வியாழன், 17 அக்டோபர், 2019

அடிமை ஜனங்கள்_ஆல்வார் மேயர் சாகசம்_திருப்பூர் குமார்_சிறுவர் மலர் சித்திரத்தொடர்

இனிய வணக்கங்கள் டியர் வாசக்ஸ் அண்ட் வாசகீஸ்.. 
சிறப்பான கதைகளை முன்பெல்லாம் தேடிப்பிடித்து சிறுவர் மலரில் வெளியிட்டு உலகைக் கண்முன்னே மழலைகளுக்காக காண்பித்து வந்தது தினமலர் சிறுவர்மலர். எக்கச்சக்கமான கேள்வி பதில்கள், நம்பினால் நம்புங்கள், செய்தித்துணுக்குகள் ஆகா..ஆஹா.. கிராமப்புறத்தில் வசிக்கும் என்போன்ற சிறுவர்களுக்கான கலைப் பொக்கிஷமாகவே தினமலர் சிறுவர்மலர் திகழ்ந்தது என்றால் மிகையாகாது...
அதில் ஒரு கதையான அடிமை ஜனங்கள் கதையை நண்பர் திரு.குமார் திருப்பூர் தனது கைபேசி வழியாக சிறப்பாக எடிட் செய்து நமக்காக வாசிக்க கொடுத்துள்ளார். அந்த சிறுவர் மலர்களை அவர் தேடிப்பிடிக்க எத்தனை கடும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பார் என்பதை நாம் நினைவில் கொண்டு அவரை பாராட்டி மகிழ்வோம்.. 
நிற்க 
நமது கதாநாயகன் ஆல்வார் மேயர் ஒரு ஸ்பானிஷ்காரர். பெரு நாட்டில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது நண்பன் ஒரு ஆதிவாசி இனத்தவர். இருவரும் இணைந்து பல ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்வதும் அங்குள்ள ஆதிவாசிகள் ஸ்பானிஷ் இராணுவம் அல்லது தனிப்பட்ட கொடூரர்கள் கையில் அகப்பட்டு தவிக்கும் வேளையில் நமது கதாநாயகர் எப்படி தந்திரமாக அவர்களை விடுவிப்பார் என்பதையே இந்த கதையும் மற்ற கதைகளும் எடுத்துக் காண்பிக்கின்றன.. இதோ வாசிப்புக்கு எளிதாக மீடியா பயர் லிங்கும் முன்னதாக உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு வசதியாக தனித்தனி படங்களும் உங்களுக்கு வழங்குகிறோம். 













பிடிஎப் தரவிறக்கம் செய்து கொள்ள:

2 கருத்துகள்: