வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

IND_இனம் புரியாத எதிரி 1&2 _மாண்ட்ரேக்_இந்திரஜால் காமிக்ஸ்

வணக்கம் அன்பு நண்பர்களே.. இன்றைய சுதந்திர தினத்தை நல்ல முறையில் கொண்டாடிக் களித்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் நான் இன்று வாசித்து மகிழ்ந்த அயலான் கதை இதோ உங்களுடன் நண்பர்கள் பரிமாறிய சுவைமிக்க கதையினை வாசித்து மகிழ அழைக்கிறேன்.. 


 
ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே! 
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன்.. 
ஜானி. 




















 





 

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

கொலைவழிப்பாதை-ரங்லீ காமிக்ஸ் ஆகஸ்ட் 2025

ரங்லீ காமிக்ஸின் இம்மாத வெளியீடு..


வணக்கம் வாசகவாசகியரே..

நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ள இதழ்.. கூடவே இலவச இணைப்பாக பலகை விளையாட்டு என்ற விளையாட்டு அட்டையைக் கொடுத்துள்ளார்கள்.. எப்படி விளையாடலாம் என்பதையும், ஆட்ட விதிமுறைகளையும் தனியே ஒரு பேப்பராகவும் கொடுத்துள்ளார்கள்.. நல்ல முயற்சி.. வாழ்த்துகள்!




இன்னும் பல புத்தகங்களை சிறந்த சித்திரக் கதைகளை ரங்லீ காமிக்ஸ்

கொண்டு வரும் முயற்சியில் உள்ளார்கள் அவர்களுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் வாசக வாசுகியர் அனைவருக்கும் நன்றிகள்  

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

நட்சத்திர வேட்டை_வாரமுரசு காமிக்ஸ் _திருமலை & ஜானி

 வணக்கங்கள் வாசகர்களே.. 

அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.. 

மெழுகு வர்த்தி உருகி எரிந்து தன்னைத்தானே தியாகம் செய்து சுடர் விடுகிறது. அதுபோன்று நம் நண்பர்கள் நமக்காக தங்கள் கடும் உழைப்பின் பலனாக சேர்த்த செல்வத்தினை தியாகம் செய்து நமது கனவான சித்திரக்கதை ஆவணப்படுத்துதல் நற்பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவரான நமது தோழர் திருமலை அவர்களது முயற்சியில் கிடைத்த இந்த பொக்கிஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.. மேலும் இந்த வெர்ஷன் ஒரிஜினல் ஸ்கேன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடிட்டிங் பளிச் வெர்ஷன் பின்னர் பகிர்கிறேன். இப்போது இதனை ருசிக்க தயாராகுங்கள்.. ஹேப்பி பிரண்ட் ஷிப் டே.. 



தமிழில் தரவிறக்க சுட்டி..

https://www.mediafire.com/file/jkr0zmcgnfbqvij/Natchathira+vettai+_Thiru+&+Johny.pdf/file

என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பர்கள் 

ஜானி அண்ட் திருமலை..