வெள்ளி, 20 அக்டோபர், 2023

இதையும் கேளேன் கண்மணி_ கவிஞர் விஜயா மைந்தன்

 அன்பே  கான்க்ரீட் தளமாய் திடமாக நின்றவன் நான்.. 

என்னை சிமெண்ட் தூசியாய் எங்கும் சிதற விட்டாய்... 


கம்பி கட்டி உறுதியாக்கிய தூண் என உணர்ந்தவன் நான்... 

சுத்தியால் போட்டு என் புத்தியை உடைத்து விட்டாய்... 


தண்ணீர் பாய்ச்சினால் கெட்டியாகும் கலவை நான்...

விழி வீச்சில் உளியாக மாறி என்னை துளைத்தெடுக்கிறாய்.. 

அஸ்திவாரம் பலம் என்று பெருமைப்பட்டவன் நான்
உன் இருப்பின் அதிர்வில் என் அஸ்திவாரமே அல்லவா ஆடிப் போகிறது.. 

இருண்ட  என்  இதயத்தில் இனியவளே
 உன் சுவாச காற்று மின்சார ஒளி விளக்காய் 
பிரகாசிக்க வைக்கிறதே...இது என்ன விந்தை? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக