புதன், 29 அக்டோபர், 2014

இறைவன் மோசேயை எகிப்துக்கு அனுப்புகிறார்!!! jw.org காமிக்ஸ் வரிசை.....

ஒரு சின்னஞ்சிறு புதர். திடீரெனப் பற்றி எரிவதை மோசே ஆடு மேய்க்கும்போது காண்கிறார். அது என்ன என பார்க்க அருகில் செல்கிறார். முட் புதரினின்று இறைவன் மோசேயோடு இடைப்படுகிறார். மோசேவை எப்படி தேவன் பயன்படுத்தி இஸ்ரேலிய மக்களை எகிப்தினின்று மீட்டார் என்பதை இந்த சித்திரக்கதை எடுத்துரைக்கிறது. சித்திர வடிவப்படுத்திய jw.org யெகோவாவின் சாட்சிகள் சபையினருக்கு எங்கள் காமிக்ஸ் நண்பர்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 



இவ்வாறு இஸ்ரேலிய மக்கள் தங்களது அடிமைத்தனத்தின் வீடான எகிப்தினின்று இறைவனின் திருச்சித்தத்தால் மீட்கப்படுகின்றனர்.
மீண்டும் சந்திப்போம் தோழர்களே! 

திங்கள், 27 அக்டோபர், 2014

கறுப்புக் கிழவியின் திகில் கதைகளின் பட்டியல்!!!

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
கருப்பாய் நம்மை மிரட்டும் ஹெப்ஸிபா கிரிம் கிழவியின் கதைகள் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் கோல்ட் கீ காமிக்ஸில் வெளியாகி நம்மை பரவசப் படுத்த பின்னர் திகில் மூலமாக நம்மை அன்பு ஆசிரியர் விஜயன் அவர்களது அற்புதமான மொழிபெயர்ப்புடன் நம்மை சந்தித்து சாதித்தது காமிக்ஸ் உலகின் வரலாறு! திகில் காமிக்ஸ் வரிசையில் இரவே இருளே கொல்லாதே வந்து இந்த தீபாவளிக்கு நம்மை உலுக்கிக் கொண்டுள்ள இந்த நேரத்தில் கறுப்புக் கிழவியின் கதைகளை மீண்டும் ஒரு முறை ரீவைண்ட் செய்து பார்க்கும் விதத்தில் வந்துள்ளதுதான் இந்தப் பதிவு. பிழை இருப்பின் சுட்டிக்காட்டுக. அப்படியே திருத்தி ஒருவாறு சரி செய்திடலாம்!(ஹீ ஹீ ஹீ ஒரு வழி பண்ணிடலாம்!!!)

திகில் வெளியீடு பன்னிரண்டில் மர்ம சவப் பெட்டிகள் இதழில் முதல் விளம்பரம் வெளியாகிறது..


ஜனவரி 1987 விளம்பரம் புத்தம் புதிய கதைகள் குறித்து அதில் ஒரு விளம்பரம் கறுப்புக் கிழவியை அடையாளம் காட்டுகிறது.
அதே இதழின் முதல் கறுப்புக் கிழவி கதையின் விளம்பரம்
“பிசாசுக் கல்யாணம்

கறுப்புக் கிழவி கதைகள் பட்டியல் ....
திகில் வெளியீடு _13 மரண விளையாட்டு (ஜான் ரேம்போ சாகசம்)
1)“மரணப் பகை” முதன் முதலில் திகில் வாசகர்களின் இதயத்தில் விதைக்கப்பட்ட கதை.
கறுப்புக் கிழவியின் முதல் முதல் தமிழ் மண்ணை முத்தமிட்ட கதை இதுதான் ரசிகப் பெருமக்களே!

இதே இதழில் வெளியான இரண்டாவது கதைதான்
2)“பிசாசுக் கல்யாணம்”

திகில் வெளியீடு 14.சிவப்புப் பாதை 
3) ஆகாயத்தில் கொலை 

வெளியீடு _15 சாவதற்கு நேரமில்லை (சைமன் சாகசம்)
4)_”பேய் மீது ஆணை”
திகில் கோடை மலர்-17
5)_“சாபம்” ரோம சாம்ராஜ்யத்தில் நடைபெற்றதாக அமைக்கப்பட்ட கதை!
அதே இதழின் இரண்டாவது கதை
6) “கல்லறை கீதம்

வெளியீடு _20 முகமற்ற கண்கள்
7) பார்த்த ஞாபகம் இல்லையோ???

வெளியீடு _23 கறுப்புக் கிழவி ஸ்பெஷல்
8)_எத்தனுக்கு எத்தன்
9)_எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது???
10)_பிசாசுப் பிரம்பு
11)_பழி வாங்கும் பருந்து
12)_பேயை நம்பாதே
13)_விசித்திர சேவகன்
14)_மரண டாலர்
15)_சூப்பர் சித்தப்பா
வெளியீடு 26 பேட்மேன் கிறுக்கனா??
16)_மரண இசை
17)_சிரிக்கும் பேய்
வெளியீடு _33 இறந்தவனைக் கொல்லாதே!!! & சைத்தான் பங்களா
18)_இறந்தவனைக் கொல்லாதே
19)_கிணற்றில் ஒரு கிழவன்
20) பாலக் காவலன்
21) இரவு நண்பன்
22) பிசாசுப் பிம்பம்
வெளியீடு  42 இரத்த அம்பு
23) போலிகள் ஜாக்கிரதை
 வெளியீடு  44 ஆழ்கடல் மயானம்
24) தங்கக் கண்கள்
25) பெண் பேய் பொல்லாதது
வெளியீடு 45 ஆபத்திற்கொரு சவால்
26) அண்ணனின் ஆவி
27) ஆளுக்கொரு ஆயுதம்
28) கிழட்டு மரங்கள் சாவதில்லை
29) ஆபத்திற்கொரு சவால்
வெளியீடு 49 கொலைகார கோமாளி
30) கொலைகார கோமாளி
31) நிழல் எது நிஜம் எது?
வெளியீடு 51 எரிமலைத் தீவில் ப்ரின்ஸ்
32)செத்தவளுக்கு ஒரு சத்தியம் 
வெளியீடு 58  சைத்தான் ஜெனெரல்
33) ஆவிக் கொரு அழைப்பு
வெளியீடு 59 சாவோடு சூதாட்டம்
34) பாவம் ஹென்றி
35) தேடி வந்த டாக்டர்
36) கருப்பு அறை
37) நானும் இருக்கிறேன்
38) தேடி வந்த தூக்குக் கயிறு
முத்து காமிசில் வந்த
 திகில் ஸ்பெஷல் 255
39) 1.கண்ணை நம்பாதே
40) 2.பிறவி நடிகன் (re print Story) 
41) 3.ஆவிக்கு அல்வா
42) 5. செத்தும் கெடுத்தான் சித்தப்பா
43) 6.இனிது இனிது இளமை இனிது
44) 7.ஆளுக்கொரு ஆவி
ஹாரர் ஸ்பெஷல் 258
45) 1.பேய் காத்த புதையல்
46) 2.மரணத்துக்கு மரியாதை
47) 3.நிழல் நிஜமானால்...
48) 4.முடிந்த அத்தியாயம்
49) 5.பழிக்குப்பழி இரத்தத்துக்கு இரத்தம்
50) 6.வினையானதொரு விளையாட்டு

அவ்ளோதான் நண்பர்களே! எனினும் ஓரிரண்டு கதைகள் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டேதான் இருக்கின்றன. அவை என்னென்ன? என்பது குறித்து எங்களுடன் பகிர்ந்து இன்புற்றிருக்கலாமே? என்ன சொல்கிறீர்கள்?
என்றும் அதே அன்பின் நெடியில் மூச்சுத் திணறும் ஹீ ஹீ ஹீ உங்கள் இனிய நண்பன் ஜானி!

வெள்ளி, 24 அக்டோபர், 2014

மோசே எகிப்தில் வளர்கிறார்_விவிலிய சித்திரத் தொகுதி_JW Comics_jw.org

அன்பார்ந்த காமிக்ஸ் குடும்ப வாசகர்களே!
அனைவருக்கும் எனது அன்பின் வாழ்த்துக்கள்! பட்டாசு வெடித்து மகிழ்ந்திருப்பீர்கள். காமிக்ஸ் உலகில் திகட்டத் திகட்டத் தமிழ் மொழிபெயர்ப்பு காமிக்ஸ் வாசிப்பில் புன்னகை சதவீதத்தை அதிகப்படுத்திக் கொண்டும் இருப்பீர்கள் என நம்புகிறோம். நண்பர்கள் தங்களது கருத்துகளையும் அவ்வப்போது பகிரலாமே? தோழர்கள் தங்களது மகத்தான நேரத்தையும் காலத்தினையும் இதில் செலவழித்தே தங்களுக்கு விருந்து படைத்து இருக்கின்றனர் என்பதனை சில வார்த்தைகள் பகிர்ந்து நன்றாக இருந்தது அல்லது இல்லை என்பது குறித்தோ இந்த வசனம் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம் என்பது போன்ற கருத்துகளையோ கொடுத்து உதவலாம். 
நிற்க! 
நண்பர் மோசேயின் பால்ய காலம் காமிக்ஸ் வடிவில் சிறுவர்களுக்கு உதவும் விதத்தில் சுருக்கமாக சில சித்திரங்கள் வாயிலாக யெகோவாவின் சாட்சிகள் சபையினர் அருமையாக விளக்கி உள்ள சித்திரக்கதைதான் இந்த மோசே எகிப்தில் வளர்கிறார்.
உங்கள் பகுதி கிறிஸ்தவ நண்பர்கள் இருந்தால் இந்த கதையினை வாட்ஸ் அப் அல்லது வேறு வழிகளில் பகிரலாமே? அவர்தம் குழந்தைகளுக்கு சொல்லித் தர ஏதுவாக இருக்கும் அல்லவா?
இந்த வேண்டுகோளை கொஞ்சம் கவனிங்க பாஸ்! 


யோசேப்பின் வாழ்க்கை! இந்தப் பதிவினில் விவரிக்கப்பட்டுள்ளது தாங்கள் அறிவீர்கள்! அவ்வாறு வேற்று நாட்டில் தனது கனவுகளுக்கு அர்த்தம் சொல்லும் தாலந்தால் மன்னரது அடுத்த இடத்துக்கு உயர்த்தப்பட்ட யோசேப்பின் காலத்தில் யூதர்கள் பெரு மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அதன் பின்னர் யோசேப்பினை அறியாத ஒரு மன்னன் எகிப்தினை ஆள நேரிட்டபோது அவனுடைய கண்கள் தங்கள் இனத்தாரை விட யூதர்கள் சமுதாயம் மிக வலிமை படைத்ததாக மலர்வதைக் கண்டு அஞ்சினான். அதனால் யூதர்களின் ஆண் குழந்தைகளை கொன்றுவிடவும் யூதர்கள் அனைவரையும் அடிமையாக்கிவிடவும் உத்தரவு பிறப்பித்தான். அந்த துயரமான சூழலில் மோசே பிறக்கிறார். அவரை அவரது தாயாரும், தமக்கையாரும் நைல் நதியருகே ஒரு பேழையில் வைத்து (மகாபாரத கர்ணன் நிலை என்று வைத்துக் கொள்ளுங்களேன்!) கோரை புற்களிடையே வைத்து விட மன்னனின் செல்ல மகள் அவ்விடம் குளிப்பதற்கு வர அதன் பின் நடப்பதே கதை. 

"மிரியாமின் பொறுமைக்குக் கிடைத்த பலன் அக்குழந்தை இளவரசியாரால் கவனிக்கப்படுகிறது!"

மோசே எகிப்தியருடன் ஒன்றாக வளர்ந்தாலும் பிறந்த வம்சத்தை மறக்கவில்லை! அவர்களது கஷ்ட நஷ்டங்களை கவனித்து வேதனை அடைகிறான்!
வேறு நாட்டிற்கு அடைக்கலம் நாடி ஓடுகிறான். அங்கே தனது மாமன் மகள் சிப்போராவை மணக்கிறான்.
அதன் பின்?.....காத்திருங்கள்! விரைவில் "இறைவன் மோசேயை எகிப்துக்கு அனுப்புகிறார்" என்கிற போஸ்டில் சந்திப்போம்! அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது! 
(மழை இந்த முறை ஓவர்ங்க! மழை நீர் திட்டம் உங்கள் வீட்டில் இன்னும் உயிரோடு இருக்கிறதா??? கொஞ்சம் சரி பாருங்களேன்? அப்போதான் பூமித்தாயின் தாகம் உண்மையாகத் தீரும்! ப்ளீஸ்!) 

புதன், 22 அக்டோபர், 2014

ஒரு எலும்புக் கூட்டின் காவியம் _GG Studio Comics_fan boosting


அன்புடையீர்!
அனைவருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
கங்கா ஸ்நானம் ஆய்டுத்தா! நன்னா எண்ணையை தலையில் வெச்சு தேய்ச்சி குளிச்சி, பட்டாசு, பலகாரம் என இன்றைய தினம் கலக்குங்க.
நம்ம சார்பில் ஜி.ஜி.ஸ்டுடியோ வின் கலக்கலான வர்ணங்கள் நிறைந்த இந்த கதையை மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறேன்! இந்த கதை பிடிச்சிருந்தால்  செய்து அந்த காமிக்ஸ் குழுவினருக்கு தங்கள் ஆதரவை நல்கிடுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! 
































LOW Version CBR: a skeleton story 
மீண்டும் விரைவில் சந்திப்போம்! டமால்! டுமீல்! புஸ்ஸ்ஸ்! 


புதன், 15 அக்டோபர், 2014

மலை மேல் மர்மம்_தினமணி கதிர் காமிக்ஸ்!!!

வணக்கம் வாசக நண்பர் படைகளே!
பட்டாஸ் வாங்கிட்டீங்களா? எல்லா தீபாவளி சிறப்பிதழும் வாங்கிக் குவிச்சிட்டிங்களா? தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பாகவும், என் வலைப்பூ சார்பிலும் தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ஹாப்பி தீப ஒளி நல்வாழ்த்துக்கள்! வெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட தீபமேற்றுவதற்கு முதலிடம் கொடுங்களேன். நரகாசுரன் என்கிற அரக்கன் மானிடரையும், தேவரையும், முனிவர் பெருமக்களையும் வாட்டி வதைத்த போது விஷ்ணு அவதரித்து அரக்கர் படையினை நசுக்கி நரகாசுரனை அழித்த போது தனது நினைவாக இந்த திருவிழாவினைக் கொண்டாட அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அவனது அழிவினை தீபம் ஏற்றி, வெடி வெடித்துக் கொண்டாடுவதாக ஐதீகம்.

     

      இந்த வருடம் டமால் டுமீல் எல்லாம் அருமை நண்பர்களது புண்ணியத்தில் முக நூல் பக்கங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றன. தீண்டத் தீண்ட இனிக்கும் தீந்தமிழின் பொடினியின் முத்தம், பொன்னால் இழைத்த வேலின் பொடியன் பென்னி, அயல் நாட்டு காமிக்ஸ் காதலர்களின் பாரகுடா, ஆர்பிட்டல் என தமிழுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிற கதைகளை அடையாளம் காட்டும் முயற்சியாக பல கதைகள் புதுப்புது பாணியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நண்பர் ரஞ்சித் அவர் பாணியில் தாறுமாறான அப்லோடுகளால் தன் பக்கத்தினை சூடாக வைத்துக் கொண்டிருக்கிறார். (பார்த்து சாமி, திகட்டி விடும் போலிருக்கிறது உங்களது பந்திப் பரிமாறும் பாணி!)
அப்புறம், ஒரு சின்ன நீதிக்கதை!
ஒருவனுக்கு பொன் முட்டையிடும் வாத்து கிடைத்ததாம். அவனுக்கு தினம் ஒரு முட்டை இட்டுத்தருமாம் அந்த வாத்து. அந்த வருமானத்திலேயே அவன் பெரிய பணக்காரனான பின்னரும், பண ஆசை அவனை விட்டுப் போகாமல், ஒரு நாள் அந்த வாத்தை அறுத்து வயிற்றில் இருக்கும் அத்தனை முட்டையையும் எடுத்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு அந்த வாத்தைக் கொன்றுவிட, அதன் வயிற்றில் இருந்த ஒரே முட்டை அவனைப் பார்த்துக் கண்ணடித்ததாம்! அந்த கதையாக நம்ம தினமணி கதிரில் வெளியான அருமையான சித்திரக் கதைதான் இந்த “மலை மேல் மர்மம்!
கல்பலதா அவர்களது எண்ணத்தில் உதித்து, ஓவியர் செல்லம் அவர்களது தூரிகையின் மையில், வெள்ளைத் தாளையே வெள்ளித்திரை எனக் கொண்டு வெளியாகிய கதை - இந்த “மலை மேல் மர்மம்!
சந்தியா என்கிற அழகி ஒரு புது பணக்காரி! அவளுக்கு ஒரு காதலன். ஒரு தோழி. இந்த மூவருக்குமிடையேயான பந்தத்தை வலியுறுத்தி சொல்வதுதான் இந்த “மலை மேல் மர்மம்!
காதல், நட்பு, துரோகம் என்கிற நேர்க்கோட்டில் பயணமாகி இறுதியில் சத்தியம் மட்டும்தான் சாதிக்கும் என்பதை எடுத்துக் காட்டி நிற்கும் நீதிக் கதைதான் இந்த “மலை மேல் மர்மம்!
இனி கதை கீழே!
கதைப்படி, சந்தியா ஒரு புத்தம்புது பணக்காரி. தான் வாங்கிய கார் பழுதடைந்து விபத்தில் சிக்கி தனது நடக்கும் ஆற்றலை இழந்து தனது எதிர்காலத்தை சக்கர நாற்காலியில் சுழற்றிட வேண்டிய அவலம். அவளது காதலன் ஆதரிப்பானா என்கிற சந்தேகம் அவளைத் துரத்த, அவள் தனது தோழியிடம் அடைக்கலமாகிறாள். தனது தோழியினை கோவையில் இருந்து வரவழைத்து அவளுக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்து விடுகிறாள். இந்த நிலையில் தனது காதலன் என்ன செய்கிறான் என்பதனை அதிரடி திருப்பங்களுடன் வழங்கியிருக்கிறது தினமணி கதிர் இதழ்!  




படித்து மகிழுங்கள்! உங்களுக்கு மகிழ்வை இந்தக் கதை தந்தால் அதற்கான முழுப் பெருமையும் தினமணி கதிர் இதழுக்கும், கதாசிரியர் கல்பலதா மற்றும் ஓவியர் செல்லம் அவர்களையே சாரும்! நன்றிகள்! 
முகமறியா நண்பர்களையும் முகநூல் முன்னணியில் நின்று உருவாக்கி வருகிறது என்பதற்கு சான்றாக, கோவில்பட்டியில் இருந்து அருமை நண்பர் ராஜசேகர் வேதா அவர்கள் தனது அரிய சேகரிப்பில் இருந்து "யார் இந்த மனிதர் இயேசு?" என்கிற நூலினை அன்பளிப்பாக அனுப்பி வைத்து ஆச்சரியப்படுத்தினார். நன்றி நண்பரே! சென்னை வந்தால் சந்திக்க மறவாதீர்.   


அப்புறம் ஒரு விஷயம்! பத்திரிகை உலகில் புதுப்புது இதழ்கள் வெளியாகி வருவது தாங்கள் அறிந்ததே! சில சாம்பிள் இதழ்கள் அவ்வப்போது எங்கள் காவல் நிலையத்தினை வந்தடைவது உண்டு. என் கண்ணில் அவ்வாறு படும் ஒரு சில இதழ்கள் குறித்து அவ்வப்போது பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். அவ்வகையில் என்னைக் கவர்ந்த புதிய ஒரு இதழ் இந்த "ஒரே நாடு!"
முன் பக்கம், தொடர்பு கொள்ள...போன்ற பக்கங்களை இங்கே பகிருகிறேன். ஆர்வமிருப்போர் நேரடியாக அவர்களைத் தொடர்பு கொள்ளுங்களேன்.  




படித்து மகிழுங்கள்! உங்களுக்கு மகிழ்வை இந்த "மலை மேல் மர்மம்" கதை தந்தால் அதற்கான முழுப் பெருமையும் தினமணி கதிர் இதழுக்கும், கதாசிரியர் கல்பலதா மற்றும் ஓவியர் செல்லம் அவர்களையே சாரும்! நன்றிகள்! அட்வான்ஸ் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!