ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வீதியெங்கும் உதிரம் - ஆதியந்தம் அதிரும்!

அன்பு நண்பர்களே! இனிய வணக்கங்கள்! இனிமையான இந்தப் பொழுதுதனில் தங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நலம். நலமே விழைகிறேன்!
இம்மாதம் லயன் காமிக்ஸ் நிறுவனத்தாரால் முழு வண்ணத்தில் வெளியிடப்பட்டு வீதியெங்கும், பட்டி, தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சித்திரக்கதைதான் வீதியெங்கும் உதிரம்!
மர்ம வீரர் டைலான் டாக்கின் சாகசம் இது. DI SCLAVI & TRIGO ஆகியோரின் அபார உழைப்பில் உருவான இவ்விதழ் cover Art work daniel brandao & Colouring artist Eduardo Ferreira ஆகியோரின் வித்தியாசமான அட்டையுடன் வெளியாகி இருக்கிறது!
கதை: ஜாக் தி ரிப்பர் என்கிற  வில்லனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப் பட்ட கதை இது. அவன் இறந்து ஆண்டு பல கடந்தும் அவனது ஆவியிடம் பேசிட என்னும் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட யார் இதன் பின்னணிக் காரணம் என்கிற மர்ம முடிச்சு அவிழும் விதமும் தொடரும் விபரீதமும் நம்மை சீட் நுனிக்கே கொண்டு வந்து விடுகின்றன. தவறாமல் படித்து மகிழுங்கள். விலை ரூபாய் அறுபது மட்டுமே.
அதன் ஒரு சில பக்கங்கள் தங்கள் ஆர்வத்தை தூண்டி விட மட்டும் இங்கே பரிமாறப்படுகிறது.






இன்னுமொரு பதிப்பில் உங்களை சந்திக்கும்வரை இந்த பதிப்புக்கு உதவிய நண்பர் முத்து விசிறியாருடன் இணைந்து எங்கள் இணைபிரியா அன்பினைப் பகிர்ந்து விடைபெறுகிறோம்! நன்றி! வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக