வியாழன், 19 ஜனவரி, 2012


பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் – டிப்ஸ்
ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கூறுகளைப் பார்க்கலாம்.
1. எப்போதும் ஒரே பேக் கிரவுண்டினை ஸ்லைட்களுக்குப் பயன்படுத்தவும். பிரசன்டேஷன் புரோகிராமுடன் ரெடியாகப் பல டிசைன் டெம்ப்ளேட்கள் கிடைக் கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பிரசன்டேஷன் முழுவதும் அதனையே பயன்படுத்தவும்.
2. கலர்களைப் பயன்படுத்துகையில் ஒன்றுக் கொன்று எடுத்துக் காட்டும் வகையில் உள்ளதாக இருக்க வேண்டும். லைட் கலரில் எழுத்துகள் இருந்தால் பின்னணி சற்று டார்க்காக இருக்க வேண்டும். இதனை எப்படி அமைக்க முடியும் என்ற திண்டாட்டத்தில் இருந்தால், டிசைன் டெம்ப்ளேட்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு செயல்படவும்.
 
3. பவர்பாய்ண்ட் என்பது காட்சியை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைத் தரும் ஒரு மீடியமாகும். எனவே படங்களை இணைத்து ஸ்லைடுகளை அமைப்பது பிரசன்டேஷனை நன்றாக எடுத்துக் காட்டும். ஒரு ஸ்லைடில் ஒரு நல்ல படம் அல்லது கிராபிக் பயன்படுத்தவும். ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் நாம் சொல்ல வந்ததைத் திசை திருப்பும். மேலும் பயன்படுத்தப்படும் படங்கள், எடுத்துச் சொல்லப்படும் கருத்து கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் படங்கள் இதனைப் பார்ப்பவர்கள் நன்றாகப் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் போதுமான அளவில் இருக்க வேண்டும். மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கக் கூடாது.
4. நாம் நம் கருத்துகளைக் கூற ஸ்லைட் ÷ஷா தயாரித்து வழங்குகிறோம். இது பார்ப்பவர்களுக்கான கண் பார்வை சோதனையாக இருக்கக் கூடாது. ஸ்லைடில் பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் அளவு குறைந்தது 36 பாய்ண்ட் என்ற அளவில் இருக்க வேண்டும். பின் ஸ்லைட் அளவைப் பொறுத்து இதனை அதிகரிக்கலாம்.
5. ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட் ஐந்து வரிகளே அதிகம் இருக்க வேண்டும். சிறிய சொல் தொடர்களையும், புல்லட் லிஸ்ட்களயும் பயன்படுத்தவும்.
 
6. ஸ்லைடுகளில் உள்ள சொற்களை, வாக்கியங்களை மற்றவர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டாம். ஸ்லைடு களில் உள்ளதைக் காட்டிலும் அதிக விபரங்களை நீங்கள் தருவீர்கள் என்று, காட்சியைக் காண்பவர்கள் எதிர்பார்க்க வேண்டும்.
 
7. டெக்ஸ்ட் வரிகளில் எந்த தவறும் இருக்கக் கூடாது. ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப் பிழைகளை முன்கூட்டியே பார்த்து நீக்கிவிடவும். இதில் பிழைகள் இருந்தால் பார்ப்பவர்களின் கவனம், சொல்லவந்ததிலிருந்து சிதறும்.
8. உங்கள் பேச்சைக் கேட்பவர்களுடன் நேரடியாகப் பார்த்துப் பேசவும். ஸ்லைடுகளைப் பார்த்து திரும்பி நின்று பேசவே கூடாது. உங்கள் குரல் உரக்க இருக்க வேண்டும். குரல் ஒலி குறைவாக இருந்தால், கேட்பவர்களின் கவனம் சிதற வாய்ப்பு உண்டு. ஸ்லைடுகளை முதலில் தனியாக ஒரு முறை போட்டு பார்த்துக் கொள்ளவும். என்ன பேச வேண்டும் என்பதனையும் முதலில் ஒத்திகை பார்த்துக் கொள்ளவும்.
  (thanks to Dinamalar.com)

2 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு. எழுத்துகள் தான் சிறிய சைஸில் இருக்கிறது.அந்த ஒரு குறை தான்.

    பதிலளிநீக்கு
  2. அடுத்த முறை சரி செய்கிறேன் குருவே

    பதிலளிநீக்கு