சனி, 5 டிசம்பர், 2020

மிக்கி அண்ட் கோஷ்_ரத்ன பாலா இணைப்பு_வெள்ளை இளவரசி புகழ் தோழர் சரவணன்

வணக்கம் நண்பர்களே.. பாலர் வண்ண மாத மலர் "ரத்னபாலா"வின் தீபாவளி இலவச இணைப்பாக உருவான கதை மிக்கி அண்ட் கோஷ்..  மணிமேகலாவின் கதைக்கு லலிதா சித்திரம் தீட்டி அருமையான கதையொன்றை தந்திருக்கிறார்கள்..வெளியான ஆண்டு தெரிந்தவர்கள் கூறலாம். 
கதைக்களம் : இவ்வுலகின் சூழ்ச்சி..வஞ்சகம்.. ஆகியவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிறார்களுக்கு விலங்குகளின் ராஜ்யத்தில் வைத்துப் பாடம் எடுத்திருக்கிறார்கள்...
நோரிஸ் நரியும், டெவில் புலியும் மற்ற அப்பாவி மிருகங்களின் குட்டிகளை உணவாக்கிக் கொள்ள சதித்திட்டம் தீட்டுகின்றன.. அந்த காட்டில் கடும் பஞ்சம்.. அதனை எப்படி எதிர்கொள்வது என்று கூட்டம் நடத்துவதாக பேர் பண்ணிக் கொண்டு கூட்டத்துக்கு அப்பாவி மிருகங்களை வரவழைத்து விட்டு அவற்றின் குட்டிகளை திருடிப்போய் விடுவதாக திட்டம்.. ஆனால் சிவகாசியிலிருந்து கிளம்பும் மிக்கி தன்னுடன் வெடிகுண்டுகளைக் கொண்டுவர ஆட்டம் சூடு பிடிக்கிறது.. குழந்தைகள் காக்கப்பட்டனரா? பெற்றோர் எப்படி இந்த பிரச்சினையை சமாளித்தனர் என்ற கதையை எனது பிறந்த தின அன்பளிப்பாக நண்பர் ஆசிரியர் திரு.சரவணன் அவர்கள் கொடுத்து ஆச்சர்யமூட்டினார். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...
 

















பிடிஎப் தரவிறக்க சுட்டி:


 

4 கருத்துகள்: