வெள்ளி, 23 மார்ச், 2018

நரக மனிதர்..ஹெல் பாய்...

மைக் மிக்நோலா...எழுத்தாளர் ப்ளஸ் ஓவியர். இந்தப் படைப்பை சான்டியாகோ காமிக் கானில் 1993ல் வெளியிட்டார். 
எம்மி விருது பெற்ற பிரபல நடிகர் ரான் பெர்ல்மேன் நடிப்பில் 
2004 & 2008ல் திரைப்படமாகவும் உருவெடுத்து நம்மை மிரட்டியவர்தான் இந்த ஹெல் பாய். வீடியோ கேம்களாகவும் இரு அனிமேஷன் திரைப்படமாகவும் ஹெல் பாயின் உலகம் விரிந்து பரந்ததொன்று.. கதை? நரக மனிதனாக பிறப்பெடுக்கும் ஹெல் பாயின் பிறந்த தினமாக எழுத்தாளர் குறிப்பிடுவது... அக்டோபர் ஐந்து 1617.. சூனியக்காரியான தாயார் சாரா..தந்தை அசாயேல் ஒரு நரக பிரபு.. அவன் தனது மனைவி மரணப்படுக்கையில் இருப்பதால் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு தன் சூனியக்காரி மனைவியை எரித்து வெளியே எடுக்கிறான். வலது கரத்தை வெட்டி எறிந்து விட்டு ஒக்ட்ரு ஜஹாத் என்கிற சிலையில் வலது கரமான அழிவின் கரத்தினை தனது குழந்தைக்குப் பொருத்துகிறான். நரக இளவரசிக்குத் தகவல் தெரிந்து விடுவதால் தனது குழந்தையை நரகத்தை விட்டு வெளியேற்றி தான் கைதாகிறான். ரஸ்புடீன் நாஜிகளுக்கு உதவ இவனை அழைக்க..அங்கே வரும் நேச நாட்டுப் படைகள் இவனைக் கைப்பற்ற...அதிலிருந்து இவன் புரபசர் ட்ரெவர் கண்காணிப்பில் வளர்ந்து..BPRD (Bureau of paranormal research and defense) அமைப்பில் இணைந்து நரக ஜந்துக்கள் எங்கே தாக்கினாலும் அவர்களை அழித்தொழித்து பூமியைக் காக்கும் அவதாரமாகிறார் இந்த நரக மனிதர்..ஹெல் பாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக