செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

ஐஸ் மச்சான் ஐஸ்!

இது என்னவளுக்கு ஐஸ் வைக்க எழுதிய கவிதை. ஊர்ப்பெயரை மாற்றி உபயோகித்து உங்கள் அவள்களை குளிரப் பண்ணுங்கப்பா.
அன்பே போதையூட்டுவதால் உன் பெயர் ஆல்கஹாலா?
மயங்க செய்வதால் நீ ஹெராயினா?
மிரட்சி கொள்ள வைப்பதால் நீ பூலான் தேவியா?
செல்ல முறைத்தலில் நீ சூர்ய காந்திப் பூவா?
அடம் பிடிப்பதால் நீ என் இன்னொரு பிள்ளையா?
சதி பல செய்வதால் நீ பெண் சாணக்கியனா?
நாடகம் தினம் நடத்துவதால் நீ ஷேக்ஸ்பியரின் வாரிசா?
நீட்டி முழக்குவதால் நீ அறிஞர் அண்ணாவின் அடுத்த பிறவியா?
கொழுப்பு அதிகரித்ததால் நீ ஹிட்லரும் கூடவா?
விடையேதும் தெரியாமல் சட்டையைக் கிழித்தலையும் பித்தனடி நான்.
என் சிந்தனையை சிறை வைத்தவளே
உனக்கு வைக்கவா மெரீனாவில் ஒரு சிலை?
இல்லை, இல்லை வைக்கலாம் வா மணலூர்ப்பேட்டை மாநகர மண்ணில் இன்னொரு உலை!
இல்லையேல் சிந்தித்தே சிதறிடும் என் தலை.
இன்னுமா புரியவில்லை இந்த கிறுக்கல் கிறுக்கியவனின் நிலை?

1 கருத்து: