புதன், 22 மார்ச், 2023

001_வீர பிரதாபனின் சாகசங்கள்_கே. வி. கணேஷ்_ஜி காமிக்ஸ் அறிமுகம்

இனிய சித்திரக்கதை வாசகர்களுக்கும் வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும் வணக்கங்கள். தாங்கள் இதுவரை தந்து வரும் நல்லாதரவுக்கு நன்றிகள். இதோ இந்த பதிவில் புத்தம் புதிதாகப் பூத்திருக்கும் G Comics முதல் இதழினை வரவேற்போம் வாருங்கள்..

திரு. கே. வி. கணேஷ் நமது அன்பு நண்பர்களில் முக்கியமானவர். அவரது மொழிபெயர்ப்பில் எத்தனையோ அருமையான கதைகளை வாசித்து மகிழ்ந்திருப்போம். அவரது அன்பு நிறைந்த நற்செயல்கள் சமீபத்தில் மறைந்த நம் நண்பர் தெய்வத்திரு.பழனிவேல் அவர்களின் குடும்பத்துக்கான உதவித் தொகையை பெற்றுத் தந்த விதத்தில் நாம் கண்டதே.

அவரது புதிய முயற்சியான ஜி காமிக்ஸ் லோகோ இதுதான்.


லோகோவுடனே விலையையும் அதன் வெளியீட்டு எண்ணையும் குறிப்பிட்டுள்ளது ஒரு புதுமை எனலாம்.  
அட்டைப்படம்: 

கம்பீரமான வீரனும், கண்ணாலேயே கவர்ந்திருக்கும் கன்னியும், கோபாவேசத்துடன் விஸ்வரூபமாக தோன்றும் அரக்கனும் என்று அட்டையே பல கதைகளை நமக்குக் கடத்துகிறது.  
பதிப்பக விவரங்கள் இதோ. 



சென்னை போரூரில் இருந்து வெளியாகும் ஜி காமிக்ஸ் சென்னை சூளை மேடில் அமைந்திருக்கும் டிரீம்ஸ் பிக் புத்தக பதிப்பகம் வாயிலாக வெளியாகி இருக்கிறது.

 

திரு. கே. வி. கணேஷ் அவர்களே ஆசிரியர், கதாசிரியர் பொறுப்புகளை ஏற்க ஓவியங்களை தக்ஷின் என்னும் நண்பர் வடித்திருக்கிறார். ஆசிரியர் முன்னுரை:



ரூபாய் ஐம்பது மட்டுமே விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த சாகசப் பயணம் அரசர்கள் காலத்தில் நடைபெறுவதாக அமைந்திருக்கிறது.

கதை சுருக்கம்:

கதாநாயகன் வீரப் பிரதாபன் தான் வளர்ந்த குருகுலத்தில் இருந்து குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு பயணத்தைத் துவக்குகிறான். அவனது நற்பண்புகள் ஊட்டி வளர்ந்த இதயம், அவன் கண் முன்னே எந்த துன்பப்படுவோரைக் கண்டாலும் உதவியாய் இருக்க வைக்கிறது. அவனது வீரமிகுந்த விற்பயிற்சி எப்போதும் துணைவர மதிமயக்கிக் கானகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது ஒரு முனிவரை சந்திக்கிறான். பின்னர் ஒரு அரக்கனை சந்திக்கிறான். இறுதியாக ஒரு தீய மந்திரவாதியினை வீழ்த்தி தனது தாய் நாட்டைக் காக்கிறான். ஆக மொத்தம் இதுவொரு ராஜா ராணி கால கதையாக என்றும் நினைவில் நிற்கும் என்பதில் ஐயமில்லை.

இதிலிருந்து சாம்பிள் பக்கம் இதோ. 



வெறும் ஐம்பது ரூபாயில் நம்மை அந்த காலக்கட்டத்துக்கு இழுத்துப் போகும் இந்த சித்திரக்கதையை உங்கள் வீட்டு செல்வங்களுக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்விக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

ஒரு சிறப்பு கோரிக்கை ஆசிரியர் திரு.கே. வி. கணேஷ் அவர்களிடம் இருந்து:  

அன்புள்ள நண்பர்களே,  எனது சகோதரன் பழனியால் 
தொடங்கப்பட்ட இந்த வாட்ஸ்அப் குழுவான காமிக்ஸ் மார்க்கெட்
இனி பழனிவேலின் சேகரிப்புகளை விற்பனை செய்யும் தளமாக மாற
உள்ளது. இதில் தற்காலிகமாக மற்ற  விற்பனைகளை செய்ய வேண்டாம் 
என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கு  விற்பனைக்கு போடப்பட்டு அதை
வாங்கும் நண்பர்களுக்கு புத்தகங்கள் அவரது சகலை அண்ணன் கார்த்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். புத்தகத்துக்கான தொகை G PAY. மூலம் செலுத்தப்பட்டு அதற்கான ஸ்கிரீன்ஷாட் மற்றும் முகவரியை எனக்கு அனுப்பிய பிறகு புத்தகம் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.
அதற்கான வாட்ஸ் அப் குழுவின் லிங்க்:

https://chat.whatsapp.com/GgmbO3bg1Dh5eAWzC6a932

இந்த வீர பிரதாபனின் சாகசங்கள் நூலுடன் மற்ற நூல்களையும் பெற:

என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன் 

10 கருத்துகள்:

  1. சிறப்பான பதிவு.நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  2. நன்றிங்க சார்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் கணேஷ் அண்ணா ..

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் சார்....எனக்கு நாளை புத்தகம் வந்தடையும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆவலுடன் காத்திருக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  5. வீ.பி.சா & டெகும்ஸே புத்தகங்கள் எனக்கு எப்போது கிடைக்கும் கணேஷ் ஜி..😃

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழரே இந்நேரம் வந்திருக்கும் அல்லவா?

      நீக்கு
  6. அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு தேவை. K.V.GANESH.

    பதிலளிநீக்கு