திங்கள், 27 அக்டோபர், 2014

கறுப்புக் கிழவியின் திகில் கதைகளின் பட்டியல்!!!

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
கருப்பாய் நம்மை மிரட்டும் ஹெப்ஸிபா கிரிம் கிழவியின் கதைகள் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் கோல்ட் கீ காமிக்ஸில் வெளியாகி நம்மை பரவசப் படுத்த பின்னர் திகில் மூலமாக நம்மை அன்பு ஆசிரியர் விஜயன் அவர்களது அற்புதமான மொழிபெயர்ப்புடன் நம்மை சந்தித்து சாதித்தது காமிக்ஸ் உலகின் வரலாறு! திகில் காமிக்ஸ் வரிசையில் இரவே இருளே கொல்லாதே வந்து இந்த தீபாவளிக்கு நம்மை உலுக்கிக் கொண்டுள்ள இந்த நேரத்தில் கறுப்புக் கிழவியின் கதைகளை மீண்டும் ஒரு முறை ரீவைண்ட் செய்து பார்க்கும் விதத்தில் வந்துள்ளதுதான் இந்தப் பதிவு. பிழை இருப்பின் சுட்டிக்காட்டுக. அப்படியே திருத்தி ஒருவாறு சரி செய்திடலாம்!(ஹீ ஹீ ஹீ ஒரு வழி பண்ணிடலாம்!!!)

திகில் வெளியீடு பன்னிரண்டில் மர்ம சவப் பெட்டிகள் இதழில் முதல் விளம்பரம் வெளியாகிறது..


ஜனவரி 1987 விளம்பரம் புத்தம் புதிய கதைகள் குறித்து அதில் ஒரு விளம்பரம் கறுப்புக் கிழவியை அடையாளம் காட்டுகிறது.
அதே இதழின் முதல் கறுப்புக் கிழவி கதையின் விளம்பரம்
“பிசாசுக் கல்யாணம்

கறுப்புக் கிழவி கதைகள் பட்டியல் ....
திகில் வெளியீடு _13 மரண விளையாட்டு (ஜான் ரேம்போ சாகசம்)
1)“மரணப் பகை” முதன் முதலில் திகில் வாசகர்களின் இதயத்தில் விதைக்கப்பட்ட கதை.
கறுப்புக் கிழவியின் முதல் முதல் தமிழ் மண்ணை முத்தமிட்ட கதை இதுதான் ரசிகப் பெருமக்களே!

இதே இதழில் வெளியான இரண்டாவது கதைதான்
2)“பிசாசுக் கல்யாணம்”

திகில் வெளியீடு 14.சிவப்புப் பாதை 
3) ஆகாயத்தில் கொலை 

வெளியீடு _15 சாவதற்கு நேரமில்லை (சைமன் சாகசம்)
4)_”பேய் மீது ஆணை”
திகில் கோடை மலர்-17
5)_“சாபம்” ரோம சாம்ராஜ்யத்தில் நடைபெற்றதாக அமைக்கப்பட்ட கதை!
அதே இதழின் இரண்டாவது கதை
6) “கல்லறை கீதம்

வெளியீடு _20 முகமற்ற கண்கள்
7) பார்த்த ஞாபகம் இல்லையோ???

வெளியீடு _23 கறுப்புக் கிழவி ஸ்பெஷல்
8)_எத்தனுக்கு எத்தன்
9)_எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது???
10)_பிசாசுப் பிரம்பு
11)_பழி வாங்கும் பருந்து
12)_பேயை நம்பாதே
13)_விசித்திர சேவகன்
14)_மரண டாலர்
15)_சூப்பர் சித்தப்பா
வெளியீடு 26 பேட்மேன் கிறுக்கனா??
16)_மரண இசை
17)_சிரிக்கும் பேய்
வெளியீடு _33 இறந்தவனைக் கொல்லாதே!!! & சைத்தான் பங்களா
18)_இறந்தவனைக் கொல்லாதே
19)_கிணற்றில் ஒரு கிழவன்
20) பாலக் காவலன்
21) இரவு நண்பன்
22) பிசாசுப் பிம்பம்
வெளியீடு  42 இரத்த அம்பு
23) போலிகள் ஜாக்கிரதை
 வெளியீடு  44 ஆழ்கடல் மயானம்
24) தங்கக் கண்கள்
25) பெண் பேய் பொல்லாதது
வெளியீடு 45 ஆபத்திற்கொரு சவால்
26) அண்ணனின் ஆவி
27) ஆளுக்கொரு ஆயுதம்
28) கிழட்டு மரங்கள் சாவதில்லை
29) ஆபத்திற்கொரு சவால்
வெளியீடு 49 கொலைகார கோமாளி
30) கொலைகார கோமாளி
31) நிழல் எது நிஜம் எது?
வெளியீடு 51 எரிமலைத் தீவில் ப்ரின்ஸ்
32)செத்தவளுக்கு ஒரு சத்தியம் 
வெளியீடு 58  சைத்தான் ஜெனெரல்
33) ஆவிக் கொரு அழைப்பு
வெளியீடு 59 சாவோடு சூதாட்டம்
34) பாவம் ஹென்றி
35) தேடி வந்த டாக்டர்
36) கருப்பு அறை
37) நானும் இருக்கிறேன்
38) தேடி வந்த தூக்குக் கயிறு
முத்து காமிசில் வந்த
 திகில் ஸ்பெஷல் 255
39) 1.கண்ணை நம்பாதே
40) 2.பிறவி நடிகன் (re print Story) 
41) 3.ஆவிக்கு அல்வா
42) 5. செத்தும் கெடுத்தான் சித்தப்பா
43) 6.இனிது இனிது இளமை இனிது
44) 7.ஆளுக்கொரு ஆவி
ஹாரர் ஸ்பெஷல் 258
45) 1.பேய் காத்த புதையல்
46) 2.மரணத்துக்கு மரியாதை
47) 3.நிழல் நிஜமானால்...
48) 4.முடிந்த அத்தியாயம்
49) 5.பழிக்குப்பழி இரத்தத்துக்கு இரத்தம்
50) 6.வினையானதொரு விளையாட்டு

அவ்ளோதான் நண்பர்களே! எனினும் ஓரிரண்டு கதைகள் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டேதான் இருக்கின்றன. அவை என்னென்ன? என்பது குறித்து எங்களுடன் பகிர்ந்து இன்புற்றிருக்கலாமே? என்ன சொல்கிறீர்கள்?
என்றும் அதே அன்பின் நெடியில் மூச்சுத் திணறும் ஹீ ஹீ ஹீ உங்கள் இனிய நண்பன் ஜானி!

7 கருத்துகள்:

  1. @ jsc john
    நண்பரே அருமையான பட்டியல்,பெயர்களை படிக்க படிக்க கறுப்புக்கிழவியின் பழைய பெக்கை சிரிப்பு மெளிதாக காதில் ஒலிக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. ஹீ ஹீ ஹீ கண்ணுங்களா இன்னும் நிறைய பேராண்டிகளை காணோமே?
    முக நூல்ல மட்டும் கருத்து சொன்னாக்கா அவ்ளோ தூரம் இந்தப் பாட்டிக்குக் காது கேக்காதுப்பா! கொஞ்சம் இங்கிட்டு வந்து உங்க கருத்த சொன்னா என் கதைங்க சரிதானா இன்னும் பட்டியலுக்கு பட்டி பார்க்கணுமான்னு தெரிஞ்சிடும்! என் ஆசிகள்! வர்ட்டா ஹீ ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  3. கறுப்புக் கிழவியின் தீவிர ரசிகன் என்ற அடைசொல்லுக்கு சரியான ஆசாமி தான் நீர்... நடத்தும் ஆரவாரத்தை :)

    பதிலளிநீக்கு
  4. பாட்டியின் லூட்டி ஒன்றாகிலும் படித்ததேயில்லை .....லிஸ்ட் -ன் நீளத்தை பார்த்தால் வரவேற்பு முன்னாளில் பலமாக இருந்திருக்க வேண்டும் .....i am avidly longing to lay my hands on her ....ஒரு கிழவி என் மனதை இந்த பாடுபடுத்துவது என் வாழ்வில் இதுதான் முதல் முறை .....:-)

    பதிலளிநீக்கு
  5. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பர் செல்வம் அபிராமி அவர்களே!
    உண்மைதான். கறுப்புக் கிழவிக்கு அன்று இருந்த ஆதரவு அலை மிகப் பெரியது! அதனாலேயே அதன் நீட்டிப்பை முத்துவிலும் ஆசிரியர் விஜயன் அவர்கள் செய்து பார்த்தார். இன்றும் கூட வண்ணத்தில் வெளியிட அவர் நினைத்தால் செய்யலாம். உங்கள் பலத்த ஆதரவினை நல்கும்பட்சத்தில் அவரது பார்வை கிழவியின் பக்கம் மீண்டும் திரும்பும் பொன் நாள் வந்தே தீரும்! ஹீ ஹீ ஹீ

    பதிலளிநீக்கு