செவ்வாய், 23 ஏப்ரல், 2024

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே 

உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்..

இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிகன் ஸ்பெஷல் -02 விலை ரூபாய் 450ல் பத்து கதைகளை ஒன்றாக இணைத்து வெளியிட்டிருக்கிறது முத்துகாமிக்ஸ். 




அதில் வெளியாகியுள்ள கதை எண் 02

சாவியைத் தேடி.. 

ஜோ பால்கன் 

ஒரு முன்னாள் சிண்டிகேட் என்னும் தீய அமைப்பின் உறுப்பினர். இப்போது இருதய கோளாறால் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஒரு மகள் உண்டு.

மகள் செரில் பால்கன்
அவளது எதிர்காலம் கருதி அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐயுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறார். அதன்படி அவரிடம் உள்ள ஆவணங்களை ஒரு லாக்கரில் வைத்து அதன் சாவியை மட்டும் அவர் வசம் வைத்திருக்கிறார். அந்த ஆவணங்களால் சிண்டிகேட் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அவரிடமிருந்து அந்த ஆவணங்களை மீட்க சிண்டிகேட் ஒருபுறமும் அதனை எதிர்க்கும் காரிகன் ஒருபுறமாக களம் இறங்குகிறார்கள். ஆனால் ஜோ மாரடைப்பால் இயற்கையாக மரணமடைந்து விட இந்த இரு குழுவினருடைய கவனமும் ஜோவின் மகள் மீது திரும்புகிறது. சிண்டிகேட் உறுப்பினர்கள் அவளை மடக்கி விட குறுக்கிட்டு தடுக்கிறார் காரிகன். மேலும் ஜோவின் மகளுடைய பள்ளி முகவரிக்கு ஜோ இறப்பதற்கு சற்று முன் ஒரு தபால் அனுப்பி இருக்கிற விபரம் தெரிய வருகிறது. எனவே பள்ளிக்கு சென்று அந்த சாவியை மீட்கிறார் காரிகன்.காரிகனையும் ஜோவின் மகளையும் சிண்டிகேட் உறுப்பினர்கள் இருவரும் தனித்தனியாக மடக்குகிறார்கள். 


சிண்டிகேட் உறுப்பினர்கள் ஜானி ஏஸ் மற்றும் சவுத்சைட்

சவுத் சைடுஎன்னும் பெயருடைய சிண்டிகேட் உறுப்பினன் காரிகனையும் ஜோவின் மகள் செரிலையும் ஓடும் ரயிலில் வைத்து முடக்கி போட முனைகிறான். அவனை முறியடித்து முதலில் பள்ளிக்குச் சென்று சாவியை எடுத்து விடுகிறார்கள் காரிகனும் செரிலும். இன்னொரு சிண்டிகேட் உறுப்பினன் ஜானி ஏஸ். காரில் அவர்களை துரத்தி வர அவனை குறுக்கு சந்தில் புகுந்து முடக்கிப் போடுகிறார்கள்.

சுபம்.

2 கருத்துகள்: