்கும் ஆரவாரத்திற்கும் எல்லையேது அங்கே...இதோ ஜேம்ஸ் ஜெகன் அவர்களது மற்றுமொரு பரிசினை வாசித்து மகிழ்ந்து கொண்டாடுங்கள்..காரிகனின் சாகஸமான இதனைப் போன்ற அரியதொரு புத்தகத்திற்கு அட்டை அமையாதநிலையில் தம்பி திருப்பூர் குமரனின் உதவியால் அதுவும் இணைக்கப்பெற்று என்னால் பரிமாறப்படும் இவ்விருந்தில் பங்கு கொள்வதுடன் நண்பர்களுக்கு நான்கு நல்ல வார்த்தைகளை உதிர்த்து மகிழ்ச்சியைப் பலமடங்காக பெருக்கலாம்...வாருங்கள் இணைந்து நடனமாடித் திளைப்போம்...

IND-20-004-மரண விளிம்பு-1983-ஜேம்ஸ் ஜெகன்

ப்ரியமான உள்ளங்களே...
இம்முறை ஜேம்ஸ் ஜெகன் அளித்திருக்கும் அன்பளிப்பாக மலர்வது மரண விளிம்பு...

https://www.mediafire.com/file/99l92dtgxngdx2x/IND-20-004-%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581-1983-2.00.pdf/file

புதன், 25 ஜூலை, 2018

மேத்தா & அசோக் காமிக்ஸ்- தொகுப்பு-சரவணகுமார் ஜேடர்பாளையத்தார்

வணக்கம் ப்ரியமானவர்களே..

https://www.mediafire.com/folder/rbcsiu9fc96cr/மேத்தா & அசோக் காமிக்ஸ்

மேத்தா காமிக்ஸின் 29 கதைகள் அடங்கிய தொகுப்பு!
தொகுத்த ஜேடர்பாளையம் சரவணகுமாருக்கும், ஔி வருடிய நண்பர்களுக்கும் நன்றி!

செவ்வாய், 24 ஜூலை, 2018

IND-22-005-நீரடிக்கொள்ளை-வேதாளர்-ஜேம்ஸ் ஜெகன்

ப்ரியமானவர்களே..பல பூக்களின் தொகுப்பே மாலையாகி இறைவனுக்கு சூட்டப்படுவது நிகழ்கிறது.. அதுபோன்று பல காமிக்ஸ்கள் ஒன்று கூடி இழந்த சரித்திரத்தை மீட்டெடுத்தல் நிகழ்கிற தருணத்தில் நிற்கும் இவ்வேளையில் இந்திரஜால் காமிக்ஸின் தமிழ் பதிப்பை செவ்வனே வெளியிட்டு வரும் நண்பர் ஜேம்ஸ் ஜெகனின் இந்த நீரடிக் கொள்ளையும் சிறப்பானதொரு மலராக காமிக்ஸ் உலகை அலங்கரிக்கப்போவது உறுதி..நன்றியும் அன்பும் உங்கள் சார்பில் அவருக்கே...
































தரவிறக்க சுட்டி..
                 நீரடி கொள்ளை 

சனி, 21 ஜூலை, 2018

IND-?2-14-கருமுத்துக்கள்ளர்கள்-வேதாளர்-ஜேம்ஸ் ஜெகன்

இனிய உள்ளங்களுக்கு வணக்கங்கள்..இது இந்திரஜால் காமிக்ஸின் 1985ம் வருடத்திய கருமுத்துக்கள்ளர்கள்..
*மீன் மனிதன் ராணி காமிக்ஸ் பதிப்பில் இதன் பெயர்.
*500வது இதழாக ராணிகாமிக்ஸின் சகாப்தம் பூர்த்தியாகுகையில் இந்த கதையே இடம்பெற்று சிறப்பித்தது என்பது சிறப்புத் தகவல்.
*நண்பர் ஜேம்ஸ் ஜெகனின் அன்பளிப்பாக இந்நூலை வெளியிட்டுள்ளார். அவருக்கு நம் சார்பில் நன்றிப்பூங்கொத்துக்கள்.
*தரவிறக்க சுட்டி..
https://www.mediafire.com/file/l3k4hujyicrl42w/IND-2-14-1985_%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D-%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AE%25B0%25E0%25AF%258D..pdf/file
என்றென்றும் அன்புடன் உங்கள்..ஜானி..

வெள்ளி, 20 ஜூலை, 2018

ஞாயிறு, 8 ஜூலை, 2018

மலர்_24_இதழ்_33_3.00_ தளபதி சதி_வேதாளர்_இந்திரஜால் காமிக்ஸ்_அலெக்ஸ்சாண்டர்

ஹாய் ஆல்...
இது இந்திரஜால் காமிக்ஸ் நேரம்.. இப்போது தளபதி சதியை உங்களுக்கு வழங்க முன்வந்து தானே கைபேசி வழி ஒளி வருடல் செய்து முயற்சித்திருப்பவர் திரு.அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்கள்.. இந்த முயற்சியைப் பாராட்டும் அதே நேரத்தில் ஒவ்வொரு புகைப்படத்தையும் நல்ல வெளிச்சத்தில் எடுத்தலும் நல்ல தெளிவான கேமரா வசதி கொண்ட கைபேசியை உபயோகித்தலும் சிறப்பான பலனைத் தரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது முயற்சியைப் பாராட்டலாமே... 


இந்தக் கதையை வாசிக்க:
குறிப்பு என்னதான் கைபேசி முயற்சிகள் இப்போதெல்லாம் செய்யப்பட்டு வந்தாலும் அதிலும் சிறப்பான cam scanner போன்ற ஆப்கள் கொண்டு ஸ்கான் செய்தாலும் சிரத்தை எடுத்து செய்யும் பணி வீணாகக்கூடாது என்கிற நல்ல நோக்கில் எங்காவது முறையாக ஸ்கான் செய்கிறார்கள் எனில் அந்த வசதியை முடிந்தவரை உபயோகித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.. நன்றி..
என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி மற்றும் அலெக்ஸ்சாண்டர் வாஸ்.. 


25-தானியேல்_கடவுளின் நீதி_விவிலிய சித்திரக்கதைகள்_அலெக்ஸ்சாண்டர் வாஸ்







இப்போது விற்பனையில் உள்ள லயன் காமிக்ஸ் இதழ் எரிமலைத் தீவில் பிரின்ஸ்.. சிறப்பான கதை அம்சம் கொண்ட சித்திரக்கதை.. அதனை தவற விடாதீர்கள்... 
மேற்படி தரிசனர் தானியேல் அவர்களின் சித்திரக்கதையை வாசிக்க உங்களுக்கு ஆர்வமிருக்கும்பட்சத்தில் கீழேயுள்ள சுட்டியை பயன்படுத்தி பயன்பெறுமாறு வேண்டுகிறேன்... 


அடுத்து வரவிருக்கும் சைத்தான் சாம்ராஜ்யம் பாதாள உலகின் ஜந்துக்களோடு டெக்ஸ் வில்லர் குழு மோதும் சாகசம்.. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த கதை உங்களை கவர்ந்து ஈர்க்கப்போவது உறுதி...




சனி, 7 ஜூலை, 2018

24-தோபித்து_தன்னலமற்ற அன்பு_விவிலிய கதை வரிசை...அலெக்ஸ்சாண்டர் வாஸ்

இனிய வணக்கங்கள் பிரியமானவர்களே... இம்முறை உங்களை சந்திக்கவிருப்பது தோபித்து..


இந்த கதையினை பிடிஎப் வடிவில் வாசித்து மகிழ...


வியாழன், 5 ஜூலை, 2018

மலர் 22_இதழ்_51_சூது போட்ட சூடு_II_இந்திரஜால் காமிக்ஸ்...ஜேம்ஸ் ஜெகன்


இனிய வணக்கங்கள் பிரியமானவர்களே... சென்ற முதல் பாக பதிவிற்கு அட்டை, உள் அட்டை இன்ன பிற விபரங்கள் தேவை.. அதன் தொடர்ச்சியாக இரண்டாம்பாகமும் வெளியிடப்பட்டுள்ளது.. இந்திரஜாலின் மாய விளக்கு குறியீட்டுடன் வந்த புத்தகங்கள் நல்ல மொழி நடையில் அமைக்கப்பட்டிருக்கும். பிற்காலத்தில் வந்தவற்றை விட சிறப்பானதாகவே இருக்கும்.. இந்த கதையின் முதல் பதிப்பு வெளியானபோது பொறாமைக்கண் துராத்மா என்கிற பெயர் சூட்டப்பட்டிருந்ததாக திரு.அலெக்சாண்டர் வாஸ் , திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்த நூலை தொடர்ச்சி தவறாமல் பாதுகாத்து நமக்கு வாசிக்க கிடைக்க செய்துள்ள நண்பர் ஜேம்ஸ் ஜெகன் அவர்களுக்கு நன்றி...
இந்த நூலை பிடிஎப் வடிவில் பெற...

http://www.mediafire.com/file/wp9arjxc3q6o7qf/IND_22-51-Soothu_Potta_Soodu_Part_II.pdf/file
வழக்கம்போல உங்கள் நன்றிகளை சம்பந்தப்பட்டோருக்கு சமர்ப்பிக்கிறேன். என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி...