ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஜடாயு...மீண்டு வந்த நாயகன்...மீண்டும் வந்த நாயகன்...

வணக்கங்கள் பிரியமானவர்களே...!
தமிழ்..உச்சரிக்கையிலேயே இனிக்கும் மொழி..இதில் வெளியாகி ஐநூறு இதழ்களை வெற்றிகரமாகக் கொண்டு வந்து அத்தனையையும் சரித்திரமாக்கியது தினத்தந்தியின் பெருமை மிகு இதழ் ராணி காமிக்ஸ்.
அதில் சாகசம் செய்த நாயகர்கள் அனைவருமே யாராவது வாசகர்களை ஈர்த்தே வந்துள்ளனர். இன்று வரையிலும் நினைவு கூறப் பட்டும் வருகிறார்கள்.


கழுகு மனிதன் ஜடாயு..
இவனது சாகசங்கள் எங்கள் தலைமுறையினரை அதாவது தொண்ணூறுகளின் வாசகர்களைத் தாண்டி மில்லினிய வாசகர்களை அதிகம் கவர்ந்திருப்பது நிறைய வாசக நண்பர்கள் தங்கள் விருப்ப நாயகர்களாக கழுகு மனிதன் ஜடாயுவையும், கரும்புலியாரையும் (இவர் பெயரைக் கேட்டாலே அலறி அடித்து ஓடிய கூட்டத்தில் நானும் ஒருவன்..கதைகள் வேதாளர் வாசித்தவர்களுக்குக் கடுப்பேற்றும். அதுதான் உண்மையான காரணம். நான் வேதாள மாயாத்மா அபிமானி..) குறிப்பிட்டது கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன்.

நிற்க..
கழுகு மனிதன் ஜடாயு 27.01.2017 முதல் மீண்டு வந்திருக்கிறார். தினமலர் - சிறுவர் மலர் வாயிலாக....தினத்தந்தியின் ராணி காமிக்ஸ் வாசகர்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது போல தின மலர் சிறுவர் மலர் வாயிலாக காமிக்ஸ் வாசிக்கும் நெஞ்சங்களைக் கொள்ளையிடத் "திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்று ஜடாயு உங்கள் இல்லங்களின் கதவுகளைத் தட்டுகிறார். தவறாமல் அவரது தொடர் கதையை வாங்கி வாசித்து இரசியுங்கள். கழுகு மனிதன் ஜடாயு ராணி காமிக்ஸில் கறுப்பு-வெள்ளையில் சாகசம் புரிந்தார். இங்கே அவர் வண்ணத்தில் அதிரடிக்கிறார் என்பது இனிமையான அதிர்ச்சி... மறவாமல் வாசியுங்கள்...
ராணி காமிக்ஸில் இதழ் 388 ஆகஸ்ட் 16-31, 2000 அன்று கழுகு மனிதன் மாய வலை என்கிற கதையில் அறிமுகம் கண்டார். கதையின் அறிமுகப்பகுதியில் அவரது பின்னணி முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. 
இந்தப் பின்னணியை மனதில் இருத்தி கழுகு மனிதன் ஜடாயுவையும் அவரது சாகசங்களையும் இரசிக்கத் தயாராகுங்கள்.

பாகம்-I 

பாகம் II








பிற்சேர்க்கை:
வாண்டுமாமா அவர்களது படைப்பாக Nov-1993 யில்கழுகு மனிதன் தலை நீட்டியிருக்கிறார். அதன் கதை விவரங்கள் அடங்கிய பக்கம்...நினைவு படுத்தியமைக்கு நன்றி திரு.ஞானசேகரன் சார்..திரு.சிவ்..நேரமின்மை காரணமாகக் கிடைத்த இடைவெளியில் எல்லாம் சித்திரக்கதைகளைக் குறித்து என்னால் இயன்ற முயற்சிகளை செய்து வருவதால் நிறைய தகவல்கள் விடுபடும். அவ்வப்போது விமர்சிக்கும்போது மட்டுமே அவற்றை நிறைவு செய்ய எண்ணம் வரும். அதற்குத் தூண்டுகோலாக அமைந்தமைக்கு உங்களுக்கு நன்றிகள்...இந்த கழுகு அந்த கழுகு அல்ல.. அது வட மாநில ஓவியர், கதை ஆசிரியர்களின் சேர்க்கையில் விளைந்ததொரு முத்து..
வாண்டுமாமா பேட் மேனின் பாதிப்பில் உருவாக்கியதொரு சித்திரமாகவே இதில் ஜடாயுவைக் காண்பித்திருப்பதாக கதைச் சுருக்கம் தெரிவிக்கிறது. ராமாயணத்தில் ஜடாயு தனது உயிரைப் பொருட்படுத்தாமல் ராவணனுடன் சீதா தேவிக்காக மல்லுக்கட்டி மாய்வார். அவர் இறக்கும் முன் ராமனிடம் சீதையைக் கடத்தியது ராவணனே என்பதைத் தெரியப்படுத்தி மாண்டு விடுவார். அதே ஜடாயுவின் வம்சா வழியில் வந்த ஒரு கழுகு முனி கொடுக்கும் சக்தியைப் பெறும் ஜகதீசன் அதனைக் கொண்டு சமூகத்தின் அநீதிகளைத் தட்டிக் கேட்பதாக அவரது பாத்திரப்படைப்பு இருக்கும்.







எனவே ராணி காமிக்ஸ் நாயகன் புதிய வண்ணக்கழுகாரை ஆதரியுங்கள். ஒவ்வொரு வாரமும் தினமலர்-சிறுவர் மலரில் உங்களுக்காகக் காத்திருப்பார்...


இது மார்ச்-2017
கழுகு மனிதன் தொடர் சிறார்களுக்கான அம்சங்கள் இல்லாததால் நிறுத்தப்பட்டு விட்டது. கழுகு மனிதன் ஜடாயு என்கிற பெயரே நல்லதொரு பெயர்தான். நமது கழுகாழ்வாரை நினைவுபடுத்தும் பெயர். கழுகு தனித்து வானில் வட்டமிடுகையில் பறவை இனங்களுக்கெல்லாம் அதுதான் அரசன் என்கிற அறிவிப்பு அதில் இருக்கும். கழுகு தன் கூட்டை வானுயர்ந்த மலைகளின் மீது கட்டும். கழுகின் சாம்ராஜ்யம் பெரிது. எந்தப் பிராணியும் அதன் பார்வைக்குத் தப்ப முடியாது. அதன் வேட்டையாடும் வேகம் பழங்கால மன்னர்கள் தம் படையுடன் போருக்குப் புறப்படுவது போன்றிருக்கும். ஆமாம்...கழுகு ஒரு தனி நபர் ராணுவம்...

                                                                     பாகம்-III





கழுகு மனிதன் என்கிற கற்பனை பல எல்லைகள் நோக்கி சிறாரை எளிதாக இழுத்துச் செல்லக் கூடிய திறன் வாய்ந்தது..
காலம் கழுகு மனிதனை மீண்டும் ஏதாவது ஒரு ரூபத்தில் கொண்டு வரும் வரை கழுகு தனக்கான இரைக்குக் காத்திருப்பது போல காத்திருப்போம்..
இதுவரை வெளியான தொடரின் சில பகுதிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு..

                                                                   பாகம் IV



தொடர் தொடர வேண்டுமானால் தினமலர் நிர்வாகத்துக்கு ஆளுக்கொரு கடிதம் எழுதிப் போடுங்களேன் நண்பர்களே???

இன்னும் ஒரே ஒரு பாகத்துடன் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது. கிடைத்தால் இங்கே பதிவிடுகிறேன்..

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய தோழன்...ஜானி 

5 கருத்துகள்:

  1. I remember only Parvathi chitra kathai Kalugu manithan Jadayu. Pls display some pictures from Rani comics "Kalugu manithan Jadayu" if possible

    பதிலளிநீக்கு
  2. நான் கழுகு மனிதன் ஜடாயுவின் கதை ஒன்றே ஒன்று - வாண்டுமாமா எழுதியது - மட்டும்தான் படித்திருக்கிறேன். இராணி காமிக்சிலும் கழுகு மனிதன் ஜடாயுவின் கதைகள் வந்தன என்பதே எனக்கு இப்பொழுது நீங்கள் சொல்லித்தான் தெரியும். எனவே, அவரது விசிறி எனவெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், பொதுவாக நான் படக்கதைகளின் விசிறி. எனவே, கட்டாயம் படிப்பேன். தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. ithoda english version name ennanu sollunga anna .. athulayavathu padikaren

    பதிலளிநீக்கு