வெள்ளி, 21 டிசம்பர், 2012

007 JAMES BOND -THE FAMOUS BRITISH AGENT!!


காமிக்ஸ் என்னும் மாபெரும் மரத்தடியில் கூடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு வளமான மன நிலையை எட்ட வந்திருக்கும் அனைத்து தோழர்களுக்கும், தோழிகளுக்கும், எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். 
 உலக மக்களின் இதய நாயகனாகிய இரகசிய ஏஜெண்டு ஜேம்ஸ் பாண்ட் குறித்து இந்த பதிவினை துவக்குகிறேன்! அவர் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்த சாகச பயணத்தில் நம்மையும் அவரோடு கூட தனது அதிரடிகளை கண்டு ரசிக்க அழைத்து சென்றமைக்கு ராயல் சல்யூட்! 

இங்கிலாந்து ராணியின் ஆட்சி நடக்கும் பிரிட்டிஷ் தேசத்தின் தலைசிறந்த உளவாளிகளில் நமது நாயகன் பெற்ற  நம்பர் 007. இவர் M -16 என்ற ராணுவத்தின் ரகசிய பிரிவின் சிறப்பான உளவாளி ஆவார். இயான் ப்ளம்மிங் என்கிற கதாசிரியரின் கைவண்ணத்தில் பறவை இயல் நிபுணர் ஒருவரின் பெயர் புகழ் பெற்ற பிரிட்டிஷ் உளவாளி ஜேம்ஸ் பாண்ட் ஆக உருமாறியது. இவர் கொலை செய்ய காரணம் தனது நாட்டு பற்றே ஆகும். தனது தாய் நாடான த கிரேட் பிரிட்டன் எப்போதெல்லாம் பிரச்சினையை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் தனதருமை உயிரையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி சில பல சாகசங்களை செய்து பிரச்சினையை தீர்த்து வைப்பார். இவரது பாஸ் M. அவரது அந்தரங்க உதவியாளர் மனிபென்னி. கீழே உள்ள படம் உங்கள் ஆச்சரியத்தை அதிகபடுத்தலாம். ஆமாம் சாகசம் என்றாலே நாயகன் ஜேம்ஸ் தானே! எனவே அவரது இந்த அட்டை படமே. புயல் படலத்துக்கு பயன்படுத்த பட்டுள்ளது. 




சரித்திரம் அறிந்த நாயகன் ஜேம்ஸ் பாண்டினைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தாலும்  அவரது தனி பெரும் குணமான துப்பறியும் தன்மை குறித்தே நான் பெரும் ஆர்வம கொள்கிறேன். மிக சிறப்பாக அனைத்து கதைகளிலும் தன் இனிய உயிரை பணயம் வைத்து துப்பறிவார். உரிய நேரத்தில் மட்டும் சாகசம் புரிந்து தனக்கிடப்பட்ட பணியை செவ்வனே முடிப்பார். அவரது தனி திறமையான காதல் மன்னன் தனது நாட்டு நலனுக்காக என்றால் அதை மிக ரசித்து செய்வார். அவரது ஒவ்வொரு கதைக்கும் ஜோடி மாறும். என்றாலும் அவர்களும் சாகசத்தில் சளைத்தவர்களில்லை! ஜேம்ஸ் போன்றே தாங்கள் சார்ந்த நாட்டுக்காக தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடினமான பணிகளையும் துச்சமென மதித்து பணியில் பல சாதனைகளை ஈட்டுவார்கள்! என்றுமே அவரவரது நாடு அவரவர்க்கு பொன்னாடுதானே? கொண்ட கொள்கையை எக்காரணம் முன்னிட்டும் விட்டு தராமல் தனது பணியே போனாலும் கவலை படாமல் நாடு! நாடு! நாடு! அதை நாடு! நாடு! என்று தேசத்தின் மீதான நமது பற்றினை அதிகரிக்க செய்யும் கதை வரிசை ஜேம்ஸ் பாண்ட் கதைகளே!   
ராணி  காமிக்ஸ், முத்து காமிக்ஸ் இரண்டிலும்
ஜேம்ஸ் பாண்ட் கதையின் ஆக்கம் மிக சிறப்பான ஒன்று. அதில் அவர் பயன்படுத்தும் அனைத்து வித சாதனங்களும் தகவல் தொடர்பு, ஆயுத படைக்கலங்கள் போன்றவையும் மிக சிறப்பாக சித்தரிக்க பட்டிருக்கும்.
ஆங்கில கதைகள் தரமானவை! படிக்க ஆங்கிலம் அதிகம் தெரிந்திருக்க வேண்டும்! (ஹி ஹி ) நாவல் வடிவங்கள் கண்ணை கட்டும் (மீண்டும் ஹி ஹி ஹி ) அதனாலும் நாங்கள் எல்லாம் ஆங்கிலத்துக்கே அலர்ஜி உண்டு பண்ணி விடுவோம் என்பதாலும் ஆங்கிலத்தில் படங்கள் பார்த்ததோடு சரி! முடிந்த நண்பர்கள் முயற்சித்து பாருங்கள்! ரசனை மிகு ஆங்கில கதையை ஆங்கில வடிவில் படிக்க நிச்சயம் நன்றாகவே மிக அருமையாகவே இருக்கும்.
ராணி காமிக்ஸில் வந்த கதைகள் அனைத்துமே அட்டகாசமாக இருக்கும். மறு பதிப்பு என்ற பெயரில் செய்த காமெடிகளை மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளாமல் விட்டு விட்டால் ஜேம்ஸ் பாண்ட் ராஜ்யமே அதிகமாக ஆக்கிரமித்திருக்கும் என நினைக்கிறேன்.! ராணி வெளியீடுகளின் தனி தன்மையான அட்டை லேமினேஷன் மிக தரமாக அமைந்து இருக்கும். என் தங்கைகளின் முதல் வேலையே அந்த லேமினேஷன் பேப்பரை கிழித்து விளையாடி என்னிடம் வாங்கி கட்டி கொள்வதுதான்! ஆமாம் அவர்களும் காமிக்ஸ் ரசிகைகளே! நாங்கள் மிக ரசித்த புத்தகம் கடல் பூதம்! ஸ்கேன் கிடைத்தால் போடுகிறேன்!    

புத்தக கண்காட்சி! க்கு சென்னை வரும் நண்பர்களுக்கு அட்வான்ஸ்  நல்வரவு! வாங்க முடிந்தால் சந்திப்போம். அப்புறம் கொஞ்சம் நண்பர்களது வலை தளங்களில் இருந்து சுட்ட ஸ்கேன் போட்டு இந்த பதிவுக்கு ஒரு கமா வைத்து விட்டு







வருகிறார் நமது மறுபதிப்பு நாயகன் கூடிய விரைவில்.. வேற வழியில்லை இதை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். நான் என்ன பண்றது நண்பர்களே! காக்கா மூக்கால கிறுக்கினாலும் அதிலும் ஒரு அழகு இருக்கிறது என்று நம்புபவன் நான்!!! ஹி! ஹி! ஹி! அதில் அதிகமாக கிடைக்காத புத்தகங்கள் இடம் பெற்று உள்ளன ஆனால் வண்ணங்கள் பல நேரம் எண்ணங்கள் போல இருப்பதில்லையே! ஆகவே பொறுத்தருள்க! 

அவர் குறித்த இந்த பதிவுகளையும் http://en.wikipedia.org/wiki/James_Bond தோழர் கிங் விஸ்வா அவர்களது பதிவினையும் நமது  நாயகனின் ப்ளாக்கினையும் ஒரு முறை அலசி ஆராய்ந்து விடுங்கள். அப்புறம் நண்பர்களே நந்தனத்தில் பதினொன்றாம் தேதி முதல் இருபத்து இரண்டாம் தேதி வரை வரும்  ஜனவரி மாதம் நடைபெற உள்ள முப்பத்து ஆறாவது புத்தகக் கண்காட்சிக்கு வந்து விடுங்கள். அதுவும் சரியாக ஆறு மணியளவில் முத்து காமிக்ஸின் மிக மிக தீவிர ரசிகர்கள் அனைவரும் சிறப்பு அழைப்பாக இதனை எடுத்து கொண்டு வந்துடுங்க. நெவெர் பிபோர் ஸ்பெஷல் என்கிற மிக பிரம்மாண்டமான புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது. இடம்: சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தின் மிக அருகில் உள்ள நந்தனம் காலேஜ்தான். வெளியூர் நண்பர்களுக்காக இந்த புகைப்பட பதிவினை சமர்பிக்கிறேன்.
அடையாளத்திற்காக முகப்பின் புகைப்படம்.இது.



நுழைவு வாசல் ஒன்று கீழே காட்டப்பட்டு உள்ளது. தேவர் சிலை அருகில் உள்ள சிக்னல் பக்கத்தில் சைதாப்பேட்டைல இருந்து வந்தால் ரைட்டு பக்கம்.

அடுத்த கேட் கீழே காட்டப்பட்டு உள்ளது இதன் வழியாக வந்தால் கொஞ்சம் எளிது.

அப்படியே உள்ள வந்தா இது போல பசுமையாக வாசல் விரியும். நேராக சென்றால்..... 

 பக்கங்களில் கோல்ப் மைதானம் இருக்கும். ரசித்து சந்தோஷமாக உள்ளே நேராக ரோட்டிலேயே போய்க்கினே இருங்க.
இந்த லெப்ட் பக்கம் ஒதுங்குங்க!




இந்த வாசல் அருகே செக்யூரிட்டி இருப்பார். கண்காட்சியை நெருங்கி விட்டீர்கள் 
அதனுள்ளே கீழே கண்ட காட்சிகள் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்களது இசை நிகழ்ச்சிக்காக (27 Dec i think) தயாராகிகொண்டு இருக்கிறது.  








 எனவே இங்கேதான் அந்த சரித்திர பிரசித்தி பெற போகிற சம்பவம் முத்து முத்தான உங்களை போன்ற வாசக இளம் உள்ளங்களை நம்பிக்கை தூண்களாக கொண்டு நடைபெற இருக்கிறது நண்பர்களே! கண்டிப்பாக வந்துடுங்க! உங்களை எதிர்பார்க்கும் காமிக்ஸ் உள்ளங்களில் ஒருவன்-உங்களில் ஒருவன்! ஜானி!

8 கருத்துகள்:

  1. //காக்கா மூக்கால கிறுக்கினாலும் அதிலும் ஒரு அழகு இருக்கிறது என்று நம்புபவன் நான்!// Punch :)

    புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடம் பற்றிய விவரங்கள் அனைவருக்கும் உபயோகப்படும்.

    நல்ல பதிவு நண்பரே.

    இப்போதான் லேசா போலீஸ் தொப்பை போட ஆரம்பிக்குது போல. பார்த்துங்க :-)

    பதிலளிநீக்கு
  2. சூப்பர். புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடம் பற்றிய விவரங்கள் பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு.
    தகவல்கள் நிறைந்த பதிவு.
    அது ஜேம்ஸ் பாண்ட் பற்றியதாக இருந்தாலும் சரி YMCA பற்றியதாக இருந்தாலும் சரி பட்டையை கிளப்பி உள்ளீர்கள்.
    ஆங்கில புத்தகங்களின் அட்டை படங்கள் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  4. அந்த Photo உங்களது, ஆனா அந்த Gun யாருது?! :D

    பதிலளிநீக்கு
  5. அண்ணே

    //இவர் M -16 என்ற ராணுவத்தின் ரகசிய பிரிவின் சிறப்பான உளவாளி ஆவார்.//

    அது M .I. 6,

    M 16 அல்ல.

    பதிலளிநீக்கு
  6. புத்தகக் கண்காட்சிக்கான visual guidance அருமை! வழி கண்டுபிடித்து வந்து சேர நிச்சயம் வெளியூர் நண்பர்களுக்குப் பேருதவியாய் இருக்கும்! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு