வியாழன், 28 ஜூன், 2018

023-யோபு..பொறுமையே சிறப்பு...காத்திருப்பதே இனிமை...விவிலிய சித்திரக்கதை வரிசை...


வணக்கங்களை அள்ளித் தெளித்து உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் நட்பூக்களே... இன்றைக்கு நான் காட்சிப்படுத்தியிருப்பது பொறுமையின் உச்சமாக திகழ்ந்த ஒரு மனிதனின் வரலாற்றை.. யோபு.. இவர் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல. எந்த விதமான அதிசய ஆற்றலும் இவரிடம் இருந்ததில்லை. சாதாரணமான மனிதர். இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை கொண்ட சாதாரண மனிதர்.. இவரை விவிலியம் தனது வரலாற்றில் சுட்டிக் காண்பிக்கிறது.. இவர்தான் யோபு.. இறைபக்தி நிரம்பிய இவரது வாழ்வில் அனைத்துமே சிறப்பாக போய்க்கொண்டு இருந்தது. ஒரு இருண்ட தினம் வந்தது. அவரது வாழ்வில் வீசிய வசந்தம்  அகன்று அனல் வீசத்தொடங்கியது. சோதனைகள்..சோதனைகள்..உச்சமான வேதனைகள்..அனைத்தும் இவரைத் தாக்கின.. தவறே செய்யாமல் வாழ்ந்து வந்த இவரது வாழ்வின் சோதனைகளைக் கண்டு உற்றார் உறவினர் சுற்றம் ஏன் அவரது மனைவி கூட அவரை வெறுத்து ஒதுக்கினார்கள்.. அவர் தன் வாழ்வின் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் இறைவனிடம் ஒப்படைத்தார்.. அதன்பின் என்ன நடந்தது...இதோ யோபு உங்கள் முன்பு....  
















இந்த விவிலியம் சுட்டும் மாந்தர் யோபுவின் வரலாற்றை அறிந்து கொள்ள 

இந்த பிடிஎப் உருவாக்கத்துக்கு கொடுத்து உதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கு நன்றியும் அன்பும்...
இந்த எளிய உள்ளம் கொண்ட சாதாரண மனிதரின் வரலாற்றை எந்த வாட்ஸ் அப் குழுவிலும், எந்த ட்விட்டர் பக்கத்திலும், எந்த முகநூல் பக்கத்திலும் தாராளமாக எடுத்து பகிரலாம்.. அனைத்தும் உங்கள் விருப்பமே.. இறையாசீர் கிட்டட்டும்.. நன்றியும் அன்பும்...
உங்கள் இனிய நண்பன் ஜானி... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக