செவ்வாய், 1 ஜூலை, 2014

காவலுக்கொரு கழுகு!!!!

வணக்கம் நண்பர் படைகளே 
                  நமது லயன் காமிக்ஸின் 232வது இதழாக வெளியாகி 115 பக்கங்களுடன் அசத்தும் ஜூலை வெளியீடு இந்த காவல் கழுகு. இரவுக் கழுகாரின் சாகசப் பயணத்தில் இந்த காவல் கழுகும் ஒரு  தனி முத்திரை.

          காவல் கழுகு வார்ம் ஸ்ப்ரிங்க்ஸ் என்கிற செவ்விந்தியக் குடியிருப்புக்கு கொண்டு செல்லப் படும் மாடுகள் விஷமூட்டப் பட்டு செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர் என்கிற தகவலைக் கேள்விப் படுகிறார். அவரது ஸ்டைல் புலனாய்வில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் கொட்டுகின்றன. தனது வேட்டையைத் துவக்குகிறார் டெக்ஸ். பங்காளிகளுக்கு இடையிலான தகராறு. செவ்விந்திய போலீஸ்கள். கிழவரது குடும்பம் சித்திரவதைக்குள்ளாவது என பல வித்தியாசமான சம்பவங்களுடன் நிறைவாக கதையாக அமைந்து கலக்கி விட்டது இந்தக் கதை.
காவல் கழுகு ஹைலைட்ஸ்!!!
-செவ்விந்திய சகோதரர்களுக்கு நான் இரவுக் கழுகு! நண்பர்களுக்கு நான் டெக்ஸ்! உங்களைப் போன்ற காவாலிகளுக்கு நடமாடும் எமன்!!!!
-காலத்தின் சுழற்சிக்கு யாரும் விதிவிலக்கல்ல கிரே உல்ப்!!
- இரவுக் கழுகின் சிறகுகள் சதா விரிந்தே இருக்க வேண்டும் என்பது ஆண்டவன் செய்த நிர்ணயம்!!
-அட..இந்த ஊரில் காவல் நாய்களுக்குக் கூட துப்பாக்கிகள் தருகிறார்களா?
வாங்கி படிக்க வசதியாக வெறும் 35 ரூபாய் விலையில் அள்ளிக் கொடுத்திருக்கிறது லயன் காமிக்ஸ். வாங்கிப் படித்து மகிழுங்கள்!!
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி!!

2 கருத்துகள்: