சனி, 20 மே, 2023

VC 005_தப்புத் தப்பாய் ஒரு தப்பு_ஏஜெண்ட் ராபின் சாகசம்_வி காமிக்ஸ்

 

வணக்கங்கள் பிரிய உள்ளங்களே.. பிரபலமான கிரைம் நாவல் உலக முடிசூடா மாமன்னர் ராஜேஷ் குமார் அவர்களின் தப்புத்தப்பாய் ஒரு தப்பு  என்கிற தலைப்பினை சித்திரக்கதை உலகம் சுவீகரித்துக் கொண்டு இம்மாதம் வெளியாகி இருக்கும் வி காமிக்ஸின் ஐந்தாம் வெளியீடுதான் இந்த மாத சாகசம்.. 
( திரு. ராஜேஷ் குமார் அவர்களுக்கு நன்றி)


சித்திரக்கதை உலகின் நாயகன் நிக் ரைடர் (எ) ராபின் என்பவரை காமிக்ஸ் வாசகர் வட்டத்தில் உள்ளவர்கள் மிகவும் நன்றாகவே அறிவார்கள்.. அதைத்தாண்டி வெளி வட்ட வாசகர்களுக்காக சிறு செய்தி. இவர் இத்தாலிய போன்னெலி பதிப்பகத்தின் நாயகன். காவல்துறையில் உள்ள தனி அமைப்பின் காவலராக இவர் புரிந்த சாகசங்கள் அநேகம். அதில் வீடியோவில் ஒரு வெடிகுண்டு மிகவும் பிரசித்தமான ஒரு வெற்றிப் படைப்பு.. அமெரிக்கப் பிரஸிடென்ட் கொல்லப்பட்ட தருணத்தில் ஒரு வீடியோ பதிவு எடுக்கப்படுகிறது. அதனை துரத்தும் கும்பல்களின் பிடியில் இருந்து எப்படி சட்டத்தின் பாதுகாவலராம் நம் நாயகர் மீட்கிறார் என்பதே அந்த கதையின் ஒன் லைன்..  நிற்க.. 
இம்மாத வெளியீடான மூன்று புத்தகங்களில் இதுவும் ஒன்று. ஆன்லைன் புத்தக திருவிழா நடைபெற்றதால் தாமதமாக வெளியாகி இருக்கிறது. 
ரூ.100/- விலையில் ஒரு தரமான கதை இந்த கருப்பு வெள்ளை சாகசம். அட்டைப்படம் இதோ..  


விரைவில் வரவிருக்கும் இத்தாலிய நாயகர் மிஸ்டர் நோ வெகுகாலமாக லயன் நிறுவனத்திடம் வாசகர்களால் வைக்கப்பட்டு வந்த கோரிக்கை நாயகர். அந்த கோரிக்கை இந்த படைப்பு மூலமாக தமிழுக்கு வருகிறது.. அமேசானில் அதகளத்தைக் கண்டு இரசிக்கத் தயாராகுங்கள்.. 


தன் கதையைப் பற்றி நாயகனே ஆசிரியர் கடிதம் பகுதியில் கூறுவது போல வித்தியாசம் காண்பித்திருக்கிறார் ஆசிரியர் திரு. விக்ரம். 
பின் அட்டை இதோ.. 
கதையில் இருந்து சில பக்கங்கள்.. 


தன் இளவயதில் காவல் துறை அனுபவங்களில் ஊறிப் போகும் ராபினின் எண்ணவோட்டங்களோடு நம்மையும் லயிக்க செய்கிற மாயாஜாலம் இந்த கதையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ராபினின் முந்தைய சக காவல் நண்பர் பலியாகிட மன வருத்தத்தில் இருக்கும் ராபின். அவரின் புது சகா. அவரின் காதலுக்காக தவம் கிடக்கும் அவரை நேசித்திடும் ஜீவன்.. இவர்களின் மன உணர்வுகள் அத்தனையும் கதையில் மிகவும் அழகாக பதிவாகி இருக்கின்றன.. 


கிரைம் திரில்லர் வரிசையில் இந்த கதைக்கு தனி இடம் உண்டு. போதைப்பொருள் கடத்தலும், கட்டிடத்தில் பிணைக்கைதிகளைப் பிடித்து வைத்திருக்கும் ஒரு நபரும் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 



ஸ்பாய்லர்கள் கூடாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாமே.. அனைவரும் புத்தகத்தை வாசித்தபின் கதைக்கருவை மறுபடி இதே பக்கத்தில் ஒருமுறை அலசும் எண்ணம். 

முந்தைய கலவரபூமியில் கனவினைத் தேடி கதைக்கான விமர்சனப் பகுதி.. 

அடுத்த கதையாக ஸாகோர் அதிரடிக்கும் தேடல்தனைக் கைவிடேல்.. அட ஆத்தி சூடி தலைப்பு.. மிக அருமை.. தொடர்வோம்..  
நன்றிகள்..   
   விற்பனை மற்றும் விவரங்கள் அறிய: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக