செவ்வாய், 24 மார்ச், 2020

இப்படிக்கு இயமன்.. ஜானி சின்னப்பன்



நித்தம் நித்தம்
நுண்மந்தன்னை
நுண்ணோக்கி
கொண்டு
நுணுகி
நோக்கும்
மானிடா..
இன்றந்
நுண்மந்தன்
தவம்கலைந்து
நெற்றிக்கண்
நெறித்துனை
நோக்கும்
நாளடா..
எட்டுத்திக்கும்
சந்துபொந்து
ஓடி ஒளியும்
போதிலும்
இரும்பைப் பற்றும்
காந்தமாய்
நாடித்தேடி
ஓடியே வருது
பாரடா..
உந்தன்
உள்ளந்தன்னில்
கள்ளம் கொண்டதை
முகமூடியிட்டு
மறைத்தாலும்
விதி வீசிச்
செல்லும் வலை
மெல்லமெல்ல
இறுகிடுமே..
போவதென்ன
வருவதென்ன
உந்தன்
கையின்
இட்டமா..
வரைந்திடும்
விதியினை
வென்று நீயும்
காட்டடா..
உன் இனந்தனை
வேரறுத்தாய்..
கொள்ளையிட்டாய்..
தீயிட்டாய்
தீமையெனும்
கரும்புகை
எட்டுத் திக்கும்
எழுப்பினாய்..
வெம்மை
தண்மை
வெள்ளம்
புயல்
நிலநடுக்கம்
கோபம்
கொண்டுன்னை
வதம் செய்தேன்..
நன்மையெனும்
கவசங்கொண்டு
நாளும்
நலமே
புரிந்திட்டால்
உந்தன்
நிலையை
நினைத்து
நித்தம்
நன்மைகள்
நடத்திடின்
இகபரம்
யாதும்
கொண்டாடிடும்..
இப்போது
ஓடடா..
ஓடடா..
நுண்மத்தை
வென்றிடும்
நுட்பத்தை
சீக்கிரம்
காணடா...
கண்டும்
நீ
திருந்திடா
தருணம்
வந்து
வாய்க்கையில்
நுண்மந்தானல்ல
நூறாயிரம்
வழிகளுண்டு
என்னிடம்..
கடும்புயலோ
கொள்ளை நோயோ
வெவ்வேறு
வேறுவடிவம்
கொண்டுனை
துரத்தி வருவேன்
பாரடா
பாரடா..

2 கருத்துகள்:

  1. காமிக்ஸ் இருக்கும் ன்னு பிளாக் வந்தா ஜயகோ...
    கவிஞர் 'ஞா(ஜா)னி' இருக்காரு...
    மீ பாவம்...
    இப்படி கவிதை போடறதுக்கு கொரோனா வ கொரியர் ல எனக்கு பார்சல் பார்சல் பண்ணிடுங்க.

    ஆனா சும்மா சொல்லகூடாது
    கவிதை நல்லாத்தான் இருக்குங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...ஏதோ நள்ளிரவில் விழிப்பு வந்து தோணித்து சிவா.. எழுதிட்டேன்.. திட்டு விழுந்தாலும் வாங்கிக்கற யோசனைதான். காமிக்ஸ் பலது பட்டை தீட்டுறேன். ஆங்காங்கே விதைச்சது முளைச்சி வரும்.. காத்திருங்க..

      நீக்கு