செவ்வாய், 28 நவம்பர், 2017

நகைச்சுவை துணுக்குகள்...கணேஷ் பாலா

வணக்கம் நட்பூக்களே...
திரு.கணேஷ் பாலா அண்ணன் எனக்கு கடந்த சில வருடங்களாக பரிச்சயம்.. அவரை நேரில் சந்திக்க வைத்த புண்ணியத்தை விஸ்வா கட்டிக்கொண்டார். அவருடன் இணைந்து சில பணிகளை செய்யவும் வாய்ப்புகள் கிடைத்தன. அவருடைய பின்னணியும் பிரபல எழுத்தாளர்களுடனான அவரது பரிச்சயமும் பின்னர் தெரிய வந்தபோது அவரது எளிமையே என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இத்தனை சாதித்துவிட்டு அமைதியாக அலட்டலின்றி எப்படி இவர் இருக்கிறார் என நினைப்பேன். தற்போது அவரது நகைச்சுவை அன்லிமிடெட் நாவலாக வெளியானபஞ்சு விரட்டு மற்றும் டார்ச்சர் கிங் 12ஆம் மணிமாறன் ஆகியவை வெளியாகி விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.   நானும் வாசிப்பில்... அவரது ஒவ்வொரு முயற்சியுமே வித்தியாசமாக இருக்கும். இம்முறை நகைச்சுவை புன்னகைக் காலை தினமும் பல வாசகர்களை புன்சிரிப்போடு நாளைத் துவக்க வைக்கிறது. கீழே உள்ளவை வெறும் சாம்பிள் மாத்திரமே. 

    இவை அண்ணன் கணேஷ் பாலா அவர்களது முகநூல் பக்கத்தில் இருந்து சுட்டவை... நன்றிகள் அவருக்கு..
Image may contain: text
Image may contain: text
No automatic alt text available.
Image may contain: text
No automatic alt text available.
No automatic alt text available.








முகநூல் பக்கத்தில் அண்ணனைத் தொடர....



ஞாயிறு, 26 நவம்பர், 2017

019-இறைவாக்கினர் எரேமியா...விவிலிய சித்திரக்கதை வரிசை.

ப்ரியமுள்ள தோழமைகளே... 
இன்றைக்கு நான் கொண்டு வர உத்தேசித்து இறைவனின் சித்தத்தால் மலர்ந்திருப்பது இறைவாக்கினர் எரேமியாவின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம். விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின் காலத்தில் பிறந்து வளர்ந்து தேவனுக்காக எழும்பிப் பிரகாசித்ததொரு நட்சத்திரம்தான் எரேமியா. இறைவன் வழங்கிய தீர்க்கத்தரிசனங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தார்.. அவரது வரலாறு விவிலியத்தில் ஒரு புத்தகமாகவே சேர்க்கப்பட்டிருப்பது அவருடைய முக்கியத்துவத்தை நன்கு விளக்கும். இறைவனை நம்பி நாடி இருப்பதில் உள்ள நன்மையையும் விலகிப் போவதில் உள்ள தீமையையும் எடுத்தியம்பும் இந்தப் புத்தகத்தை நன்கு வாசித்து கிறிஸ்துவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் கொஞ்சம் புகட்டினால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். அன்புக்குரிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களது ஆதரவில் இந்தப் புத்தகம் சேகரிக்கப்பட்டு வெளியாகிறது. அவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இறைவன் அவரையும் அவர் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாராக.. அவர் வீட்டில் அடுத்த மாதம் 28.12.2017ல் அவரது மகளுக்கு நடைபெறவிருக்கும் திருமண விழாவை சிறப்பாய் தேவன் நடத்திக் கொடுப்பாராக.. மணமக்களுக்கு வாழ்த்துகளை அட்வான்சாக இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.  
வாழ்க்கையில் எத்தனையோ விதமான போராட்டங்கள்..அவற்றை இறைவனின் மீதான நம்பிக்கையை ஆயுதமாகக் கொண்டு நீந்திக் கடக்க முயற்சிக்கலாம். இனி எரேமியா இதோ உங்கள் முன்பு....


































இந்த எரேமியாவின் புஸ்தகத்தைத் தரவிறக்கம் 
செய்திட பிடிஎப் லிங்க்:
எசேக்கியேல் புத்தகத்துடன் சந்திக்கிறேன்.. 
இப்போதைக்கு உங்களிடம் இருந்து விடை பெறுவது..
உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.





ஞாயிறு, 19 நவம்பர், 2017

RC 024-புரட்சி வீரன்...மூன்று குதிரை வீரர்கள்_குணா கரூர்.



வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... புரட்சி வீரன்... அடிமைப்படுத்தும் சர்வாதிகாரிகளுக்கான எச்சரிக்கையாக மூன்று குதிரை வீரர்கள் நடத்தும் போராட்டமே புரட்சி வீரன்... அதிகாரம் கையில் இருக்கிறது என்கிற போதையில் தான்தோன்றித்தனமாக சர்வாதிகாரி கவர்னர் டானுக்கு எதிராக எல்பினோ என்கிற புரட்சி வீரன் போராட்டத்தைத் துவக்குகிறான். அவனுக்கு உதவும் நல்ல உள்ளங்கள் அமெரிக்க எல்லையைக் கடந்து ஆயுதங்களை திருடி வந்து போராட்டம் நடத்துகிறார்கள். பிலிப், லியோ, சைமன் குழுவினர் அதில் தலையிட்டு தங்கள் வீரதீர செயல்களால் மெக்சிகோ கவர்னர் டானின் சதிகளை எப்படி முடியடிக்கிறார்கள் என்பதே பரபரக்க வைக்கும் இந்தக் கதை.. இன்டர்நெட் வாயிலாக நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் குணாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்...    






பிடிஎப் தரவிறக்கம் செய்ய...
http://www.mediafire.com/file/h1l102er7fy27r1/RC024+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.pdf

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...