ஞாயிறு, 29 ஜூன், 2014

பழங்கள் வாங்குவோர் கவனத்திற்கு...

அன்பு வாசக தோழர்களே!
இனிய வணக்கங்கள்!!!
      இம்முறை ஒரு விழிப்புணர்வு செய்தியுடன் தங்களை சந்திக்கிறேன். முக்கனிகள் மா, பலா, வாழை. அவற்றில் மாம்பழம் என்றாலே திருட்டு மாங்காய் அடித்து ஆடிய பழைய நினைவலைகள் வந்து போவது இயற்கை. 
    கொட்டிக் கிடக்கும் மாம்பழங்களின் காலமிது. நாம் வாங்கும் மாம்பழங்களை எவ்வாறு தெரிவு செய்கிறோம்? நம்ம தேர்வு சரியானதுதானா? என்கிற கேள்விகளுக்கு இந்தத் தகவல் ஒரு சிறந்த அளவீடாக இருக்கும் என்று கருதுகிறேன்.   
   நம்ம க்ரைம் நாவல் 171 - ஒரு முல்லைப் பூவின் முடிவு 2010 ல் வெளியாகிப் பட்டையைக் கிளப்பிய ஒரு நாவல். இதில் வெளியான விளக்கம் ப்ளீஸ் விவேக்கில் வந்த ஒரு கேள்வி பதிலில் ஒரு பழம் இயற்கையாகப் பழுத்ததா இல்லை செயற்கையாகப் பழுத்ததா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என எஸ்.லோகநாதன், அனுப்பர்பாளையம், திருப்பூர் என்ற வாசகர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அண்ணன் ராஜேஷ் குமார் அவர்கள் அளித்த விடை இந்த நேரத்தில் மிகுந்த உதவியாக இருக்கும் என்கிற எண்ணத்தில் விடையை அப்படியே தருகிறேன். நன்றிகள் கேட்டவர்க்கும், விடை பகன்ற அருமை அண்ணனுக்கும், பதிப்பித்த அன்பு அண்ணன் அசோகனுக்கும்.

இயற்கையாகப் பழுத்து இருந்தால்:
- பழத்தைக் கையில் எடுத்துப் பார்த்தால் கனக்கும்.
- நல்ல வாசனையாக இருக்கும்.
- பழத்தின் தோல் பகுதி உறுதியாகவும், கடினமாகவும் இருக்கும். அதே  சமயத்தில் மேல் தோலில் சுருக்கங்கள் இருக்கும்.
- பழம் எல்லாப் பக்கமும் ஒரே நிறமாக இல்லாமல் லேசான பச்சை நிறம் அல்லது சிவப்பு நிறம் கலந்து தெரியும்.


செயற்கையாகப் பழுத்து இருந்தால்:
-                               - பழத்தினைத் தூக்கிப் பார்க்கும்போதே எடை குறைவாக மிகவும் லேசாக இருக்கும்.
-                              -பொதுவாக பழங்களை பழுக்க வைப்பதற்கு வியாபாரிகள் கால்சியம் கார்பைடு என்கிற இரசாயனப் பொடியை அல்லது கல்லை (ஒரு வியாபாரி தூள் என்று சொல்வார்கள் என்கிறார்) உபயோகப் படுத்துவார்கள். அந்த இரசாயனத்தின் விளைவாக பழங்களின் தோல் பகுதியில் வெள்ளைப் புள்ளிகள் காணப்படும்.
-                            -  இரசாயனத்தின் பாதிப்பால் சதைப் பகுதி சேதமடைந்து அதன் காரணமாய் தோல் பகுதி மென்மையாக இருக்கும்.
-                             - இயற்கையான பழ வாசனைக்குப் பதில் வேறு மாதிரியான ஒரு நெடி அடிக்கும்.
-                             - பழத்தின் நிறம் முழுமையான மஞ்சள் நிறமாக பார்ப்பதற்கு அழகாய் இருக்கும்.
போனஸ் நியூஸ்
கால்சியம் கார்பைடால் பழங்களைப் பழுக்க வைப்பது சட்டப்படி குற்றம். இந்தப் பழங்களை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல் பிரச்சினை, உணவு நஞ்சாகும் அபாயம் ஏற்படும். கால்சியம் கார்பைடுக்கு பழ வியாபாரிகள் மொழியில் மசாலா அல்லது பவுடர் என்று பெயர். ஒரு கிலோ கால்சியம் கார்பைடின் விலை ஐம்பதுக்குள்தான் இருக்கும். இதைக் கொண்டு எட்டு முதல் பத்து டன் மாம்பழங்களைப் பழுக்க வைத்து விடலாம்.
புத்தகத்தினைக் கொடுத்து படிக்க உதவிய நண்பர் மைக்கேல் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!!

       என்ன நண்பர்களே மாம்பழம் வாங்கலியோ மாம்பழம்!!!

3 கருத்துகள்: