வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

கேலிக்கும் உண்டு எல்லை...வினாடி கதைகள்..ஜானி



அவன் நடந்தான்.. முகத்தை நன்றாக மறைத்த முகமூடியோடு நடந்தான்.. அதேபகுதியில் ஆளில்லாத வீட்டில் புகுந்து கொள்ளையடித்த நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்களோடு தைரியமாக தெருவில் இறங்கி நடந்தான்.. நல்ல வெயில்.. யாருமே அவனை கண்டு கொள்ளவில்லை.. ஆங்காங்கே தென்பட்ட வேலைவெட்டியற்ற இளைஞர்கள் கிசுகிசுத்துக் கொண்டே விலகி சென்று விட்டனர்..  விடுவிடுவென எவரையும் கண்டுகொள்ளாது மூலைவரை நடந்தவன் அங்கிருந்த எண்ணில்லாத தன் பைக்கை முறுக்கிப்
போய் போக்குவரத்தில் கலந்து மாயமானான்.. போலீஸ் அன்று மாலையே ஆஜர்... ஏரியா இளைஞனொருவன் சொன்னான் நேற்றும் இப்படித்தான் சார் முகமூடியோடு ஒருவர் நடந்து வந்தார்.. கண்டுக்காம போனா விட்டுட்டாங்க...யார்னு நிறுத்தி கேட்டால் கிண்டல் பண்ணி வீடியோ போட்டுட்டாங்க.. கேட்டால் ப்ராங்க் வீடியோன்னாங்க.. இதுவும் அதுதான்னு நாங்க நினைச்சி விலகிட்டோம்....

2 கருத்துகள்: