புதன், 22 ஆகஸ்ட், 2018

உயிரைத் தேடி 008

பிரியமானவர்களே...அப்புறம்...?
திரிஷா ரஜினியோடு இணைந்து நடிக்கப்போகிறார்...
ஒரு சூப்பர் ஸ்டார் அப்போது இருக்கக்கூடிய திறமையான நடிகைகளை
Previously

http://johny-johnsimon.blogspot.com/2018/01/005_29.html


http://johny-johnsimon.blogspot.com/2018/01/007.html
எலிகளிடம் ஏடாகூடமாக சிக்கிய நம்ம பிங்கி..மார்க் டேவிஸ் என்ன செய்தான்? எப்படி தப்பித்தான் என்பதனை பரபரப்பான பார்வையில் நம் முன் வைக்கிறார் ஓர்டிஸ்.. இந்தக் கதைக்கு தமிழில் சிறப்பாக வண்ணமிட்டு அழகாக கொண்டு வந்து சித்திரக்கதை உலகில் இன்று எனக்கென ஏதோ ஒரு விதத்தில் அடையாளம் கொடுத்துள்ள, என் வளர்ச்சியின் அடிப்படைத் தூண்களில் ஒன்றான இந்தக் கதையினை என்னோடு சேர்ந்து இரசித்து மகிழ்ந்த என் தலைமுறையை சேர்ந்த வாசகர்களுக்கு  எப்படியாவது கொண்டு வந்து சேர்ப்பித்து விடவேண்டுமென்ற தாகத்துடன் தேடலில் ஈடுபட்டு வந்த தருணத்தில் அய்யம்பாளையத்தார் திரு.வெங்கடேசன் திரு.கிங் விஸ்வா அவர்கள் மூலமாக உதவினார்.. அவர் கொடுத்ததை திரு அலெக்சாண்டர் வாஸ் அவர்கள் கொடுத்த ஸ்கான்களின் உதவியுடன் இட்டு நிரப்பி வருகிறேன். என் பயணமும் அதனை சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. பெரியவர் திரு.சுரேஷ் சந்த் அவர்களும், தம்பி திருப்பூர் குமாரும், மற்றும் சில நண்பர்களும் தொடர்ந்து தேடிக் கொண்டே வருகிறார்கள். என்றாவது முழுமையாக பரிமாறப்படும் என்கிற நம்பிக்கையுடன் இதோ தொடர்கிறது கதை...இல்லாத பக்கங்களுக்கு ஆங்கில ஸ்கான்களை இணைத்து விடுகிறேன். அந்த பக்கங்களும் கிடைத்தபின் சேர்ந்தே கொண்டாடுவோம் வாருங்கள்....

\
அது தொடர அனைத்து கரங்களும் ஒன்றிணைய வேண்டும்.. நடக்கும்.. விசுவாசிக்கிறேன்..
இம்முறை இரத்தப்படலம் புத்தகத்தின் வாயிலாக ஒன்று கூடி கொண்டாடித் தீர்த்த  
ஈரோடு புத்தகத்திருவிழா நினைவலைகளை நீங்களும் இரசியுங்களேன்? 
பழனி வேல், பிரசன்னா, கே.வி.கணேஷ் சார் ஆகியோரது அன்புக்கட்டளைக்கிணங்க முதன்முறையாக ஈரோடு புறப்பட்டுப் போனேன்... 
டாக்டர் மது ஆர் பிரசன்னா திடீரென அன்பளிப்பினை எடுத்து நீட்டியதில் நிஜமாகவே மிரண்டு போனேன்.. இலங்கையில் இருந்து வந்திருக்கிறார்.. இத்தனை பரிசுகளை அள்ளித் தந்திருக்கிறார். விழாவில் அனைவரையும் திகைக்க வைத்தது இந்த கெட் அப்... 

 அந்த வெள்ளை டி சர்ட்டுகளில் நண்பர்கள் சேலம் செந்தம்பட்டி குழு வந்திருந்தனர்.. என்னை அழைத்திருந்தனர்... ஜெகன் அவர்களுடன் தங்குவதாக ஏற்பாடு செய்திருந்தார் ஸ்டாலின் ஜி. இறங்கியதும் டாக்டர் மடக்கி விட்டார். அவருடன் பேசிக் கொண்டிருந்ததில் விழாவுக்கே தாமதமாக சென்று சேர்ந்து கொள்ள நேர்ந்தது..






நண்பர் ராஜ் குமாரின் பையன் எனக்கு நன்கு அறிமுகம்.. குட்டி விஐபி விழா உற்சாகத்தில் அங்கிங்கும் திரிந்ததில் செல்பி எடுக்க மறந்து விட்டேன்..














 வெகுகாலமாக நேரில் சந்திக்க வேண்டும் என்றிருந்த எங்கள் இருவருக்கும் இது முதல் சந்திப்பு.. செம கலாட்டாவாக நடந்தது...













ஈரோடுன்னா சும்மாவா என்று நினைத்துக் கொண்டே நடையைக் கட்டினான் அந்த வாசகன்...

2 கருத்துகள்: