ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

Bible Comics Series _Ruth_விவிலிய சித்திரக்கதைகள் வரிசை_ரூத்!

வணக்கம் தோழமை உள்ளங்களே.
விவிலியம் பல்வேறு நபர்களின் வாழ்வின் பாதையை ஆங்காங்கே தொட்டுக்காட்டிக் கொண்டு செல்கிறது. விசுவாசம், தன்னம்பிக்கை, இறைநம்பிக்கை, ஆதரவு, அன்பு காட்டுதல் என்று  அனைத்து பரிணாமங்களையும் பல்வேறு சம்பவங்களின் மூலமும் குறிப்பிடுகிறது,
நல்லது எங்கே  இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாமே.
ரூத்-இயேசுவின் முன்னோர்களில் ஒருவர். வேறு இனப் பெண்ணாக இருந்தாலும் இறைவனது அன்பினால் ஈர்க்கப்பட்டு இஸ்ரவேலின் தேவனான யெகோவாவின் மீது நம்பிக்கை கொண்டு அவரது மாமியாரான நகோமியுடன் கணவனை இழந்து துன்புறும் நிலையில் இஸ்ரவேல் தேசத்துக்கு வருகிறார். இறைவன் தன் மீது நம்பிக்கை கொண்டோரை எவ்வாறெல்லாம் ஆற்றித் தேற்றி நம்பிக்கையையும், வாழ்வின் சூழ் நிலைகளையும் மாற்றி அமைக்கிறார் என்பதை விவரிக்கும் கதை இது.

முக்கிய குறிப்புகள்:
இந்த சித்திரக்கதை தி பைபிள் அப்போஸ்தலேட் என்கிற கிறிஸ்தவ அமைப்பினரால்  கேரள மாநிலம், தெள்ளிச்சேரியில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
வெளியான ஆண்டு குறித்த தகவல் கிடைக்கப்பெறவில்லை.
    திரு.மைக்கேல் கரிமட்டம் அவர்களால் எழுத்தில் அமைக்கப்பட்டு, திரு.பி.பி.தேவசி அவர்களால் ஓவியங்களாக மாற்றம் கண்டு 
இந்த அபூர்வமான சித்திரக்கதை முதலில் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் வெளியாகியிருந்தது.
பின்னர், சகோதரர் திரு. தியாகு அவர்களால் திண்டிவனம், TNBCLC Commission for bible அமைப்புக்காக தியான ஆசிரமம், சென்னை 600028 இன் சார்பில்  தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 இந்த சித்திரக்கதையை நமக்கு வாசிக்க, டிஜிட்டல்  முறையில் அன்பளித்த சகோதரர் திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், தொழில் நுட்ப உதவிக்காக திரு.சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களுக்கும் வாசகர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
இனி, 























என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்_ஜானி சின்னப்பன்.


1 கருத்து: