வியாழன், 28 ஆகஸ்ட், 2014

"மர்மத் தீவு" - அமித் காமிக்ஸ் _ AMIT COMICS!!!

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே!
உங்கள் காமிக்ஸ் மீதான தீராப் பசிக்குத் தீனி போடும் விதத்தில் அமித் காமிக்ஸ் என்றொரு நிறுவனம், நமது பிரபல துப்பறியும் கதைகளின் மன்னர் திரு. தமிழ்வாணன் அவர்களின் கதையொன்றை (படித்தவர்கள் ஆம் அது தமிழ்வாணனின் கதை அல்லது இல்லை என்று தெரிவித்தால் வரலாறு உங்களுக்கு வாழ்த்து இசைக்கும்!!) காமிக்ஸ் ஆக மாற்றி தமிழ் இதயங்களுக்கு அர்ப்பணித்துள்ளது.
மெலட்டூர் விஸ்வநாதன் என்பவரது படமாக்கத்தில் புஜ்ஜாய் அவர்களின் ஓவியத்தில் (படமாக்கம் அநேகமாக டைரக்க்ஷன் என்பதாக இருக்கலாம்) மிளிர்ந்த காமிக்ஸ் இது. பி.வி.கிராபிக்ஸ் என்கிற நிறுவனம் வடிவமைத்து பிரசுரித்துள்ளது. போன் எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் இந்த எண்ணுக்கு முன்னால் தமிழ் நாட்டின் அனைத்து கோடு எண்களையும் சேர்த்து முயற்சி செய்யலாமே?
அமித் காமிக்ஸ் தலைப்பே ஆங்கிலத்தில் உள்ளது.
_இதில் வேறு ஏதேனும் காமிக்ஸ் வந்ததா?
_அதில் தமிழ் கதைகள் எத்தனை?
_அதன் பட்டியல் என்ன?
என்பவையே  நம் முன் உள்ள கேள்வி.
இது போன்றே அமிர்தா என்ற காமிக்ஸ் வந்ததாகவும் அதன் பிரதிகளை எப்போதோ வாசித்ததாகவும் கோவைத்தம்பி (குரு பிரசாத்) ஒருவர் அடிக்கடி தகவல் சொல்லி வருகிறார். உங்களிடம் அமிர்தா காமிக்ஸ் என்கிற பெயரில் வெளியான காமிக்ஸ் ஏதேனும் உண்டா? எனில் நமக்கும் கொஞ்சம் கண்ணில் காட்டினால் அகமகிழ்வோமன்றோ? தவிர பின்னூட்டம் என்கிற வைட்டமினையும் காட்டினால் நம்ம வலைப்பூவுக்கும் சில வண்டுகள் வந்து போயிருக்கின்றன என மகிழ வசதியாக இருக்கும். எனது வலைப்பூவில் முன்னணியில் அதிகம் பேர் பார்க்கும் ஒரு போஸ்ட் எனில் அது அறிவுக்கு நூறு கேள்வி பதில்களாகவே இருக்கிறது. எங்கேப்பா நம்ம கும்மி பார்ட்டிகளைக் காணோம்? வலைப்பூ அமைதியாக இருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? என்று தெரியலை. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன்??? நண்பர் கார்த்திக் சோமலிங்கா அன்பளித்த ஒரு குட்டி ஹாரர் அறிமுகப் புத்தகம் அட்டகாசமாக இருந்தது. அவருக்கு எனது நன்றிகள்.

அப்புறம் எனது பகுதி கிண்டி மான்கள் பூங்காவில் இருந்து அவ்வப்போது கூவ நதிக்குத் தாவி ஓடிவரும் மான்களின் மேய்ச்சல் நிலமாக உள்ளது. ஆனால் ஏரியா நாய்கள் அவற்றை சும்மா விடுவதில்லை. தனியே சிக்கிய மான்களின் நிலை கொடுமையானது, அப்படி ஒரு மான் நாய்களின் வாயில் மாட்டி தொண்டைப் பகுதியில் கடிபட்டு மேய்வதாக எங்களுக்குக் கிடைத்த செய்தி கேட்டு விரைந்து நண்பர் டார்வினுடன் சென்றேன்.  நாங்களும், வனத்துறையினருடன், அப்பகுதி சிறுவர்களின் உதவியுடன் மானை மீட்டு எடுத்தோம். நண்பர் டார்வினுக்கு மட்டும் நற்பணிச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்! அதில் இருந்து சில காட்சிகள்!









நண்பர் டார்வின் இவருடன் இளைஞர் படை நண்பர் நேசமணியும் உதவினார். அவருக்கும் நற்சான்றிதழ் கிடைக்கலை.







மான் மறைவில் ஒளிந்து மிகவே ஆட்டம் காட்டியது. எல்லாம் முள் மரங்கள். பிடிக்க மிகவே சிரமப்பட வேண்டியிருந்தது.






ஒருவழியாக நாங்கள் விரித்த வலையில் மான்!







மான் பயம் கொள்ளாதிருக்க அதன் கண்களைக் கர்ச்சீப் கொண்டு கட்டி... 









மழை வேறு தொந்தரவு கொடுத்தது. இருந்தும் மானைப் பிடித்தே தீருவது என அர்ப்பணிப்போடு இயங்கிய வனத்துறையினர்....







கூவத்திற்கிடையில் ஒரு உயிரைக் காக்க வேண்டி களத்தில்...



ஒரு வழியாக மானை வண்டலூருக்குப் பார்சல் செய்தோம். அப்பகுதியில் வசிக்கும் நபரா நீங்க? மான் இது போல சிக்கிக் கொண்டு அவஸ்தைப் பட்டால் தகவல் தெரிவிக்க பனகல் மாளிகையில் ஒரு பகுதி சிறப்பாக இயங்கி வருகிறது. தொலை பேசி எண் - 044 - 22200335. கண்டிப்பாக மான்கள் காக்கப்படும். ஒரே போன். அரியதொரு உயிர் காக்கப் படும். மறந்துடாதீங்க நண்பர்களே!
அப்புறம் 108 எண்ணுக்கு அவசர நேரத்தில் போன் செய்பவர்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகம் என்னவென்றால், இந்த ஆம்புலன்ஸ் நேராக அரசு ஆஸ்பத்திரி - மருத்துவமனைக்குத்தான் செல்லும் என்பது. அப்படியில்லை நண்பர்களே! நீங்க செல்ல வேண்டிய தனியார் மருத்துவ மனையைக் குறிப்பிட்டால் போதும் அங்கே கொண்டு சென்று ஆம்புலன்ஸ் சேர்ப்பித்து விடும். எனவே அஞ்சாமல் அடியுங்கள் உயிர்காக்கும் அந்த போனை....அப்படியே உங்கள் நண்பர்களுக்கும் விளங்கக் கூறுங்கள்!









மற்ற பக்கங்கள் பின்னர் நண்பர் ரஞ்சித்தின் அதிரடியில் தமிழ் சித்திரக்கதை உலகத்தில் முழு அப்லோடாகக் கிடைக்கும். புத்தக உதவிக்கு நண்பர் சம்பத் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! 
அனைவருக்கும் நன்றி வணக்கம்!
முன் பத்தியில் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க நண்பர் மாயாவி சிவா அவர்களது அரிய சேகரிப்பில் இருந்து மர்மத்தீவு கதையின் மூலத்தைக் கண்டு பிடித்து நமக்காக பார்வைக்கு வைத்துள்ளார். அவரது வரிகளில் "வணக்கம் நண்பரே...தங்கள் blog ல் தமிழ்வாணன்-ன் நாவல் படக்கதையாக வந்திருப்பதும், கதை படித்தவர்கள் விவரம் கூறினால் வரலாறு பதிவுக்கு உதவும்...என குறிப்பிட்டுள்ளீர்கள் ! சங்கர்லால் துப்பறியும் 'மர்மத்தீவு' என்பது மிகச்  சரியே..
14-11-1974 ல் கல்கண்டு வார இதழில் மர்மக்கதை மன்னன் 'தமிழ்வாணன்'அருமையான தொடர். ! என் சேகரிப்பில் இருந்து அப்போதைய ஒரிஜினல் தொடரின் கல்கண்டு அட்டைபடமும்,தொடரின் முதல் பக்கமும் இங்கே பதிவிட்டுள்ளேன்...நண்பரே..! தொடர்ந்து இப்படி அற்புதமான காமிக்ஸ் பற்றிய அறியவிசயங்களை பதிவிடுங்கள் நண்பரே..!" நண்பருக்கு நமது கைத்தட்டல்களை அள்ளித் தந்து உற்சாகம் ஊட்டுவோம்!!!

ஒரு கை என்றுமே ஓசை எழுப்புவதில்லை என்பது இம்மட்டில் மிகப் பொருத்தமானதே! என்றும் அதே அன்புடன் ஜானி!

  அன்பு நண்பர் ரஞ்சித்தின் முயற்சியில் PDF Link:
Enjoy!

9 கருத்துகள்:

  1. உங்கள் பொதுநலத் தொண்டுக்கு என் மரியாதைமிகு வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே...தங்கள் blog ல் தமிழ்வாணன்-ன் நாவல் படக்கதையாக வந்திருப்பதும், கதை படித்தவர்கள் விவரம் கூறினால் வரலாறு பதிவுக்கு உதவும்...என குரிப்பிட்டுள்ளிர்கள் ! சங்கர்லால் துப்பறியும் 'மர்மத்தீவு' என்பது மிக சரியே..14-11-1974 ல் கல்கண்டு வார இதழில் மர்மக்கதை மன்னன் 'தமிழ்வாணன்'அருமையான தொடர். ! என் சேகரிப்பில் இருந்து அப்போதைய ஒரிஜினல் தொடரின் கல்கண்டு அட்டைபடமும்,தொடரின் முதல் பக்கமும் facebook ல் பதிவிட்டுள்ளேன்...நண்பரே..! தொடர்ந்து இப்படி அற்புதமான காமிக்ஸ் பற்றிய அறியவிசயங்களை பதிவிடுங்கள் நண்பரே..!

    பதிலளிநீக்கு
  3. தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் நண்பர்களே!அரிய-இன்னும் வெளியே தலைகாட்டாத காமிக்ஸ்கள் நிறைய உண்டு நண்பர்களே! சீன வீரன் அவனது அடுத்தடுத்த தலைமுறைகள் தொடர்ந்து அநீதிக்காக போரிடும் ஒரு கதை இன்னும் எனக்கு கிட்டவே இல்லை! ஆனால் அருமையான ஆக்சன் நிறைந்த காமிக்ஸ் அது! அதே போல கத்தோலிக்க சமூகம் குறித்து நிறைய காமிக்ஸ்கள் வெளிவந்தன. வேளாங்கண்ணியில் ஒரு காலத்தில் அவை கொட்டிக் கிடக்கும். கிறிஸ்தவ பாதிரியார்கள் குறித்த வரலாறு, புனிதர்களின் வாழ்க்கை, விவிலிய நாயகர்கள் என பரபரப்புக்கும், அதிரடிக்கும், ஆச்சரியத்துக்கும் பஞ்சமில்லாத கதைகள். அவை இன்னும் கண்ணில் படவில்லை! உங்கள் அருகாமையில் வசிக்கும் கிறிஸ்தவ பாதிரியார்களை விசாரியுங்களேன்? அவர்களது நூலகத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் வாய்ப்பு மிகவே அதிகம் நண்பர்களே!

    பதிலளிநீக்கு
  4. ”அமித் காமிக்ஸ்”
    அனேகமாக அதை வெல்ளியிடுபவரை உங்களுக்கு நன்ர்றாக தெரியும் ஜானி...
    அதாங்க நம்ம அமித் கமல்தாங்க ;)

    பதிலளிநீக்கு
  5. என் வலைப்பூவில் ஒரே விளம்பரமாக வருகிறது. அவற்றை எப்படித் தடுப்பது நண்பர்களே? உங்களுக்கு தெரிந்து இருப்பின் தயவு செய்து கூறுங்கள்! விளம்பரம் தொல்லை தாங்கலை!

    பதிலளிநீக்கு
  6. என்ன! விளம்பரமாய் வருகிறதா? இத்தனை நாட்களாய் உமது வலைப்பூவைப் படிக்கிறேனே, என் கண்ணில் அப்படியொன்றும் படவில்லையே? மேலும், விளம்பரம் போட்டுப் பொருளீட்ட முடியவில்லையே என அவனவன் மாய்கிறான். நீர் விளம்பரம் வருகிறது எனப் புலம்புகிறீரே! விந்தையாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  7. i dont know ji! i have fun on this blog no money expected. but how this advt. on each images showed? pls let me know to erase them!

    பதிலளிநீக்கு