ஞாயிறு, 27 அக்டோபர், 2019

போர்க்களத்து பூ_சௌதாமினி_Comics PDF Times

மின்னல் வேக கதையமைப்பில் சௌதாமினி எழுதி இருக்கும்


 போர்க்களத்து பூ

 ஹிட்லரின் மரணம் இன்னொரு கோணத்தில்.. விறுவிறுப்பான தீபாவளி திருப்பம்

அரக்கத்தனமான கொடூரச் செயல்களை செய்வதில் பெருவிருப்பம் ஹிட்லரின் நாஜிப் படையினருக்கு!! அதன் உச்சமாக தப்பிப் போன தந்தையை பற்றி சொல்லாதற்காக ஒரு யூத பெண்ணை சுய நினைவாக இருக்கையிலேயே அவள் வயிற்றை கிழித்து நிறை மாத சிசுவை வெளியே எடுக்கிறான் ஒரு தளபதி.. போர்க்களத்து பூவான அந்த குழந்தையையும் ஆசிட் குடுவையில் மூழ்கடிக்க முயலும் போது திராவகம் அவன் முகத்திலேயே வீசப்படுகிறது. வீசியவன் ஜெர்மனியின் ஸ்டேட் படையின் சிப்பாய் வார்னர்!

அங்கிருந்து தப்பும் வார்னர் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் தந்தையான செபாஸ்டியானையம் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த அவளது தங்கை வெனிசூலாவையும் இன்னும் பலரையும் காப்பாற்ற முயல்வதுடன் ஹிட்லரின் படையுடனும் மோதுகிறான்.. முதுகுத்தண்டை சில்லிட செய்யும் சற்றும் எதிர்பாராத திருப்பங்களும், படபடப்பும் சுறுசுறுப்புமாய் ஜெட் வேகத்தில் நடக்கும் சம்பவங்களும், கத்தி முனையில் நடப்பதைப் பார்க்கிலும் லாவகமான சாகசங்களும் நிறைந்திருக்கும் இந்த தொடர்கதை படிக்கும்போது பல இடங்களில் மயிர்க்கூச்செரியத் வைக்கும்! ஏற்கனவே பலத்த வரவேற்பைப் பெற்ற ஜென்மக் கைதிகளும் ஒரு சின்னப் பெண்ணும் கதையை எழுதிய சௌதாமினியின் அதே ரக விறுவிறுப்பான இன்னொரு படைப்பு இது!

போர் முடிந்த பின்பு கிடைத்த ஹிட்லரின் சடலத்தில் அவன் தற்கொலை செய்ய உபயோகப் படுத்திய துப்பாக்கியின் ஒரு குண்டைத் தவிர இன்னொரு குண்டும் அவனது கபாலத்திற்குள்ளாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.. இது சரித்திர உண்மை.. அந்த இன்னொரு குண்டு எப்படி உட்புகுந்தது என்பது இந்தக் கதையின் மையக் கருத்தாக சரித்திரச் சம்பவங்களோடு கற்பனையும் கலந்து எழுதப்பட்டு தூள்பரத்துகிறது.

அதோடு இது நாவல் வடிவில் இல்லாமல் பாக்யாவில் தொடர்கதையாக வந்தபோது தொகுக்கப் பட்டிருப்பதால் கதை நடந்த போது உள்ள காலத்திய அசல் புகைப்படங்கள் நூற்றுக் கணக்கில் இருப்பது இந்தப் பிடிஎஃப்பின் இன்னொரு சிறப்பு! அத்தோடு சேர்த்து ஓவியர் ஜெயராஜ் தூரிகை தீட்டிய சித்திரங்கள் இன்னும் அழகு!

அதிரடி சரவெடி பாணியில் நகரும் இந்த கதை தீபாவளி பட்டாசாக பிடிஎப் வடிவில் உங்களுக்கு

http://bit.ly/2JrOzyF

 மின்னல் வேக கதையமைப்பில் சௌதாமினி எழுதி இருக்கும்

 போர்க்களத்து பூ

 ஹிட்லரின் மரணம் இன்னொரு கோணத்தில்.. விறுவிறுப்பான தீபாவளி திருப்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக