புதன், 22 ஜூலை, 2015

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 040_A Rare Srilankan Tamil Comics!

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.
ஒரு காமிக்ஸ் உங்களுக்குப் பிடித்து விட்டது - அதுவும் தொலைந்து போய் விட்டது என்றால் என்ன செய்வீர்கள்? எப்பாடு பட்டாவது ஒரு முறையேனும் திரும்பவும் ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்கிற ஏக்கத்துடன் வலம் வருவீர்கள். எங்காவது கண்ணில் படாதா என்று ஒவ்வொரு பழைய புத்தகக் கடையாக ஏறி இறங்குவீர்கள். எவரிடமாவது உள்ளதா என்று விசாரித்துக் கொண்டே திரிவீர்கள். அலுக்கவே அலுக்காத இந்த தேடல் என்னிடமும் உண்டு தோழர்களே. இன்றும் கூட என் கண்ணில் சிக்காமல் ஜெட் லி போன்ற தலைமுறை தலைமுறையாக சாகசம் செய்யும் ஒரு சீனத்துக் கதை பொன்னி போன்ற இதழில் வந்து இதுவரை என் கண்ணில் தென்படாது அலைய விட்டுக் கொண்டே இருப்பது உங்களுக்கும் தெரியும்தானே. சில வருடங்களுக்கு முன்பதாக வேளாங்கண்ணி திருத்தலத்தில் கிடைத்து வந்த காமிக்ஸ் வகை புனிதர்கள் வரலாறுகள் இன்றளவிலும் எங்கே ஒளிந்து கிடக்கின்றன என்கிற தேடல் முடிவுக்கே வராது நீண்டு கொண்டே போகிறது. டான் போஸ்கோ, டொமினிக் சாவியோ, பிரான்சிஸ் சேவியர் போன்றோரின் கதைகள் வரிசை அது. உங்கள் பகுதி தேவாலயங்களின் நூலகங்களில் இருக்கலாம். தேடுங்களேன்.
இன்று நமது காமிக்ஸ்கள் பரிமாற்றக் குழுக்களின் புண்ணியத்தில் அவ்வப்போது திரை மறைவில் இருந்து வெளியே வந்து தலை காட்டிக் காணாமல் போகின்றன. யாரோ வாங்குகிறார் யாரோ விற்கிறார் அல்லது பதிலுக்கு காமிக்ஸ் கொடுத்துக் கொள்கின்றனர். இதில் இருந்து மாறுபட்டதொரு கருத்து எனக்கும். திரு. பன்னீர் செல்வம் அவர்களுக்கும் இருந்து வந்தது. நாங்களும் மூர் மார்க்கெட் முதல் திருவல்லிக்கேணி வரை ஆழ்வார் பேட்டை தாத்தா கடை முதல் வடபழனி நூல் பாண்டியன் வரை துழாவாத இடம் இல்லை. எங்களின் அலைச்சல்களை இனி காமிக்ஸ் தேடும் நண்பர்கள் மீண்டும் அதே முறையில் திரிந்து கஷ்டப்பட்டு காமிக்ஸ் வாசிப்பதைக் குறைக்கும் வண்ணம் உருவானதுதான் காமிக்ஸ் நூலக எண்ணம். இது பல வருடங்களாகவே சிந்தனையில் இருந்து வந்ததொரு எண்ணம். இதில் யாரையும் நாங்கள் வருத்தப்படுத்தும் எண்ணமோ நோக்கமோ கொண்டவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை கனிவுடன் தெரிவித்துக் கொள்ள எண்ணுகிறேன். இதில் பங்கு பெற்றிருக்கும் அனைவருமே காமிக்ஸ் காதலர்களே. அந்தக் காதலைப் பெருமைப் படுத்தும் விதமாக அவர்களின் பங்களிப்பான புத்தகங்களையும் இதில் வைத்து கவுரவிக்கும் எண்ணத்திலேயே அவர்களது இரண்டாவது மூன்றாவது காப்பி நூல்களை மட்டும் அன்பளிப்பாகப் பெற்று நம் நூலகத்தில் சேமித்து வருகிறோம். புத்தகங்களை அன்பளித்த நண்பர்கள் தங்களை வெளிக்காட்ட எண்ணினால் மட்டும் இங்கு பகிர்வோம். அது வேண்டாம் என்பவர்களது பெயர்கள் எங்கள் குறிப்புகளில் சேமித்துப் பாதுகாக்கப்படும். இது உங்கள் நூலகம் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் பங்களிப்புகளும் அன்புடன் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
இன்று எங்கள் நூலகத்துக்கு அன்பளித்த அன்பளிப்பாளருக்கு தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் வாசகர்கள் சார்பிலும் நமது ரசிகப் பெருமக்கள் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவை அனைத்துமே அன்பளிப்பாளர்களின் புத்தகங்களே என்பதனை மீண்டும் ஒரு முறை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

muthu comics
252 - ஒரு மர்ம இரவு
298-புதையல் பாதை
301 -திசை திரும்பிய பில்லி சூனியம்
302 -மரண ஒப்பந்தம்
303-பேழையில் ஒரு வாள்
306-ஒரு திகில் திருமணம்
309- சித்திரமும் கொல்லுதடி
311 -நொறுங்கிய நாணல் மர்மம்
313-விண்ணில் ஒரு குள்ள நரி
lion comics
183 - கோபுரத்தில் கொள்ளை
  ஆகியவை நம்ம நூலகத்தில் இனி பாதுகாப்பாக வைக்கப் படும். இங்கே அமர்ந்து படிக்க வசதிகள் இன்னும் சில மாதங்களுக்குப் பின்னர் முறைப்படுத்தப் படும். அதுவரை வாசகர்களின் அன்பளிப்புகள் மட்டும் இங்கு பட்டியலிடப்படும். நமது நெருங்கிய வட்டங்கள் குறிப்பாக சென்னை நண்பர்கள் இவற்றுள் பார்க்காத புத்தகங்களை நேரில் தரிசிக்கலாம். வாசிக்கலாம். அனைத்துத் தகவல் தொடர்புகளும் கை பேசியிலேயே இப்போதைக்கு செயல்
பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அப்புறம் இந்த நாற்பதாவது அத்தியாயம் அப்படியே செவ்வாயைக் கடந்த புதனில் முப்பத்து எட்டாவது அத்தியாயம் கடந்ததும் தொடர்கிறது. எனவே ஏதோ அச்சமயம் குழப்பம் நேர்ந்திருக்க வேண்டும். திரு.சந்ரா இன்று நம்மிடையே இல்லை. வீரகேசரி பத்திரிக்கையிலும் ஏதும் தகவல் தெரிந்த அந்த நாள் தோழர் எவரும் இன்று நம்மிடையே இல்லையாதலால் வாசித்து இரசிப்பதுடன் நிறுத்திக் கொள்வோமே?

-என்றும் உங்கள் இனிய நண்பன் ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக