திங்கள், 9 ஏப்ரல், 2018

ஜானி ஹசார்ட்



வெற்றிகரமாக ஆத்திச்சூடியின் நூறாவது அறிவுரையை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டேன். நல்லதை எடுத்துக் கொள்ளலாமே.. வாழ்த்துக்களும் அன்பும்...
ஜானி ஹசார்ட்--ஓவியர் பிரான்க் ராபின்ஸ் கைவண்ணத்தில் 1944-1977 வரை காமிக் ஸ்ட்ரிப்களாக தினசரிகளிலும் ஞாயிறு மலர்களிலும் தொடர்ந்து வந்த கதை வரிசையாகும். இதனை கிங் ப்யூச்சர் சிண்டிகேட் வெளியிட்டது. உண்மையில் பிரான்க் ராபின்சினை ஏஜென்ட் எக்ஸ் 9 தொடர்களை வரைவதற்காகவே கிங் பியூச்சர் சிண்டிகேட் அணுகியது.. அவர் அதற்கு பதிலாக உருவாக்கியதே இந்த ஜானி ஹசார்ட். ஒரு பைலட்டின் கதை இது. 1944ல் ஒரு திங்கள் கிழமை மாதம் ஜூன் -5 ல் துவங்கிய இந்தக் கதையின் நாயகன் நமது ஜானி ஹசார்ட் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவ வான் வீரராக இருந்து பின்னர் பனி யுத்தத்தில் பங்கேற்கிறார். அதன் பின்னர் உலகம் முழுக்க சுற்றி வரும் ப்ரீலான்ஸ் பைலட்டாக இயங்குகிறார். எனவே சர்வதேச அளவில் இந்தக் கதை இறக்கை கட்டிப் பறக்கிறது. ஜானி தனது வாழ்வில் விதவிதமான நபர்களை சந்திக்கிறார். அழகான பெண்கள், கடத்தல்காரர்கள், விஞ்ஞானிகள் என மாறுபட்ட கதைகளுடன் சாகசப்பயணத்தை நாமும் மேற்கொள்ள ஏதுவாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாண்டர்ட் காமிக்ஸ் நிறுவனத்தார் ஆகஸ்ட் 1948-1949 வரை காமிக்ஸாக இந்தக் கதை வரிசைகளைக் கொண்டு வந்தனர். பின்னர் பசிபிக் காமிக்ஸ் க்ளப் சண்டே தொடர்களை மட்டும் வண்ணத்தில் புத்தகமாக கொண்டு வந்தனர்.

2 கருத்துகள்:

  1. ஆத்திசூடியில் சதம் அடித்த ஜானி அண்ணணுக்கு வாழ்த்துக்கள்.
    ஹி.. ஹி.. இனிமேல்தான் மத்த 99 ஆத்திசூடியை படிக்கனும்..
    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு