திங்கள், 9 மே, 2016

காயீன் & ஆபேல் _விவிலியப் படக்கதை_001

 இறைவனின் பேரன்புக்குப் பாத்திரமான இறைவனின் இனியவர்களே. இனிய வணக்கங்கள். அன்னையர் தின நல்வாழ்த்துகள் சகோதரிகளே. 
 இது விவிலிய சித்திரக்கதை வரிசையில் வந்த காயீன் & ஆபேலின் அடுத்த கட்ட பரிணாமம். இதனை வண்ணத்தில் உருவாக்கிட உழைத்த எல்பின் & தியோவுக்கு வாழ்த்துக்கள். இது தேவசி மற்றும் பென்னி ஆகியோரால் வரையப்பட்டு கதை புனையப்பட்ட விவிலியப் படக்கதை வரிசையில் முதலாவது நூலாகும். புத்தகங்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு எண்கள், மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவகாசி ஜேம்ஸ் ஆர்ட்ஸ் இதனை பிரசுரித்துள்ளது. இந்தத் தொடர் துவக்கத்தில் நீங்கள் வாசித்த அதே காயீன் & ஆபேல் இரு வண்ண சித்திரக்கதையின் ஓவியங்கள் மற்றும் கதை ஓட்டம்தான். வண்ணத்தில் அசத்தி இருக்கின்றனர். தமிழும் புதிய தலைமுறைக்குகந்த விதத்தில் வடிவமைப்புக்குள்ளாகி இருக்கிறது. படித்து மகிழுங்கள். இறைவனின் அன்பை ருசியுங்கள். பொறாமையும், அன்பும் சந்திக்கும் தருணங்களை மனதில் என்றும் நினைவு கொள்ளுங்கள். அன்பே வெல்லட்டும். அன்பே இறைவன். அன்பே நித்யம்.  




































அன்பே உருவான ஆபேலின்  வாழ்க்கை உங்கள்  வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தால் அதுவே இந்த சித்திரக்கதையின் சிறப்பாகும். இறைவனது முன்னிலையில் பொறுமையும், மனத் தாழ்ச்சியும் மட்டுமே நன்மைகளைக் கொண்டு வரும் பிரியமானவர்களே. இந்த நூலை நமக்காக கொடுத்துதவிய விசுவாச நூலகம், புனித தாமஸ் மலை தேசிய திருத்தலத்தைச் சார்ந்த  ரோமன் கத்தோலிக்க சபையினர் அனைவருக்கும்  தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்  வாசகர்கள் சார்பில் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். இந்த கூட்டு  முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும், வாசித்து மகிழ்ந்த அனைவருக்கும் இறைவனது இனிய ஆசீர் கிடைப்பதாக. 
நன்றி.
என்றும் அதே கிறிஸ்துவின்  அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 
குறிப்பு: பழைய விவிலிய சித்திரக்கதை வரிசை அதன் போக்கில் தொடரும். இந்த புதிய வண்ண விவிலியப் படக்கதை கிடைத்த நூல்கள் வரை தொடரும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக