ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

வைரக்கொள்ளையும் முகமூடித்திருடனும்....நரேஷ்..


 Image may contain: 2 people, selfie and closeup

இனிய காலை வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இந்த பரபரக்கும் ஆக்ஷன் கதையினை உங்களுக்கு வழங்குபவர் திரு.நரேஷ் குமார். நண்பரிடம் இருந்து எத்தனையோ முறை அரிய புத்தகங்களை வாங்கி வந்து ஸ்கான் செய்திருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் புன்னகையுடன் எடுத்துக் கொடுப்பார். எந்த புத்தகம் என்றாலும் அது எத்தனை அபூர்வமானது என்றாலும் நம்பிக் கொடுத்து அனுப்புவார். அத்தகையதொரு தங்க மனசுக்கு சொந்தக் காரர்.. நமது நண்பர்களில் எனக்கு மிகவும் காலங்கடந்து அறிமுகமானவரும் இவர்தான். மிகவும் நெருக்கத்தில் வசித்தவரும் இவர்தான். ஆட்டோ உதிரிபாக விற்பனை அங்காடி ஒன்றை நடத்தி வரும் இவர் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர். நண்பரை அவரது வியாபாரஸ்தலத்தில்தான் அதிகம் சந்திக்க நேர்ந்தது. இதுவரை அவரது சேமிப்புக்களை நான் நேரில் சென்று கண்டதில்லை. கேட்டிருந்தாலும் மறுத்திருக்கவும் மாட்டார். ஆயினும் என்ன தேவையோ அதனைக் கேட்டு வாங்கி மீண்டும் கொடுத்திருக்கிறேன். இதோ அப்படி நண்பரிடம் இருந்து நண்பர்களே உங்களுக்காக பெற்று வந்ததொரு கதைதான் இந்த வைரக் கொள்ளையும் முகமூடித் திருடனும்..

திரு.எம்.கே.தாயப்பன் அவர்களது தயாரிப்பில்....
ஆசிரியர் திரு.செல்வம் அவர்களின் வரிகளில்....
செல்வா பதிப்பகத்தார் திருத்தங்கலில் இருந்து...
இருபது காசு விலையில்...
அயல்நாட்டவருக்கு முப்பது காசுகள்...
சேட்ஜி துக்காராம்..எடுத்த எடுப்பிலேயே வைரத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது அவரை வழிப்பறி செய்ய முயற்சி நடக்கிறது...இன்ஸ்பெக்டர் வேதகிரி அவரைத் தடுத்துக் காப்பாற்றுகிறார். அந்த நேரத்தில் இரண்டு கோடிப் பெறுமானமுள்ள வைரங்களடங்கிய  சூட்கேஸ் கொள்ளை போகிறது..பின்னர் நடந்தது என்ன? மிகவும் வேகமான பரபரப்பான கதையை  திரு.செல்வம் அவர்களது எழுத்து நடையில் வாசிக்கவிருக்கிறீர்கள்....




















நிறைய புத்தகங்கள் அவ்வப்போது நண்பர்களால் தரவேற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் உங்களுக்கு வாசிக்க நேரம் கிடைப்பது கண்டிப்பாக சிரமம்தான். எப்போது உங்களால் முடிகிறதோ அப்போது கட்டாயம் வாசித்து விட்டு இந்தக் கதை குறித்து நான்கு வரிகளை எழுதினால் நானும் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அன்பளிப்பு செய்த நண்பர் நரேஷ் குமாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். செய்வீர்களா?
இந்தக் கதைக்கான பிடிஎப் 
லிங்க்...

இந்த நாளில் நண்பர்கள் சம்பத் மற்றும் குணா இணைந்து வெளியிட்டுள்ள ரத்னபாலா 1986 ஆம் ஆண்டு இதழ் வெளியாகியுள்ளது.. மொபைல் ஸ்கான் என்பதால் ஆங்காங்கே சற்றே பிசிறடித்தாலும் வாசிப்பதற்கு ஒன்றும் தடையில்லை. அபூர்வமான அந்த இதழை வெளியே காண்பிக்காமல் எத்தனையோ இடங்களில் ஒளிந்துகொண்டு இருக்கும் நிலைமையில் இத்தனை சிரமத்துக்கிடையில் நண்பர்கள் கொண்டு வந்துள்ள முயற்சியைப் பாராட்ட வேண்டும் நண்பர்களே.
இதோ அதற்கான பிடிஎப் லிங்க்...

என்றும்  அதே அன்புடன்...
 உங்கள் இனிய நண்பன் ஜானி..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக