செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மூடுபனியில் ஒரு திகில்!


வணக்கம் நண்பர்களே!
மே தின நல்வாழ்த்துக்கள் தங்களின் உழைக்கும் கரங்களுக்கு உரித்தாகுக! எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? அனைவரும் நலமாக வாழ இறையருளை வணங்குகிறேன்! நாம வாழும் இந்த காலக்கட்டத்தில் நாகரிகம் என்கிற பெயரில் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளோம். ஒரு சுவிட்சை தட்டினால் கண்டம் விட்டு கண்டத்திற்கு ஏவுகணைகள் பாய்கின்றன. சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதனோ உணவுக்கும், உறைவிடம் நாடியும், பலகாலம் அலைந்து திரியும் ஒரு நாடோடி வாழ்வு வாழ்ந்தான். ஆதி மனிதன் நெருப்பைக் கண்டு அஞ்சினான். பின் அதனை வைத்தே உணவு சமைத்தான். அதற்கு முன்னர் அவன் வாழ்ந்த வாழ்க்கையானது காட்டு மிராண்டித் தனமான ஒரு வாழ்க்கைமுறை. மிருகங்களை வேட்டையாடி பச்சையாக புசித்து வாழ்ந்த ஒரு கீழ் நிலை வாழ்வு. பின்பு சக்கரம் கண்டறிந்தான். நாகரிகம் வளர்ந்தது. வளர்ந்த நாகரிக உலகில் அதன் வேகம் தாங்காமல் அல்லது தாக்குப் பிடிக்க முடியாமல், மன நிலையில் பிறழ்ன்று, பின்னர் சைக்கோ நிலையை அடைந்து, சக மனித இனத்தையே காவு வாங்கும் அரிதான நபர்களும் இப்போது மானுடருள் அடக்கம். அதில் சில நரமாமிசம் தின்னும் மிருகங்களும் உள்ளனர். வரலாறு திரும்பிய ஒரு நிலை அல்லவா இது?
நிற்க! காமிக்ஸ் உலகின் மன்னன் டெக்ஸ் வில்லரின் அறுநூறாவது கதையாக வெளியாகி வெளிநாட்டில் சக்கை போடு போட்டுக் கொண்டுள்ளது. அந்தக் கதைதான் தி டெமன்ஸ் ஆப் நார்த்.



The 600th Great Comics of TEX VILLER

Hollywood Hero John Wayne film Sentieri Selvaggi! எவ்வளவு ஒற்றுமைகள் இருவரது ஸ்டில் களில் உள்ளதென்று  கவனியுங்கள் !!


100-Super TEX, 200,300,400,500,600............the history continues....




 இதில் அரிய வகையான சூழலும், அதில் வாழும்  பழங்குடி மக்களும் மிக அருமையாகக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளனர்! அமைதியான மக்களின் மத்தியில் அவர்களது பாதுகாவலுக்காக கனடா அரசாங்கம் நிறுவிய கோட்டைதான் நம்பிக்கைக் கோட்டை (FORT HOPE) அதனை யாரோ முற்றுகையிட்டு அதில் இருந்த சிலரைக் கொன்றுவிட்டு மற்றோரை பிடித்துச் சென்று விடுகின்றனர். இந்த தகவல் ஒரு செவ்விந்தியன் மூலமாக விலங்குகளை வேட்டையாடும் வேட்டையர்களுக்கு தெரியவருகிறது. நேரிலும் சென்று உறுதிபடுத்திக் கொண்டபின்னர் தங்களது அருகாமையில் உள்ள ஜான் கோட்டைக்குத் தகவல் அளிக்கின்றனர். கொல்லப்பட்ட நபர்கள் நன்றாக வறுக்கப்பட்ட நிலையில் உண்ணப்பட்டுள்ளனர் எனவே இது விலங்குகளின் கைங்கரியம் அல்ல. என்பதையும் உணர்த்துகின்றனர்.
இதனிடையே நவஜோ கிராம மாந்த்ரீகன் பேரபாயம் மூடு பனியின் இருளில் இருந்து புறப்பட்டு அழிவை ஏற்படுத்துவதை தனது கனவில் காண்கிறார்.
அவர் டெக்ஸ் குழுவினரை உஷார்ப்படுத்துகிறார். அவ்வேளையில் ஜான் கோட்டையில் இருந்து தகவல் வந்து சேர்கிறது. டெக்ஸ், கார்சன், கிட் மற்றும் நவஜோ வீரர் டைகர் ஆகியோருடன் கனடா புறப்படுகின்றனர். மேஜர் டிக்கன்ஸ் விவரம் தெரிவிக்கிறார். தன் படையினரை உடன் அனுப்பி வைப்பதாகவும் இந்த புதிரை விடுவிக்கும்படியும் கூறவும் டெக்ஸ் வழக்கம்போல் தட்டாது இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறார். அந்த பகுதியில் வசிக்கும் எல்லோ நைப், டோக்ரிப் மற்றும் சில பழங்குடிகள் இத்தீச்செயலை செய்திருக்கவியலாது என்று முடிவு செய்கின்றனர். அந்த கோட்டையை தாண்டி உள்ள வனம், அதைத் தாண்டியுள்ள மூடு பனி பூர்த்திய தூந்திரப் பிரதேச பகுதிகள் இன்னும் கண்டறியப்படாத பகுதிகள் என்று அறிகிறார்கள். செல்லும் பாதையும் மிக சவாலானதாக சதுப்புப் புதைகுழிகள் நிறைந்த வண்ணம் இருக்க இந்த குழு மிக சிரமப்பட்டு தங்கள் பயணத்தை தொடரும் வழியில் டோக்ரிப் பழங்குடியினரால் தாக்கப்பட்டு தப்பிக்கிறார்கள்.




மடக்கப்பட்ட பழங்குடியினர் தங்கள் தற்காப்புக்காக தாக்கியதாக சொல்ல டெக்ஸ் விடுவிக்கிறார். பின்னர் எல்லோ நைப் பழங்குடியினரின் குடியிருப்புக்கு சென்று தாக்குதல் நிகழ்ந்த விதத்தையும் நேரத்தையும் தெரிந்துகொண்டு முழு நிலவு வரும்போதே  தாக்குதல் நிகழ்கிறது என்ற முடிவுக்கு வருகின்றனர். அந்த முடிவுக்கு ஏற்றவகையில் அருகாமையில் உள்ள பழங்குடியினரின் கிராமம் முழு நிலவில் தாக்கப் பட்டுள்ளதை கிட்டும், டைகரும்  உறுதி செய்கின்றனர். அவ்வாறு சென்று திரும்பும்போது அந்த காட்டு மிராண்டிகளால் தாக்கப் படுகின்றனர். டெக்ஸ் தன் நண்பர்களுடன் சென்று அந்த தாக்குதலை முறியடிக்கிறார். பின்னர் கோட்டையை சரி செய்து அங்கே எல்லோ நைப் பழங்குடியினரை மிக கடினமான போராட்டத்துக்கு இடையில் இடமாற்றம் செய்கின்றனர். அந்த ஓநாய் மனிதர்கள் பெரும்பாலும் மூடுபனியின் இருளில் கடும் இரவில் மட்டுமே தாக்குதல் நடத்துகிறார்கள். 










அதுவே எதிரிகளுக்கு அவர்கள் அழியாத் தன்மை கொண்டவர்களென எண்ண வைக்கிறது. ஆனால் டெக்ஸ் குழுவினரின் இடைவிடாத போராட்ட முடிவில் அவர்கள் வெறும் மனிதர்கள்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும் டோக்ரிப் பழங்குடியினர் கோட்டை மீது தாக்குதல் நடத்தும் ஓநாய் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி அடிக்கிறார்கள். ஆனால் பின் வாங்கும்போதும் பலரைக் கடத்திக் கொண்டு செல்கிறார்கள் அந்த தீயவர்கள் கூட்டம். டெக்ஸ் குழுவினர் அவர்களை மீட்டு வர எமனின் எல்லைக்கே சென்று அவர்களை அழித்து மீட்டு வருவதுதான் கதை. மிக பயங்கர எண்ணங்களையும் விதைத்து செல்லும் இக்கதையில் காமெடிக்கு ஒரு மானுடவியல் வல்லுநர் பயன்பட்டுள்ளார். அவர் அந்த பழங்குடியினரை அழிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவர்களின் பழக்க வழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். அவர்களை அழிய விடக் கூடாது என்கிற எண்ணத்துடன் தன் வசனக் குவியலால் அவ்வப்போது சிரிப்பு வர வைக்கிறார். மொத்தத்தில் அறுநூறாவது கதையும் மிக அற்புதமாக செதுக்கப் பட்டுள்ளது.
அதிரடிகள் நிறைந்த இந்த கதை விரைவில் நமது லயன் காமிக்ஸில் வெளியாகும். வண்ணத்தில் எப்படி இருக்கு என்று ரசித்து விட்டு சிங்கத்தின் சிறு வலையில் ஒரு ஆதரவுக் கரம் நீட்டி விடுங்கள்! அவ்ளோதான்! விரைவில் வருகிறேன்! 

21 கருத்துகள்:

  1. Johnny,

    இந்த அட்டைப்படம் உண்மையில் ஹாலிவுட் ஹீரோ ஜான் வெய்ன் அவர்களுக்கு Tribute செய்யும் விதமாக வரையப்பட்டு வெளிவந்தது.

    பதிலளிநீக்கு
  2. கலரில் அட்டகாசமா இருக்கு. 600 வது கதையா? அப்ப நமக்கு இன்னும் பல வருடங்களுக்கு டெக்ஸ் கதை இருக்கு. கலரில் போட்டா நல்லாத்தான் இருக்கும் ஆனா நம்ம எடி ஒரேபிடியா இருக்காரே

    பதிலளிநீக்கு
  3. நமது ஆசிரியர் +6 போல டெக்ஸ் கதைகளுக்கு என தனி புத்தகமா மாதம்தோறும் Rs. 50 விலையில் வெளியிடலாம் (கருப்பு வெள்ளை). கலரில் வரும்பொழுது லயன் காமிக்ஸ் மூலம் Rs. 100 விலையில் வெளியிடலாம். பார்ப்போம் நண்பரே, ஆசிரியர் என்ன செய்கிறார் என்று...

    பதிலளிநீக்கு
  4. செம கதைங்க.அதுவும் கடைசில ஒரு கட்டத்துல அந்த ஓநாய் மனிதர்கள் சூழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு இக்கட்டான நிலை. எனக்கு அப்படியே திக் திக் ன்னு ஆயிருச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் திகிலோடதான் ஜி படிச்சேன்! கதை சூப்பர்! வருகைக்கு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  5. அருமையான கதை & பதிவு ஜானி.

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் பதிவு சைமன்ஜி!

    இதெல்லாம் எப்பத்தான் லயனில் வருமோன்னு ஒரு ஏக்கம் இழையோடுகிறது எனக்குள்!

    பதிலளிநீக்கு
  7. Welcome Periyar & Vijay! Lion books have some limits! but vijayan sir gives his best! we are waiting!

    பதிலளிநீக்கு
  8. ஆமா டெக்ஸ் ஏன் இப்படி மூஞ்சிய வச்சுக்கிட்டு வர்றாரு?

    The 13th Warrior ன்னு ஒரு படம் வந்தது. கிட்டத்தட்ட இதே கதைதான். பாருங்க

    http://en.wikipedia.org/wiki/The_13th_Warrior

    பதிலளிநீக்கு
  9. Johnny,

    The Scene / Poster of John Wayne Film belongs to "The Serachers" Which sits at the very top in the Top 10 Western fims of all time.

    You've put a dubbed version of the film.

    google it as the searchers and you will get the english version of the poster.

    பதிலளிநீக்கு
  10. welcome matrup parvai avargale! varugaikum pinootathirkum nanri!

    பதிலளிநீக்கு
  11. King--ungal arpanippu viyakka vaikirathu! thanks for the details which you share here! welcome!

    பதிலளிநீக்கு
  12. Hello Sir, Your blog looks very insteresting. I am huge fan of Tex willer comics. can u share e-comics of tex willer if u have any ?

    பதிலளிநீக்கு