சனி, 10 பிப்ரவரி, 2024

இரவின் எல்லையில்..லார்கோ விஞ்ச்

 வணக்கம் அன்பு நெஞ்சங்களே.. 

இரவின் எல்லை எது? விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமிப் பந்து எப்படித் தெரிகிறது? 

ஒளிரும் பூமிப்பந்தை நாம் இரசிக்க பூமியை விட்டு வெளியேறித்தான் ஆக வேண்டும். அது போன்று ஒரு நிலைமையில்  சிக்கலில் சிக்கித்தவிக்கும் நமது லார்கோ என்ன செய்கிறார் என்பதே கதைக்கரு. இதனை வழக்கமான அதிரடியோடு கலக்கலாக நமக்குக் கடத்தும் கதைதான் இந்த இரவின் எல்லையில்.. 
முத்து காமிக்ஸின் 484 வது வெளியீடாக வந்து நம்மை கிறங்கடிக்கும் இந்த லார்கோ விஞ்ச் தொடர் முத்து காமிக்ஸின் ஐம்பத்தி இரண்டாவது ஆண்டு மலர் என்றால் எத்தனை அட்டகாசம்? 
இருநூற்றைம்பது ரூபாயில் எல்லோருக்கும் எளிதில் வாங்கக்கூடிய விலை ஒன்றில் இந்த ஐம்பத்தி இரண்டாவது ஆண்டு மலரைக் கொண்டுவந்ததற்கே லயன் எடிட்டர் திரு.விஜயன் அவர்களை பாராட்டி ஆக வேண்டும். ஆண்டு மலர்கள் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவை அனைத்து வாசகர்களையும் சென்றடையும் விலைகளில் இருக்க வேண்டும் என்கிற வாசகர்களின் எதிர்பார்ப்பு இந்த கதையில் நிறைவாகவே இருக்கிறது. 
எலான் மஸ்க் தனது சிறப்பான கண்டுபிடிப்புகளால் ஸ்பேஸ் எக்ஸ் என்கிற ராக்கெட் நிறுவனத்தாலும் மிகப்பெரிய புகழை ஈட்டி நிற்கும் ஒரு உண்மை வரலாறு. அவரை காமிக்ஸில் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது இந்த இரவின் எல்லையில்... பணம் படைத்தவரான அவரைப் போன்றே நம் நாயகன் லார்கோவும் பணமழையில் நனைபவர்தான் இருப்பினும் அந்த செல்வத்துக்கு ஆசைப்படாமல் நல்லதை செய்து வரும் நோக்கமுடையவர். அப்படிப்பட்டவர் இந்த தொழில்நுட்பப் புரட்சி செய்து வரும் தொழிலதிபருடன் ஒரு சிக்கலான நிலைமையில் விண்வெளியில் சிக்கித்தவித்தால் என்ன நடக்கும் என்கிற பரபரப்பான கதையினை நமக்கு சிறப்பாக வழங்கி இருக்கிறது முத்து காமிக்ஸ்.. 

மிக சமீபத்தில் வந்த கதைகளை அப்படியே உடனுக்குடன் தமிழுக்கும் கொண்டு வருவதில் சாதனை படைத்திருக்கிறது லயன் நிறுமம்.. 

  என்றும் அதே அன்புடன் ஜானி.



1 கருத்து:

  1. அருமையான பதிவு....காமிக்ஸ் பற்றி இன்னும் நிறைய பகிருங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு