புதன், 2 ஜூலை, 2014

மங்கூஸ் + மரணம் = XIII


அன்பு மிகு நண்பர்களே அன்பர்களே வணக்கம்!

மறக்கவே முடியாததொரு பயணம் மங்க்கூஸின் வரலாறு! அட்டகாசமான சிந்தனையாளரின் சிந்தையில் உதித்திட்டதொரு கதை. பாராட்ட வார்த்தைகளைத் தேட வேண்டும். சோகம் + சாகசம் = மங்கூஸ். அன்பென இருந்த உறவான தச்சரைக் காக்க வேண்டி மங்கூஸ் செய்யும் தவம்தான் விரியனின் விரோதி. தன் வாழ்வைக் காத்தவரை இறுதி வரைக் காக்கும் நாயகன் மங்கூசை இந்தக் கதையில் நீங்கள் தரிசிக்கலாம். ஒரு தொழில் முறை நேர்த்தியாளனின் வாழ்வு ஒரு தொழில் முறைக் கொலைகாரனாய் உரு மாற்றம் பெறுகையில் நிகழும் சம்பவங்களே விரியனின் விரோதி. தன்னுயிரை ஈந்தும் தன் உறவின் உயிர் காக்க நாயகன் எடுக்கும் அவதாரமே விரியனின் விரோதி. தனக்கென தரணியிலொரு பாதையமைத்து தன் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவாக்கும் கலைஞன் நம் நாயகன். எத்தனைக்கெத்தனை எதிர்ப்புகள் வலுத்தாலும் கலங்காது களத்தில் இறங்குபவனே நம் நாயகன். கொண்ட கொள்கையில் கொண்டிருக்கும் அசரா உறுதியும் விண்ணைத் தொடும் தன்னம்பிக்கையும் உடையவனே நாயகன் மங்கூஸ்.
தன் வெற்றிப்பாதையில் சறுக்கலையே சந்திக்காதவன் நாயகன் மங்கூஸ். பதிமூன்றாம் எண்ணுடையவனை தீர்க்க வேண்டி வரும்போது மட்டுமே அந்த எண்ணின் துரதிருஷ்டம் இவனையும் பற்றிக் கொள்கிறது முடிவில் கொல்கிறது. அருமையான இந்த கதையினை சன் ஷைன் லைப்ரரியின் மூன்றாவது வெளியீடாகக் கொண்டு வந்துள்ளனர் நம்ம லயன் காமிக்ஸ் குடும்பத்தார் ரூபாய் அறுபதில் அட்டகாசம் செய்யும் நாயகன் மங்கூஸ்............தரிசிக்க மறவாதீர்கள்!!!  
நண்பர் கனவுகளின் காதலனின் முந்தைய பதிவு :
http://kanuvukalinkathalan.blogspot.in/2009/02/blog-post_12.html
நினைவுபடுத்திய சாக்ரடீஸ்கு நன்றிகள்!

செவ்வாய், 1 ஜூலை, 2014

மாய வளி!!

வணக்கம் அன்பு நண்பர்களே!
மாய வளி – மேஜிக் விண்ட். மிக அருமையாக செதுக்கப் பட்டதொரு கதை. ரெயில் விபத்தில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் நாயகனை மீட்டெடுத்து அவனுக்கு மாந்திரீகப் பயிற்சி கொடுத்து உதவுகிறார் ஒரு செவ்விந்திய சியோக்ஸ் இன மருத்துவர். தன்னைத் தேடிப் புறப்படும் மாய வளி மூன்றாம் ஆண்டில் சந்திக்கும் தொடர் நிகழ்வுகள்தான் ஆத்மாக்கள் அடங்குவதில்லை. மாய வளியின் மாந்த்ரீக பயிற்சியால் இறந்து போய் நிம்மதியில்லாமல் அலையும் ஆத்மாக்களைக் கண்ணால் காண முடிகிறது. அவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களது ஆன்மா அலைந்து திரிந்து கொண்டே இருக்கிறது. அவர்களது காத்திருப்புக்கு ஒரு முடிவில்லை. நிகழும் சம்பவங்கள் அவர்களது ஆத்மாக்களின் சாந்தியை நோக்கி அமைகிறது.
நடந்த ரெயில் விபத்தில் உண்மையில் நடந்ததுதான் என்ன? அதில் தப்பிய மாய வளி உண்மையில் யார்? அவர்தான் விபத்துக்குக் காரணமா? என்கிற கேள்விகளுக்கு ஒரு தீர்க்கமான சிந்தனையுள்ள பத்திரிக்கையாளனின் துணையுடன் விடை தேடும் படலம்தான் ஆத்மாக்கள் அடங்குவதில்லை!!!
நமது லயன் காமிக்ஸில் அறுபத்தைந்து ரூபாய் விலையில் வெளியாகி உள்ளது.

வாங்குவீர்! படிப்பீர்! மகிழ்வீர்!
இதழின் ஹை லைட்ஸ் 
- நேர்மையான ரிப்போர்ட்டர்
- மோசமான வியாபாரி
- கழுகாய்த் திரியும் கொலைகாரர்கள் 
- செவ்விந்திய மனிதாபிமானி 
முழு வண்ணத்தில் வாசிக்க மறக்காமல் வாங்குவீர் ஆத்மாக்கள் அடங்குவதில்லை. இல்லை ஆத்தா சும்மா விடமாட்டா எங்க கருப்பாயி ஹீ ஹீ ஹீ 
மாய வளியானின் நண்பர் படைகளும் எதிரி படைகளும் ஒரு ஆங்கில விளக்கம்...










மீண்டும் விரைவில் சந்திக்கும் வரை வடை சுடுவது நம்ம ஆயா.........

காவலுக்கொரு கழுகு!!!!

வணக்கம் நண்பர் படைகளே 
                  நமது லயன் காமிக்ஸின் 232வது இதழாக வெளியாகி 115 பக்கங்களுடன் அசத்தும் ஜூலை வெளியீடு இந்த காவல் கழுகு. இரவுக் கழுகாரின் சாகசப் பயணத்தில் இந்த காவல் கழுகும் ஒரு  தனி முத்திரை.

          காவல் கழுகு வார்ம் ஸ்ப்ரிங்க்ஸ் என்கிற செவ்விந்தியக் குடியிருப்புக்கு கொண்டு செல்லப் படும் மாடுகள் விஷமூட்டப் பட்டு செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர் என்கிற தகவலைக் கேள்விப் படுகிறார். அவரது ஸ்டைல் புலனாய்வில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் கொட்டுகின்றன. தனது வேட்டையைத் துவக்குகிறார் டெக்ஸ். பங்காளிகளுக்கு இடையிலான தகராறு. செவ்விந்திய போலீஸ்கள். கிழவரது குடும்பம் சித்திரவதைக்குள்ளாவது என பல வித்தியாசமான சம்பவங்களுடன் நிறைவாக கதையாக அமைந்து கலக்கி விட்டது இந்தக் கதை.
காவல் கழுகு ஹைலைட்ஸ்!!!
-செவ்விந்திய சகோதரர்களுக்கு நான் இரவுக் கழுகு! நண்பர்களுக்கு நான் டெக்ஸ்! உங்களைப் போன்ற காவாலிகளுக்கு நடமாடும் எமன்!!!!
-காலத்தின் சுழற்சிக்கு யாரும் விதிவிலக்கல்ல கிரே உல்ப்!!
- இரவுக் கழுகின் சிறகுகள் சதா விரிந்தே இருக்க வேண்டும் என்பது ஆண்டவன் செய்த நிர்ணயம்!!
-அட..இந்த ஊரில் காவல் நாய்களுக்குக் கூட துப்பாக்கிகள் தருகிறார்களா?
வாங்கி படிக்க வசதியாக வெறும் 35 ரூபாய் விலையில் அள்ளிக் கொடுத்திருக்கிறது லயன் காமிக்ஸ். வாங்கிப் படித்து மகிழுங்கள்!!
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி!!