சனி, 19 ஏப்ரல், 2014

துப்பறியும் க்வாக் சுந்தரம்!!!_இது ஒரு குமுதம் காமிக்ஸ்!!!

அன்புள்ளம் கொண்ட காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு!
வணக்கங்கள்!
            நாம் ஏற்கனவே "சிங்கக் கழுகு"என்கிற அமரர் கல்கி அவர்களால் வழிநடத்தப் பட்ட "கல்கி"  இதழின் காமிக்ஸினை  படித்து மகிழ்ந்தோம்!

           இன்று குமுதம் பத்திரிக்கையின்  அருமையான படைப்பான துப்பறியும் க்வாக் சுந்தரம் என்கிற தொடர் கதையை தொடராகவே ரசித்துப் படிக்க உங்கள் அனைவரையும் வருக வருக என்று அன்புடன்  தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் அழைக்கிறது! தினம் (ஹி ஹி ஹி முடிந்தால்தான்) ஒரு அத்தியாயம் வெளியிட்டு (முகநூலில்)  உங்களை அக மகிழ வைப்பதுதான் எண்ணம்!

ஒரு அட்டகாசமான ஜனரஞ்சக இதழில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய துப்பறியும் கதை இது! ஒரு வாத்தும் அதன் நண்பனும் என்பதே இதில் சிறப்பான விஷயம்!

அந்த தொடர் கதை வெளியான வருடத்தை கவனியுங்களேன்!! சுமார் நாற்பத்தைந்து வருடம் முன்னதாக வெளியாகி குமுதம் வாசகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட வாத்தின் கதை இது! எப்படி ஒரு டொனால்ட் டக் பெயர் வாங்கியதோ அதே போன்று நம்ம க்வாக் கும் நற்பெயரை சம்பாதித்தது! இதைப் படித்து முடித்த பின்னர் நீங்களும் க்வாக் க்வாக் என அன்பர் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் போன்று திரிவீர்கள் (ஹீ ஹீ ஹீ ஆயா பன்ச் தப்பிக்கவே முடியாது சாரே!) என்பது உறுதி!!!
பொருள்காட்சிக்குப் போகும் நண்பர் சுந்தரத்துக்கு ஒரு வாத்து பரிசாகக் கிடைக்கிறது! அந்த வாத்துக்கும் (லாஜிக்கை இங்கேயே கழட்டி தொங்க விட்டு விட்டு கதைக்குள் குதிக்கவும் _என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! அந்த காலத்து தமிழ் காமிக்ஸ் முயற்சி இது! எனவே பெருமைப்பட்டுக் கொள்ளும் இதயம் படைத்தவர்கள் தொடர்ந்து படிக்கவும்! மற்றவர்கள் டார்ஜான் ரிலீஸ் ஆகி இருக்கு அங்கே போய் கண்டு மகிழலாமே?!?!?) சில நுண்ணிய இயல்புகள் உண்டு அதனை வைத்து அது சாதிக்கும் விஷயங்கள் இந்தக் கதை நெடுகிலும் தூவப்பட்டிருக்கிறது!  மிக அரிய தொகுப்புகளை இவ்வளவு காலம் அழகாகத் தொகுத்து நமக்கு வாசிக்க தனது பொக்கிஷ சாலையில் இருந்து வழங்கிய அன்பு சகோதரர் திரு.அலெக்ஸ்சாண்டர்  வாஸ் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்! அன்னாரது முயற்சிகளுக்கு இறைவன் என்றும் பேருதவி செய்து ஆசிர்வதிப்பாராக!  
இனி கதைக்கும் நேரம்!!!
அத்தியாயம் ஒன்று "துப்பறியும் க்வாக் சுந்தரம்"

அட்டகாசமான இந்தக் கதையைப் போன்ற அத்தனை காமிக்ஸ் முயற்சிகளுக்கும் மிக்க  நன்றிகள் குமுதம் பத்திரிகைக்கு!!! 



அத்தியாயம் இரண்டு!!!
ஓவியர் திரு செல்லம் அவர்களது விரல் வித்தையில் மேனேஜர் எவ்வளவு கொடூரமான ஆசாமியாகத் தெரிகிறார் பாருங்கள்!!








என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி! நாளை ஈஸ்டர் கொண்டாடவிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள்!!


6 கருத்துகள்:

  1. நண்பர் அலெக்ஸாண்டர் வாஸ் அவர்களுக்கும், இதனை பொறுமையாக வலையேற்றிய நண்பர் ஜானிக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  2. super sir,plz continue daily,I was read it my school days.I think heroine name is chandra.super story.
    Many more thanks to johny.

    பதிலளிநீக்கு
  3. super sir,plz continue daily,I was read it my school days.I think heroine name is chandra.super story.
    Many more thanks to johny.

    பதிலளிநீக்கு
  4. 50 வருடங்கள் முன்பே தமிழில் காமிக்ஸ் கதைகள் எவ்வளவு பிரபலம் என்று அறிவதில் ஆனந்தம் தான். அதுவும், கிடைக்கும் பொக்கிஷங்களை அடுத்தவர்களுக்கும் முழுமையுடன் பகிர வேண்டுமென்ற நினைப்புள்ள நண்பர் பட்டாளம் அபூர்வம்... கலக்குங்க.

    விரைவில் முழு தொகுப்பையும் போட்டு தாக்கலாமே :) ?

    பதிலளிநீக்கு
  5. அருமை! இப்படிப்பட்ட அரிய கதைகளை வழங்குவதற்கு நன்றி! இதன் அடுத்த பதிவு எப்பொழுது?

    பதிலளிநீக்கு
  6. viraivil ji nanri thangal pinnoottathukkum ninivu oottiyamaikkum!

    பதிலளிநீக்கு