வியாழன், 19 ஏப்ரல், 2012

ரிப் கிர்பி தோன்றும் "கன்னி தீவில் ஒரு காரிகை"



காமிக்ஸ் உலக ரசிக பட்டாளங்களுக்கு என் இனிய வணக்கங்கள் மற்றும் வந்தனங்கள் !!
கன்னி தீவில் ஒரு காரிகையுடன் இம்முறை நான் எனது மனதுக்கு பிடித்த சில  இடங்களை பற்றி கோடிட்டு காட்ட வந்துள்ளேன்!
மிக மிக அருமையான ஆரம்பம்!
நமக்கு எப்பவுமே நார்தா, டயானா போல சில பாத்திரங்கள் எப்பவுமே மறக்க முடியாத அனுபவங்களை தந்த பெண் பால் கதா பாத்திரங்களை எப்பவுமே வரவேற்றுதான் பழக்கம்! 
இதிலும் அப்படியே நம் கதை நாயகர் ரிப் கிர்பி தனது அன்பு காதலி ஹனியுடன் அறிமுகமாகிறார். அவளது தவறான முடிவு காரணமாக ஒரு சிக்கலில் மாட்ட நேரிட்டு பின் ரிப் உதவியுடன் மீண்டு வருகிறாள்.
(பெண்கள்!!!) 
அவ்வளோதான் கதை என்று நீங்கள் நினைத்தால் அங்கேதான் மிஸ் பண்றீங்க!
நல்லாதானே போயிட்டு இருக்கு என்னும் நிலையில் சில சோதனைகள் வருகையில்தான் பல சாதனைகள் சாத்தியம் ஆகும் அல்லவா!
இக் கதையில் அதிரடி நாயகனாக நமது நண்பர் ரிப் அவ்ளோ அழகா தெரியுரார்! 
கதை மாந்தர்கள் மோசடி பேர் வழிகள் மட்டும் அல்ல!
ஒரு காதலும் அதில் ஒரு சோகமும் இழையோடுகிறது!


 எனக்கு மிகவும் பிடித்த இடம் எது என கேட்டால் நான் மேல் இருக்கும் ஓவியத்தை தான் காட்டுவேன்!
மீதியை வெள்ளி திரையில் காண்க என்பார்களே அதுபோல லயன் காமிக்ஸின் புது வெளியீடு சாத்தானின் தூதுவன் டாக்டர் செவென் புத்தகத்தில் காண்க. விலை வெறும் பத்து ருபாய் தான் ஆனால் அவ்வளவு தரமாக நமது பிரகாஷ் பப்ளிஷர்ஸ்  வெளியிட்டுள்ளார்கள். வாங்குங்க நண்பர்களே!! காமிக்ஸ் உலகம் இப்போ புத்துணர்ச்சி கொண்டு எழுந்துள்ளது. மிக மிக உலகதரம் வாய்ந்த காமிக்ஸ் புத்தகங்கள் வெளியாகி பட்டையை கிளப்புகின்றன. வாருங்கள்! வாழ்த்துங்கள்!
வளரட்டும் காமிக்ஸ் தலைமுறை !

 இக்கதையில் முக்கியமான கதை மாந்தரை இங்கே அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன். தன் அன்பு முதலாளியை காணாமல் தவிக்கும் என் அருமை கிளியை தான் சொல்கிறேன். அதன் தவிப்பு மேலே உள்ள ஓவியத்தில் எப்படி பிரதிபலிக்கிறது பாருங்கள்!
தெளிவில்லாமல் ஓவியம் இருப்பதற்கு வருந்துகிறேன். என்ன பண்றது?
நம்ம திறமை அவ்ளோதான் அப்படியே தமிழ் காமிக்ஸ் உலகம் ப்ளாக் போய் மேய்ந்து விடுங்கள்.
நமது அருமை மிஷ்கின் அவர்களுக்கு இத்த்தருனத்தில் நன்றிகளை சொல்லி கொள்கிறேன்.குங்குமம் மற்றும் ஆனந்த விகடனில்  தனது காமிக்ஸ் காதலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் இந்த முயற்சிக்கு உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

அது வேற ஒன்னும் இல்லைங்க ரிப் எப்பவும் போலதான் இருக்கிறாரு!
எனக்குத்தான் அவருக்கு விடை கொடுக்க மனமே இல்லை. இன்னும் சில பல வருடங்கள் விடுமுறையில் போக போறாராம்!
 சென்று வாங்க ரிப், ஹனி & tesmond உங்க உலகம் என்னிக்குமே அழியாது! வாழ்க வளமுடன்!

11 கருத்துகள்:

  1. அட்டகாசம் அன்பரே.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. Cool, ப்ளாகர் டைனமிக் டெம்ப்ளேட் போட்டு கலக்கறீங்க! :) நல்லா இயல்பா பேசுற மாதிரி எழுதறீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனா ப்ளாகர் டைனமிக் டெம்ப்ளேட் - கொஞ்சம் ஸ்லோவா இருக்கு!

      நீக்கு
    2. அட ....ஆரம்பித்து விடீர்களா நண்பரே ! வாழ்த்துக்கள் . எழுத்துநடை நன்றாக உள்ளது தொடரட்டும் (ஸ்கேன் மற்றும் கணிபொறி புதியது வாங்கிவிடீர்களா? )

      நீக்கு
    3. ஸ்டாலின் சார்,

      இந்த பதிவானது ஜானி சாரின் கேமரா செல் போனை கொண்டு பிடிக்கப்பட்ட படங்களின் உதவியுடன் இடப்பட்டு இருக்கிறது. அதற்கே ஜானி அண்ணனுக்கு ஒரு ராயல் சல்யூட்.

      நீக்கு
    4. நன்றி ஜி எனக்கு அவ்ளோ கம்ப்யூட்டர் தெரியாது! இருந்தாலும் சரி பண்ணறேன்!
      ஹீ ஹீ நம்ம கிட்ட கம்ப்யூட்டர் கூட சொந்தமா இல்ல (இதை யாருக்கும் சொல்லிடாதீங்கோ )

      நீக்கு
  3. //:இந்த பதிவானது ஜானி சாரின் கேமரா செல் போனை கொண்டு பிடிக்கப்பட்ட படங்களின் உதவியுடன் இடப்பட்டு இருக்கிறது. அதற்கே ஜானி அண்ணனுக்கு ஒரு ராயல் சல்யூட்.//

    அட நம்கிட்ட ஒரு துப்பறிவாளர் ரிப்கிர்பி இருப்பதை மறந்து போய்டேன் ( செல் போன் camara கண்டுபிடிபைதான் சொல்கிறேன் )

    பதிலளிநீக்கு
  4. ஜானி

    நன்றாக உள்ளது உங்களது விமர்சனம் ....

    கலக்குங்க :)

    நாகராஜன்

    பதிலளிநீக்கு