சனி, 1 மார்ச், 2014

அணைக்கட்டு கொலைகள்....சித்ரா மணாளனின் வைர வரிகளில்!!!!

வணக்கங்கள்!!!
தங்கள் வரவு நல்வரவாகட்டும்!
ராணி காமிக்ஸின் கதைகளும், அவற்றின் பின்னிணைப்புகளும் மிகவும் சிறப்பாக அமைந்தது ஆரம்பக் கட்டத்தில்! அதிலும் அணைக்கட்டுக் கொலைகள், தொடர் கொலை, எஸ்டேட் பேய், விதவை ராணி, மாந்திரீக சக்கரம் போன்ற தொடர்கள் மிகவும் கவரும் வகையில் எழுதப் பட்டிருந்தது. சித்ரா மணாளன் அவர்களின் கதைகளில் ஒரு அட்டகாசமான கதை இந்த அணைக்கட்டுக் கொலைகள் தொடர் ஆகும்! இதனை தொகுக்கும் எண்ணம் தோன்றி அதனை இன்று செயல்படுத்த முடிந்ததற்குக் காரணம் தங்கள் அன்பும் காமிக்ஸ் மீதான தங்களது அளவு கடந்த ஆழமான நேசமும்தான் என்றால் மிகையாகாது! இந்த தொகுப்பை தொகுக்க
மர்ம முகமூடி, மந்திரத்தீவு, சாட்டையடி வீரன், மிஸ்டர் ஏபிசி, மின்னல் வீரன், அழகிய ஆபத்து, போன்ற அரிய புத்தகங்களை கொடுத்து உதவிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகளை வெறும் வார்த்தைகளால் தெரிவிக்க இயலாது என்பதே உண்மை! நன்றிகள் பல!!! 15.10.1984 முதல் 01.05.1985 வரை எட்டு மாதங்களில் ராணி காமிக்ஸ் ரசிகர்களை அலற வைத்த படுபயங்கரமான பேய்க் கதை இது.!
 கதை? அந்த அணைக்கட்டின் பணிகளை மேற்பார்வையிட வரும் மேனேஜர்கள் அடுத்தடுத்து கொலையாகின்றனர்! காரணம் அப்பகுதியில் உலவி வரும் பேய்க் கூட்டம் என மக்கள் அஞ்சுகின்றனர்! இந்நிலையில் அங்கே பணி மாறுதலில் வரும் மேனேஜர் ராஜா எப்படி பேய்க் கும்பலை தனியொருவனாக சமாளித்து வெற்றி காண்கிறான் என்பதை வேள் அவர்களது மிரட்டல் ஓவியத்துடன் அழகாக தொடுத்து தொடராக பரிணமிக்க வைத்துள்ளனர்!


















































































அப்புறம் நம்ம ராஜ் குமார் நண்பர் ஸ்ரீதர் சொக்கப்பா அவர்களுடன் ஒரு காமிக்ஸ் சந்திப்பு நிகழ்த்தி திரும்பியதுதான் தலைப்பு செய்தி!!! ஹி ஹி ஹி கிசு கிசு சொல்லாட்டி எப்புடி???


வாழ்க வளமுடன்!! என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!!!
என்னங்க தரவிறக்க லிங்க் காணாமா???
சரி சரி இந்தா புடிங்க!!!

                             அணைக்கட்டுக் கொலைகள் தொகுப்பு!!!
CBR:    Anaik Kattuk Kolaigal..Chitra Manalan

7 கருத்துகள்:

  1. ஜி சூப்பர் கதை. இந்த மாதிரி பேய்க் கதை படித்து ரொம்ப நாள் ஆச்சு. P T சாமி கதைகளை பயத்துடன் படித்த நினைவுகளை கிளறி விட்டீர்கள்.

    ஸ்ரீதரை வியாழன் அன்று உறவினர் வீட்டுக்கு போய் விட்டதால் பார்க்க முடியவில்லை. மறு நாள் அவரே அழைத்து வீட்டுக்கு வந்து பார்த்தார். காமிக்ஸ் நண்பர்கள் கூடிக் கொண்டே இருக்கின்றனர்.

    சிவகாசி சென்று காமிக்ஸ் லைப்ரரி பார்க்க ஆசையாய் இருந்தேன் இன்னமும் திறக்க வில்லையாம். போன் பண்ணி விசாரித்தபோது சொன்னார்கள். அடுத்த வருடம் போய் விடுவோம்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா நல்ல செய்தி நண்பரே! அப்படியே ஒரு டிஜிட்டல் லைப்ரரியும் துவங்கினார் எனில் அட்டகாசமாக இருக்கும்! உதவ நாம் பல முயற்சிகளை தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறோம்! உங்க புத்தகங்கள் சில என்னிடம் உள்ளன! என்னிக்கு எங்க வீட்டுக்கு விசிட் அடிக்கறிங்க??

    பதிலளிநீக்கு

  3. Super or Super keep it up i remember my child hood period i read this story but canno't finish complete. now i am happy lot of thanks

    Bala from Europe

    பதிலளிநீக்கு
  4. thanks for comment here bala! many of our friends just come and get without any comment! if i get their full support many magic happens here! but.....this is the problem!! i have no time to take rest! but i wish to make the comics fans of tamil comics world happy! that's why i am here! thanks again!

    பதிலளிநீக்கு
  5. அன்பு ஜானி,

    ராணி காமிக்ஸ் மீதான உங்கள் காதல் அளப்பறியாதது.

    சிறுவயதில் சித்திரகதைகளில் இருந்த அதே ஆர்வம், நாவல்களில் இருந்ததில்லை, கூடவே ராணி காமிக்ஸின் பல கதைகளை நான் வாங்கியது, பழைய புத்தக கடைகளில் தான் என்பதால் கோர்வையாக அணைகட்டு கொலைகள் கதையை படித்ததில்லை.... மொத்தத்தையும் ஒருசேர பார்ப்பதில் ஒரு திருப்தி.

    லிங்கை கொஞ்சம் கரெக்ட் பண்ணி போடுங்க... பேஸ்புக் லிங்க முன்பே ஒட்டி கொண்டு இருக்கிறது. கூடவே CBR வடிவில் போடலாமே ?

    * Rafiq from USA :P *

    பதிலளிநீக்கு
  6. ஓகே தலைவரே! அப்படியே போட்டுடலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே, எஸ்டேட் பேய், புதையல் தீவு, விதவை ராணி கதைகளையும் இவ்வாறு கோர்வையாக தர முடியுமா?

      நீக்கு