செவ்வாய், 24 மார்ச், 2015

இந்திய தண்டனை சட்டம் - குறிப்புகள் பகுதி இரண்டு!

அன்பு நண்பர்களே!
உதவி ஆய்வாளர் தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களுக்கு உதவும் விதமாக குறிப்புகள் சிறிது நம்ம வலைப்பூவிலும் கொடுத்தால் உதவிடுமே என்கிற எண்ணத்தில் சிறு குறிப்புகளாக, நினைவை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் கொடுத்துள்ளேன். ஒரு சின்ன  ஆலோசனை. நீங்க விளக்கமான இந்திய தண்டனை சட்டத்தினை வாசித்த பின் இதனை வாசித்தால் விளக்கமாகப் புரியும். 
தேர்வில் வென்று வாழ்வில் வளம் பெற என் வாழ்த்துக்கள்
அத்தியாயம் -௨ இன் தொடர்ச்சி
26 - நம்பத்தகுந்த காரணம்
27 – மனைவி, எழுத்தர், வேலையாட்களிடம் உள்ள சொத்து
28 – கள்ளத் தயாரிப்பு
29 – பத்திரம் – ஆவணம்
29 A – மின்னணுப் பதிவுரு
30 – மதிப்பாவணம்
31 – உயில்
32 – செய்கைகளைக் குறிக்கின்ற சொல் சட்டத்திற்கு மாறாக விடுகைகளை உள்ளடக்கும்.
33 – செய்கை அல்லது விடுகை
34 – பொதுவான உட்கருத்தை மேல்நடத்தும் வகையில் பல்வேறு ஆட்களால் செய்யப்பட்ட செய்கை
35 – அத்தகைய செய்கை குற்றமுறு அறிவுடன் அல்லது உட்கருத்துடன் செய்யப்படுகின்ற காரணத்தால் அது குற்ற செய்கையாக இருக்கும்போது
36 – பகுதி செய்கையாலும் பகுதி விடுகையாலும் உண்டாக்கப்பட்ட விளைவு
37 – பல்வேறு செய்கைகளில் ஒன்றை செய்வதன்மூலம் ஒத்துழைத்தலானது ஒரு குற்றமாக அமைகிறது.
38 – குற்ற செய்கையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் வெவ்வேறு குற்றங்களை செய்தவர்களாகலாம்.
39 – தன்னிச்சையாக - என்பதன் விளக்கம்
 40 – குற்றம் - என்பதன் விளக்கம்
41 – சிறப்பு சட்டம் - என்பதன் விளக்கம்
42 – வட்டார சட்டம் - என்பதன் விளக்கம்
43 – சட்டத்திற்கு மாறாக செய்ய சட்டப்படி கடமைப்பட்டவர்
44 – கேடு (அ) ஊறு (அ) துன்பம்
 45 – உயிர் என்பது மனித உயிரையே குறிக்கும். வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.
46 – மரணம் என்பது இந்த சட்டப்படி மனிதருடைய மரணத்தையே குறிக்கிறது. வேறு பொருள் கொள்ள வேண்டிய இடங்களில் அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டிருக்கிறது.
47 – மிருகம் என்பது மனித உயிர் தவிர மற்ற உயிர் வாழும் ஜந்துக்களைக் குறிக்கிறது.
48 – கப்பல்
49 – ஆண்டு, மாதம் என்பது ஆங்கில ஆண்டு மற்றும் ஆங்கில மாதத்தினைக் குறிக்கும்.
50 – பிரிவு – எண்களிட்டு காட்டப்பட்டிருக்கும் இந்த சட்டத் தொகுப்பின் பகுதியைக் குறிக்கும்.
51 – பிரமாணம்
52 – நல்லெண்ணம்
52 A – புகலிடம் தருதல்  
அத்தியாயம் – 03 – தண்டனைகள்
53 -  குற்றம் புரிந்தோருக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படலாம்?
முதலாவது – மரண தண்டனை
இரண்டாவது – ஆயுள்தண்டனை
மூன்றாவது – நீக்கப்பட்டது
நான்காவது – இரண்டு வகைப்பட்ட சிறைக்காவல்
(1)    கடுங்காவல் (2) வெறுங்காவல்
ஐந்தாவது – சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்
ஆறாவது – அபராதம்
53 A – தீவாந்தரத்துக்கு அனுப்புதலின் குறிப்பினைப் பற்றிய பொருள்
54 – மரண தண்டனையை வேறு தண்டனையாக மாற்ற அரசுக்கு உள்ள அதிகாரம்
55 – ஆயுள்தண்டனையை வேறு குறைவான தண்டனையாக மாற்ற அரசுக்கு உள்ள அதிகாரம்
55A – அரசு என்பது மத்திய-மாநில சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக வழங்கப்பட்ட தண்டனை எதன்பொருட்டு என்பதைப் பொறுத்து மாறுபடும். உரிய அரசு என்பதன் இலக்கணம்.
56 -  நீக்கப்பட்டது.
57 – தண்டனைக் கால அளவுகளின் பின்னங்கள்.
58 & 59 – நீக்கப்பட்டது
60 – தீர்ப்புத் தண்டனையை எந்த விதமாகவும் மாற்றி அமைக்கும் அதிகாரம் நீதி மன்றத்துக்கு உண்டு.
 61 & 62 – நீக்கப்பட்டது
63 – அபராதத் தொகை – தண்டத் தொகை
64 – அபராதம் செலுத்தாமைக்கு சிறை தண்டனை
65 – சிறைவாசமும், அபராதமும் விதிக்கக்கூடியதாக இருக்கும்போது அபராதம் செலுத்தாமைக்கான சிறைவாசத்துக்கு வரம்பு.
66 – அபராதம் செலுத்தாமைக்கான சிறைவாசத் தண்டனையின் வகை
67 – அபராதம் மட்டும் விதித்து தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக இருக்கும்போது அபராதம் செலுத்தாமைக்கு சிறைவாசம்
68 – அபராதம் செலுத்தியதும் சிறைவாசம் முடிவுறுதல்
69 – அபராதத் தொகையின் வீதப்பகுதி கட்டப்பட்டதும் சிறைவாசம் முடிவுறுதல்
70 – அபராதம் ஆறு ஆண்டுகளுக்குள் அல்லது சிறைவாசத்தின்போது வசூலிக்கலாகும் என்பது மரணம் ஏற்படுவதால் சொத்து கடப்பாட்டில் இருந்து விடுபடாது.
71 – பல்வேறு குற்றங்கள் சேர்த்த ஒரு குற்றத்துக்குரிய தண்டனையின் வரம்பு
72 – பல்வேறு குற்றங்களில் ஒன்றை செய்தவருக்கு அவற்றில் எந்தக் குற்றத்திற்கு என்பதுபற்றி ஐயமிருப்பதாக தீர்ப்பில் சொல்கிறபோது தண்டனை
73 – சிறையில் தனித்து அடைத்து வைத்தல்
(தனிமை சிறை _ நினைவிருக்கிறதா, பட்டாம்பூச்சி என்கிற தனி மானுட சாசனம்? இதுகாறும்  வாசிக்காதவர்கள் தயவு செய்து வாசியுங்கள் ரா. கி.ரங்கராஜன் அவர்களது மொழி பெயர்ப்பில் ஹென்றி ஷாரியர் என்பவரின்  சுய சரிதை நூல் வெளியாகி தமிழுக்கு அணி செய்துள்ளது. அதில் தனிமை சிறை குறித்து மிக நீண்ட அனுபவப் பக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன)
74 – தனிமை சிறைவாசத்துக்கான கால வரம்பு
75  - இந்திய தண்டனை சட்டத்தின் பன்னிரெண்டாவது அல்லது பதினேழாவது அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ள குற்றத்துக்காக ஒருவர் மூன்றாண்டுகள் அல்லது அதற்கும் மேலாக தண்டனை விதிக்கப்பட்டிருந்து மீண்டும் அதே வகையான குற்றங்களைப் புரிந்தால் அவருக்கு ஒவ்வொரு முறையும் ஆயுள் தண்டனை, அல்லது பத்தாண்டுக் காலம் வரை வெறுங்காவல் அல்லது கடுங்காவல் தண்டனை விதிக்கப்படவேண்டும்.
-அத்தியாயம் இரண்டு நிறைவுற்றது-
 அப்புறம் நண்பர் கணபதி இமயம் ஸ்டடி சென்ட்டர் என்கிற வலைப்பூ வைத்துள்ளார். அதில் உதவி ஆய்வாளர் சிலபஸ் கொடுத்துள்ளார். புதுப்பேட்டையில் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். தேவை உள்ளோர் அவரை அணுகலாம். http://hansha875.blogspot.in/2015/02/tamilnadu-police-si-2015-syllabus.html 
அப்புறம் நண்பர் மாயாவி சிவா லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு விஜயன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்காக உருவாக்கிய வாசகர் வாழ்த்து அட்டை. முடிந்தவரை அனைத்து நண்பர்களையும் புகைப்படமாக்கி தான் ஒரு சிறந்த இரசிகன் என நிரூபித்து உள்ளார். நன்றிகள் சிவா ஜி! வாழ்த்துக்கள் விஜயன் ஜி! இன்னும் பல சாதனை புரிந்து காமிக்ஸ் மழை பொழிந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு சிறப்பு சேர்த்திட எங்கள் அனைவரது வாழ்த்துக்கள் தலைவரே! 

அப்புறம் அபாய கண்டம் ஆப்பிரிக்காவில் நிகழும் ஒரு ஒட்டுமொத்தப் படுகொலையை களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹெர்மான் அவர்களின் அட்டகாசமான ஒன் ஷாட் கதை இந்த ஆப்பிரிக்கா. அதில் வரும் மாந்தர்களும் நிகழ்வுகளின் களமும் நிரம்பவே ஈர்க்கின்ற விதத்தில் அமைந்துள்ளது. கதைக்கான சூழலை மிக அழகாக நேர்த்தியாக வனைந்துள்ளார் ஹெர்மான்! HATS OFF HERMANN!

Got Scan and little modified for tamil comics fans! must read story! dont miss it!!!

பின்னர் வரேன் தோழமை உள்ளங்களே! என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!


  

3 கருத்துகள்:

  1. தெரியாத விஷயங்களை
    தெரிந்தவர் நிங்கள் சொண்ணதற்கு தேங்ஸ்

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வலைபூவில் எடிட்டரின் வாழ்த்து போட்டோவை பதிவேற்றி பாரட்டியதற்கு நன்றிகள் ஜான்..!

    பதிலளிநீக்கு