செவ்வாய், 22 ஜனவரி, 2013

ஒரு மாலை நேரத்து சூரிய வெளிச்சத்தில்!!!!

ஹாய் நண்பர்களே! 
               வெளியாகும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வெற்றி என்கிற மந்திரம் டெக்ஸ் கதைகளுக்கு நிச்சயமாக பொருந்தும்! இன்று புத்தக ஸ்டாலுக்கு பழைய புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு புத்தகங்கள் மிக மிக மிக குறைவாகவே வந்து இருந்தன! அதிக பட்சம் பதினைந்து முதல் முப்பது வரையிலேயே! உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள்! அப்புறம் வருந்தி ஐந்து ரூபாய் புத்தகங்களை வெளியே இருபது முதல் அய்ம்பது விலைகளில் வாங்கி வருந்த வேண்டாம். டெக்ஸ் --அடடா அதுக்குள்ளே தீர்ந்து போச்சே என்கிற அளவில் வந்ததுமே சட சடவென விற்பனையாகி கொண்டு இருக்கிறது ஐம்பது ரூபா புத்தகம் என்கிற விஷயம் கூடுதல் விற்பனையை தூண்டுகிறது! விலை குறைவிலும் புத்தகங்கள் வேண்டும் என்கிற உண்மையை இந்த நிகழ்வுகள் சுட்டி காட்டி கொண்டே இருக்கின்றன. இன்று கோவை மாநகரிலிருந்து நண்பர் திரு.குரு வந்து இருந்தார். அவருக்கு வாழ்த்துக்கள்! 





 நண்பர் திரு.சரவண குமார், தமிழக காவல் துறை அவர்கள் வந்து ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை அள்ளிக்கொண்டு சென்றார்.
அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறை உங்கள் அன்பான சேவையில்!!!

ரத்த தான வங்கி வாகனம் தயார் நிலையில், விரும்புவோர் தானம் செய்ய வசதியாக! 

 வாகனங்கள் வர நேரமாகும் நண்பர்களே! அப்புறம் வண்டி நிறுத்துவது மிக கடினமானது!
நடமாடும் லைபரரி! 

பிரதிபா கப்பலை சுற்றி பார்க்க சென்றவிடத்து!
பாரதி மீசை படும் பாடு!
வேற என்ன நண்பர்களே! நண்பர்களுக்கு கொடுக்க நண்பரின் பரிசை வழங்கி இருக்கேன்! நன்றி அந்த நண்பருக்கே சேரும்! கதை படிச்சிட்டு அப்புறமாக வரேன்! 



































கடைசியா ஒரு தகவல் சிகப்பாய் ஒரு சொப்பனம் விற்று தீர்ந்து விட்டது-விஸ்வா தகவல் கண்காட்சியில் இருந்து... நீயூ லுக் ஸ்பெசல், தங்க கல்லறை முடியும் தருவாயில் இருக்கு! என்றும் அன்புடன் உங்கள் நண்பர் ஜானி!

12 கருத்துகள்:

  1. சிகப்பாய் ஒரு சொப்பனம் கண்காட்சியில் வாங்கினீர நண்பரே ?

    பதிலளிநீக்கு
  2. நண்பரே உங்களை எப்படி நான் பார்க்காமல் சென்றேன். முதல் படத்தில் இருப்பது நான். ஆனால் இப்படி என்னை தெளிவில்லாமல் புகைப்படம் எடுத்துவிட்டீர்களே?

    பதிலளிநீக்கு
  3. நண்பரே! அரங்கிலிருந்து கிங் விஸ்வாவின் கடைசிக்கட்ட அறிக்கையின்படி அத்தனைப் புத்தகங்களும் ஒரு மணி நேரத்தில் மடமடவென காலியாகி விட்டன! நான் வாங்கியதை அண்ணன் சரவணன் பிடிங்கிட்டார்! கொரியர் நண்பருக்காக காத்திருக்கிறேன்! அனுப்பத்துவங்கி விட்டனராம்! பைக்கோ பார்ட்டி அவர்தான் நண்பா!

    பதிலளிநீக்கு
  4. வழக்கமான உங்கள் பாணியில் நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  5. // வெளியாகும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வெற்றி என்கிற மந்திரம் டெக்ஸ் கதைகளுக்கு நிச்சயமாக பொருந்தும்! //

    இக்கருத்துடன் நானும் ஒத்துப்போகிறேன் தோழரே ( ஒரு சிலவற்றை தவிர்த்து ) ;-)
    .

    பதிலளிநீக்கு
  6. கருப்பு கிழவியை மறு பதிப்பு கொண்டு வராமல் ஓயமாட்டேன் என்று இருக்கிறீர்களா தோழரே ;-)
    .

    பதிலளிநீக்கு
  7. ஹீ ஹீ ஹீ ஆமாம் நண்பா! ஆவியுலக ஆதரவு தாரீர்! புனித சாத்தானின் கட்சியில் சேருவீர்! நல்ல பிரியாணி சாப்பாடு அவரது கரத்தால் வழங்கப்படும் (அப்படின்னு என்கிட்டே மட்டும் சொன்னாருங்கோவ்!) ஹீ ஹீ ஹீ

    பதிலளிநீக்கு