ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

காணாமல் போன விஞ்ஞானிகள்_மைக்கேல் சான்ஸ் தமிழில் முதன்முறையாக...


 
தொடரும்.. 

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.. இம்மாத வகம், லயன் மற்றும் ரங்க்லீ சித்திரக்கதைகள் அனைத்தும் வாசித்து விட்டீர்களா? வரும் தீபாவளி திருவிழாவைக் கொண்டாடும் விதமாக நிறைய தீபாவளி மலர்கள் வருகின்றன.. சித்திரக்கதை உலகிலும் லயன் காமிக்ஸ் மற்றும் வகம் காமிக்ஸ் தங்களது சித்திர தீபாவளி விருந்து படைக்க தயாராகிக்கொண்டிருக்கின்றன இரண்டு மலர்களையும் வாரி அணைத்து வரவேற்பீர்கள் என நம்புகிறேன்.. நமது நாயகன் மைக்கேல் சான்ஸ் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார்.. சிறு சாகசம் ஒன்றை அவர் நிகழ்த்துவதை அடுத்தடுத்த பதிவுகளில் கண்டு மகிழ்வோம்.. இப்போது தீபாவளி மலர்களின் அட்டைகளைக் கண்டு களியுங்கள்.. 

வகம் காமிக்ஸ் தீபாவளி மலர்: 

வகம் காமிக்ஸ் மொத்த இதழ்களை வாங்க லிங்க் இதோ: 


அக்டோபர் மாதத்திய லயன் இதழ்கள்: 


லயன் இதழ்களைப் பெற: 
https://lion-muthucomics.com/?option=com_comics&view=comics&Itemid=83
நன்றிகள் தங்களுக்கு வரவுக்கும் வாசிப்புக்கும்.. 
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி 



 

வியாழன், 5 செப்டம்பர், 2024

வஞ்சத்திற்கொரு வரலாறு _வ.வெ.கிருஷ்ணா


அருமையான ஆக்சன் த்ரில்லர்


ஒரு செவ்விந்திய தலைவன் ஒரு சென்டரை கொல்ல முயற்சி செய்து மாட்டிக்கொள்கிறான். அவனது நண்பர் ஸாகோர் உள்ளே வருகிறார்.


அவன் ஏன் கொலை முயற்சி செய்தான் கடைசியில் அவன் வெற்றி பெற்றானா ஸாகோர் காப்பாற்றினாரா என்பதை அதிரடி கலந்து சொல்லியுள்ளார்கள்


இக்கதை நமது தலைக்கும் பொருந்தி போகும் ஒரு வித்தியாசம் ஸாகோர் mgr மாதிரி அடி. வாங்கி ரத்தம் சிந்தி ஒரு சாதாரண ஹீரோ என்பதை நிரூபிக்கிறார் .. தலை இருந்திருந்தால் ஒரு கும்மா குத்து தான்


ஏன் கொலை செய்ய முயற்சிக்கிறான் என்பதை முடிந்தவரை சொல்லாமல் கொண்டு சென்றது நமது ஆர்வத்தை தூண்டியது


ஆர்ட் ஒர்க்கும் மிக நன்றாக இருந்தது. 


பாவம் ஆனால் ஏன் நடந்தே காட்டினுள் போகிறார் குதிரை வைத்துக்கொள்வதில்லை கடன் தான் வாங்குகிறார் பாவம் குண்டப்பர்


அடுத்து முதல் பாக முடிவில் இருந்த பஞ்ச் 


வின்ட்டர் ஸ்நேகின் நோக்கம் தான் என்ன ? 


பதிலாக


வின்ட்டர் ஸ்நேக் பழிவாங்க துடிக்கும் காரணம் தான் என்ன?


என்பது சரியாக இருக்குமோ?

 

புதன், 4 செப்டம்பர், 2024

மங்களமாய் மரணம்_ரூபின்_AKK Raja

 


ரூபின் துப்பறியும் ஒரு serial killer சாகஸம்... இடையில் ரூபினிற்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் நடத்தும் ஜோடிப் பொருத்த சாகஸம்...


Serial Killer போலீஸிடம் மாட்டினானா..!?


ரூபின் திருமண பந்தத்தில் மாட்டினாளா...!?


விடைகள் 49வது பக்கத்தில்...


சித்திரங்கள் படு அழகு... கலரிங் பட்டையை கிளப்புகிறது...


இது ஒரு மர்டர் த்ரில்லர்... நகைச்சுவை சற்றே குறைவு... சஸ்பென்ஸை கடைசி வர நகற்றிய பாணி அழகு... 


9/10