வணக்கம் நண்பர்களே... கொடிய நோய் ஒன்று உலகைத்தாக்கியதால் மனித குலமே அழிந்தது. அபூர்வ இரத்த வகையைச் சேர்ந்த மிகச் சிலரே தப்பிப் பிழைத்தனர். அவர்களில் ஒருவனான நம் ஹீரோ மார்க் டேவிஸ் என்கிற பிங்கியின் தேடல் முழுவதும் தன்னைப் போன்ற மனித உயிர்கள் எங்காவது இருக்காதா என்கிற ஏக்கம் நிறைந்த தேடல். அவனது வழியில்தான் எத்தனை எத்தனை சோதனைகளைத் தாண்டி வர நேர்கிறது என்பதனை அதிர அதிரத் தொடுத்து மாலையாக்கியிருக்கிறார்கள். ஈகிள் நிறுவனத்தின் இந்த சூப்பர் ஹிட் கதையினை நமக்கு தின மலர் சிறுவர் மலரில் பரிசாக அளித்து மகிழ வைத்திருக்கிறது.
எனது பாட்டனார் திரு.அமிர்தன் அவர்களுக்கு இந்தக் கதைத்தொடர் சமர்ப்பணம்.. அன்னாரது நினைவு தினம் நாளை.. அவரது நினைவுகளுடன்...
அது ஒரு மகிழுந்து.. அதன் பின் பகுதி வைப்பிடத்தில் ஒரு அட்டைப் பெட்டி.. அது முழுக்க முழுக்க சித்திரக்கதைகள். அனைத்தும் ஸ்கான் செய்து கொள்ளுங்கள் என்கிற அன்புக்கட்டளையுடன் மொத்த புத்தகத்தையும் வாரிக் கொடுத்து அனுப்பினார் தன் பெற்றோரிடம் நண்பர் ஒருவர். ஆம் நண்பர்களே.. அவரது பெற்றோர்களே கொண்டு வந்து சென்னையில் கொடுத்து விட்டு சென்றார்கள். அந்தப் புத்தகங்கள் அனைத்தும் ஸ்கான் செய்யப்பட்டும் இது நாள் வரை ஒரு முறை கூட அந்த ஸ்கான்கள் என்னாயிற்று என்று அவர் கேட்டதில்லை. புத்தகங்களைக் கொடுத்து அனுப்பிவிட்டு போனில் சரியாக இருக்கிறதா பாருங்கள் என்றபோது அதெல்லாம் தேவையில்லை ஜி. நான் கொடுத்து அனுப்பியபோதே கூட இருந்தவற்றை அள்ளிப் போட்டுத்தான் அனுப்பினேன் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரது புத்தகங்களில் சில இரட்டை இதழ்கள் (டபுள்ஸ்) கூட இருந்தன என்பதுதான் ஹைலைட்ஸ். அவர் எங்களுக்கு செல்லமாக விக்கி.
நட்பு வட்டத்தில் இணைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக