திங்கள், 11 ஏப்ரல், 2022

புதைந்த நீதி_ரங் லீ காமிக்ஸ் ஏப்ரல் வெளியீடு

 

ரங் லீ  காமிக்ஸின் இந்த ஏப்ரல் 2022 மாத வெளியீடாக மலர்ந்திருக்கிறது புதைந்த நீதி. மொத்தம் ஆறு கதைகள். வண்ணத்தில் முப்பத்து ஆறு பக்கங்களில் திகில் விருந்து படைத்திருக்கிறது இந்த மாத காமிக்ஸ்.





-புதைந்த நீதி

-ரத்தக் காட்டேரியாகிய நான்

-மெழுகு மனிதன்

-குருதி மழை

-ஊசி வாயில் மரணம்

-நிஜமா? பிரமையா?

என்ற ஆறு தலைப்புகளும் ஆர்வமூட்டுவதுடன் கதைக்குள் நம்மை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டு விடுகின்றன..



கண்ணீரோடு கொலைக்கரங்கள் நீள துவங்கும் கதைக் கொத்துக்கள் இறுதியில் மரணமடைந்தும் தனது காப்பியத்தைப் பூரணமடைய செய்த ஆன்மாவின் நிம்மதியுடன் முடிவடைகின்றன.. அத்தனை கதைகளிலும் வித்தியாசமான, அமானுஷ்யமான, மர்மமான, திகிலான அனைத்து விதமான உணர்வுகளையும் வண்ணங்களை தெறிக்க விட்டுப் பரிமாறி இருக்கின்றனர் ரங் லீ பதிப்பகத்தார்.



நமது காமிக்ஸ் வாசக வட்டாரத்தை அதிர வைத்த தோழர் பழனி வேலின் மறைவு.. அவரது குடும்ப நலத்திற்காக இந்த மாத வெளியீடான இந்த புதைந்த நீதி புத்தகத்தின் வருமானம் மொத்தத்தையுமே அப்படியே தரவிருக்கிறார்கள் ரங் லீ காமிக்ஸ். வாங்கி வாசிக்கும் நம் வாசகர்களுக்கும் மன நிறைவு கொடுக்கும் அருமையான விஷயம் இது.  

 


நம்மாலான ஆதரவாக காமிக்ஸ் வாங்கி வாசிப்போம். பிள்ளைகளுக்கும் காமிக்ஸ் வாசிப்பை கற்றுத்தருவோம். அவர்கள் அழகான உலகில் சித்திரக்கதைகளுக்கும் இடம் உண்டாக்கித்தருவோம். 
என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 

4 கருத்துகள்:

  1. எனக்கு பழனிச்சாமி யார் என்றுகூட தெரியாத, இருப்பினும் நம்மைப்போல காமிக்ஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்தேன்.
    சிறு பிள்ளைகளை விட்டு விண்ணுலகம் சென்றதை அறிந்து வருத்தம் அடைந்தேன. புதைந்த நீதி இந்தப் புத்தகம் விற்பனையகம் நிதி முழுவதுமாக அவரது குடும்பத்துக்கு போகப் போவதை எண்ணி, இதுவரை ரங்கிளி காமிக்ஸ் பக்கம் போகாத நான் மொத்தமாக பத்து புத்தகங்களை வாங்கினேன்.
    மேலும் திகில் காமிக்ஸ் விரும்பியான எனக்கு ரங்கிலி வெளிவிட்ட அனைத்தும் திகில் கதைகள் என்பதை அறிந்து , அனைத்தையும் வாங்கி விட்டேன்.
    அதில் ஒரு சிறு தொகையை பழனிவேல் குடும்பத்திற்கு வருவது மகிழ்ச்சியை

    பதிலளிநீக்கு
  2. புத்தகத்தின் தயாரிப்பு அருமை, ஆனாலும் கதைகளில் இன்னும் கொஞ்சம் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும், அட்டைப் படத்தைத் தவிர உள்ள பக்கங்கள் ஜெராக்ஸ் போன்ற காட்சி அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ரங்லீக்கு தெரிவிக்கிறேன்..

      நீக்கு