புதன், 23 ஆகஸ்ட், 2023

யார் இந்த டயபாலிக்? _வகம் காமிக்ஸ்_ஆகஸ்ட் வெளியீடு

 

வணக்கம் அன்பு காமிக்ஸ் நெஞ்சங்களே.. இது வகம் காமிக்ஸின் 14 வது வெளியீடு. யார் இந்த டயபாலிக்? இந்த கேள்விக்கான விடையை தன் நீரோடை போன்ற மொழிபெயர்ப்பில் திரு. புகழ் நமக்கு இத்தாலியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்து சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். அதனை எடிட்டர் கலீல் அழகான காம்பாக்ட் அளவில் கொடுத்து அசத்தி இருக்கிறார். 

விலை ரூபாய்: 150/- சித்திரக்கதை வாசகர்கள் தவிர்த்துக் கொள்ளவே முடியாத நூல் இது என்பதால் கண்டிப்பாக அதிரிபுதிரி வெற்றி உறுதி. உங்கள் பிரதிக்கு முந்திக் கொள்ளுங்கள்.. 

இன்ஸ்பெக்டர் ஜிங்கோவும் டயபாலிக்கும் கதைக்குள் புகுந்தாலே அதிரடி சரவெடிதான். இந்த வகம் காமிக்ஸின் வழியே நம்மிடம் கதை டயபாலிக்கின் வாழ்க்கையின் துவக்கத்தை விலாவாரியாக புரிந்து கொள்ள உதவுகிறது. இதற்குப் பின் வரும் அத்தனை அமர்க்களங்களையும் நமது டயபாலிக் ஏன் ஈவு இரக்கமே காட்டாமல் செய்து வருகிறான் என்பதனை அறிந்து கொள்வதற்கான அடிப்படை இந்த கதையில் இருந்தே துவங்குகிறது.. மிகச்சரியாக அதன் ஆரம்பத்தை நமக்கு உணர்த்தும் நூலை தேடிப் பிடித்து வாங்கி பதிப்பித்திருக்கும் வகம் காமிக்ஸ் சிறப்பான பதிப்பகம்தான் என்றால் மிகையாகாது. 


இந்த சித்திரக்கதையை வாங்க: +91 98946 92768

     வகம் காமிக்ஸ் சொந்த வலைப்பூ வைத்து நடத்தி வருவதால் மேலதிக விவரங்களைப் பெற: 


https://vagamcomics.blogspot.com/2023/08/blog-post.html

புதன், 16 ஆகஸ்ட், 2023

பரங்கா பள்ளத்தாக்கு_ரங்லீ காமிக்ஸ்

 இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். 

இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" 
ரங்லீ காமிக்ஸ் 100/- விலையில் வெளியிட்டுள்ள ஆகஸ்ட் பதிப்பு இந்த பரங்கா பள்ளத்தாக்கு.. என் வலைப்பூ ரிவ்யூவுக்கு இலவசமாக ஆரம்பம் முதலே கொடுத்துவரும் தயாள சிந்தனையுள்ளம் கொண்டவர் திரு.ஸ்ரீராம். அவருக்கு குழுவின் சார்பில் நன்றிகள். வழக்கமான ரங்லீ பெரிய சைஸ் பக்கங்கள் நம்மைக் கவர்ந்து இழுக்கின்றன.. மொழிபெயர்ப்பில் திரு.கதிரவன் களமிறங்க இளங்குமரன் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இது மொத்தம் 36 பக்கங்கள் கொண்ட கதை. ஹாலிவுட் கதைகள் வரிசையில் சிறப்பாக வெளியாகியிருக்கும் இந்த இதழ் வரிசை எண் 31  என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிரடி வெற்றித் திரைக்காவியம்தான் இந்த காப்பர் கேன்யான் திரைப்படம். 

இப்போது காமிக்ஸ் வடிவில் உங்கள் கரங்களில் தவழ வந்திருக்கிறது. @⁨Cm Ganesh Kv⁩ அவரது எண்ணுக்கோ அல்லது ஆன்லைன் விற்பனை தளம் https: //ocomics.com மூலமாகவோ தாங்கள் இந்நூலைப் பெறலாம். அல்லது எனக்கொரு கால் அடிங்க.. உடன் உங்களை எடிட்டர் குழுவில் யாரேனும் தொடர்பு கொள்ள வகை செய்கிறேன். நன்றி..

இதழில் வெளியாகியுள்ள விளம்பரம்..




ஸ்டாக் விலைப்பட்டியல்


சாம்பிள் பக்கங்கள்

புத்தகத்துடன் செல்பி ஒன்று 
தொடர்புடைய இடுகைகள்.. 
காப்பர் கேன்யான் திரைப்பட ட்ரெய்லர்:     



செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

LC 437_பனிவனப் பிரியா விடை

 வணக்கங்கள் வாசக வாசகியரே..


லயன் காமிக்ஸின் 437 வது இதழாக மலர்ந்துள்ளது இந்த 120/- ரூபாய் விலையிலான பனிவனப் பிரியா விடை.

மொத்த பக்கங்கள் 52

சைஸ் ரெகுலர் ட்ரென்ட் சைஸ்.

ரொடால்ப் கதைக்கு லியோ வசனமியற்றியுள்ளார்..

கதை விவரம்:

தனக்கொரு மகன் பிறந்தான் என்ற அறிவிப்பு தந்த  இன்பத்துடன் ஒரு சிறுவனையும் அவன் தாயையும் பாதுகாப்பாக இட்டுச் செல்லும் பணி ட்ரென்டுடையது. அதில் முட்டுக்கட்டை போடும் கணவனை எவ்வாறு எதிர்கொள்கிறார் ட்ரென்ட்.. இறுதி விடை கொடுத்தாலும் இன்னும் ஒருமுறை பழகிப்பார்க்க நினைக்க வைக்கும் மேஜிக் இந்த நாயகர் ட்ரென்ட் வசமுள்ளது.. 🙏🏻

சென்று வாரும் கனடாதேசப் போலீஸ் நண்பரே.. பிரியாவிடை தருகிறோம்..

இந்தத் தொடரில் இதுவரை வந்துள்ள காமிக்ஸ்கள் 



என்றென்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி 

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

050_ஆண்டவராகிய இயேசுவே வாரும்_விவிலிய சித்திரக்கதை வரிசை

இனிய வணக்கங்கள் இனியவர்களே.. இறைவன் இயேசுவின் நல்லாசிகள் உங்களையும் உங்கள் குடும்பம், சுற்றம் அனைவருக்கும் பனி போல் இறங்கி குளிரவிக்க வேண்டிக் கொள்கிறேன்.. 

இந்த விவிலிய சித்திரக்கதை வரிசையின் ஐம்பது புத்தகங்களும் ஐம்பது நிஜ வாழ்வின் சம்பவங்களாக விவிலியம் எடுத்துரைத்திருப்பதை சித்திர வடிவில் பேசுகிறது. விவிலியம், கிறிஸ்துவின் வாழ்வையும் அவரது பாடுகளையும் இறைமகன் எப்படி மனு உருக் கொண்டு பூமி மாந்தருக்காக மனமிரங்கி புவியில் அவர்களுடைய பாடுகளை அவர் தம் மீது ஏற்றுக் கொண்டு சிலுவையில் அறையுண்டு மரித்தார் என்பதையும் மீண்டும் சர்வ வல்லவரின் அன்பு மைந்தனாம் அவர் உயிர்த்தெழுந்து விண்ணக வாழ்வின் சிறப்புகளை உலகுக்கு அறிவித்து இன்றளவும் தான் அன்பு கூர்ந்த மக்களுக்குப் பணிவிடை செய்து வருகிறார் என்பதனையும் இந்த விவிலிய சித்திரக்கதைகள் வழியே தெரிந்து கொள்ள முடியும். இந்த டிஜிட்டல் வடிவிற்கான முயற்சியில் என் உறுதுணையாக செயல்பட்ட திரு. சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களையும்


 கிடைப்பதற்கு அரிய புத்தகங்களை தேனியில் இருந்து தேனீயாகத் திரிந்து நமக்காக இந்த ஐம்பது முத்துக்களைக் கொண்ட சரத்தினைத் தொடுத்த என்ஜினீயர் திரு. அலெக்சாண்டர் வாஸ்   அவர்களையும் இந்த மகிழ்வான பொழுதில் நன்றியுடன் நினைக்கிறேன்.. 


அவர்கள் எல்லா வளமும் பெற்று நீடு வாழ இறையருள் உதவட்டும்.. இந்த தொடர் முயற்சியினைப் பாராட்டும் விதமாக தங்கள் பின்னூட்டப் பதிவுகளினாலும், பகிர்வுகளாலும் ஒரு அழகான பாதை அமைத்துத் தந்த அருமை வாசக வாசகிகளான உங்களையும் இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்.. 












பிடிஎப் தரவிறக்க: 
இவை இணையம் எட்டுவது இதுவே முதன்முறை.. தொடர்ந்து எங்கேயும், எப்போதும் கிடைக்கும் விதத்தில் தங்கள் வாட்ஸ் அப், டெலிகிராம் எங்கும் பதியலாம். நன்றி.  
இதன் தற்போதைய வண்ணப் பதிப்பு விரைவில் பதிவிட முயற்சி செய்கிறேன்.. 

என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி..