Friday, 29 September 2017

புதியதோர் பயணம் துவங்கட்டுமே...

வணக்கம் வாசகர்களே....
உங்களில் யாருக்காவது சர்வதேச அளவிலான காமிக்ஸ் விமர்சகர் மற்றும் வாசகர் என்ற புகழ் கிட்ட வேண்டும் என்கிற ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்குத் தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் உதவுவதில் மகிழ்ச்சி.. ஒரு டைரியைப் போட்டுக் கொள்ளுங்கள். யாரெல்லாம் பிரபல ஓவியர்கள், பிரபல கதாசிரியர்கள், பிரபல பதிப்பகத்தார் என்பதை எழுதிக் கொள்ளுங்கள். அவர்களது பிறந்த தினம், வளர்ந்த விதம், பின்புலம், திருமண தினம், இந்த ஓவியர் அந்த கதாசிரியரை சந்தித்தார், அந்த பதிப்பகத்தார் தங்கள் கேட் உள்ளே இந்தக் கதாசிரியரை அனுமதித்தார்கள், அந்த ஓவியருக்கு இந்தப் பதிப்பகம் பரிச்சயமானது எப்படி இது போன்ற அரிய தகவல்களை அவர்களுக்கு மின்னஞ்சல் தட்டியாவது, விக்கிபீடியா போன்ற காமிக்ஸ் சார்பில் இயங்கும் பல்வேறு தளங்களையும் அலசி ஆராயுங்கள். இன்னார் இறந்த தினம், இன்னார் நினைவு தினம், இன்னார் அறுவதாம் திருமண தினம், இந்தத் தேதியில் அந்தக் கதையை எழுதினார், அந்தத் தேதியில் இந்த ஓவியர் வரைந்து முடித்தார். அதற்காக அலாஸ்கா பாலைவனம் போனார், ஊட்டியில் ஓய்வு இல்லம் சென்றார். அமேசான் காடுகளில் பித்துப் பிடித்துத் திரிந்தார், இப்படி இப்படி லொக்கேஷன் பிடித்தார், அப்படி அப்படி பணம் போட்டு செலவழித்தார் என்பது போன்ற அரிய தகவல்களை அவர்கள் சொன்னால் உண்மையாகவும். அவர்கள் சொல்ல மறுத்தால் நாமே கொஞ்சம் கற்பனைக் கரப்பான் பூச்சிகளைக் கொட்டிக் குலுக்கியும் நீங்கள் எழுதும்போது உங்கள் இருப்பு பத்திரிகை உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும். இவர் சொன்னால் அது மிகவும் சரியாக இருக்கும் என்கிற நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டியது. சில பல வளர்த்த மார்பின் மீதான பாய்ச்சலும், அவ்வப்போது காப்பி ரைட், டீ ரைட் போன்றவற்றின் மீதான விசாலமான பார்வையும் கொண்டு உங்களை வளர்த்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த விருதுகளும், மாபெரும் அங்கீகாரங்களும் நீங்கள் எங்கோ போக நினைக்கும் உயரத்துக்கு உங்களைத் தூக்கி அமர வைக்கும். சில நண்பர்கள் இது குறித்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு எங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்கள்.  இந்த ஆயுத பூஜைத் திருநாளில் உங்களைக் கூர் தீட்டிக் கொள்ளுங்கள். சிலர் திட்டிச் செல்லுங்கள். சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டியதும், ஓத வேண்டியதை ஓதுவதும் எங்கள் கடமை. வாழ்த்துக்கள் மீண்டும்...
அட சும்மா நாலு வரி எழுதிப் பாருங்கப்பா தன்னால எல்லாம் வரும்... ஏதோ சொல்லணும் னு தோணுச்சு. சொல்லிட்டேன். ஏதாவது தப்பா இருந்தா மனசில வெச்சிக்காதீங்கள். திட்டித் தீர்த்துடுங்கள். ஏன்னா மனசில அடக்கி வைக்கிற உணர்ச்சிக்கு சக்தி அதிகமாம். ஆயா எப்பயோ சொல்லுச்சி இல்லை???
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்..ஜானி  

Thursday, 21 September 2017

திகில் விளையாட்டு....


 வணக்கம் கண்மணிகளே.. நான்தான் நீலத் திமிங்கிலம் பேசுகிறேன். நான் ஆழ்கடலில் வாழும் ஒரு அமைதியான பிராணி.
ஆழ்கடலில் வசிக்கும் பாலூட்டி நான். குட்டி போட்டு பால் கொடுக்கும் வகையைச் சேர்ந்த பாலூட்டி நான். 

அவ்வப்போது காற்றைப் பீய்ச்சிக் கொண்டு கடல் மட்டத்தில் தலையை நீட்டி விட்டு பின்னர் ஆழ் கடலில் அமிழ்ந்து போவேன். யாருக்கும் தொந்தரவு தரமாட்டேன். 

சின்னஞ்சிறு மீன்களும் கடல் பாசிகளுமே என் உணவாகும். 

நீர் மூழ்கிகளில் அவ்வப்போது வரும் மனிதருக்கும் என்னால் எந்தத் துன்பமும் நேர்ந்ததில்லை. அவர்களாக வந்து ஆராய்ச்சி செய்து விட்டுப் போவார்கள். வாழ்வின் இறுதி கட்டத்தில் தரைக்கருகே கடற்கரையில் வந்து என்னை மாய்த்துக் கொள்வேன். என் கொழுப்பைக் கொண்டு விளக்கெரிய வைப்பதும், மருந்துப் பொருட்கள் செய்து கொள்வதும், என் எலும்புகளைக் கொண்டு அருங்காட்சியகங்களை அலங்கரிப்பதும் மனிதர் தம் வேலை. வாருங்களேன் ஒரு முறை கன்னிமாரா நூலகம் அருகே இருக்கும் அருங்காட்சியகத்தில் என் எலும்புக் கூட்டைக் கண்டு களிக்க..
நிற்க. கூகிளில் இப்போதெல்லாம் தேடினால் ஆபத்தான ஒரு விளையாட்டு வருகிறது.   அதன் பெயர் ப்ளூ வேல் கேம். அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் சில சைக்கோத்தனமான ஆசாமிகள் ஒன்று கூடி மனித வதைக்கு என்றே ஒரு விளையாட்டை உருவாக்கி அதற்கு என் பெயரையும் வைத்து உலகெங்கிலும் உலவ விட்டுள்ளனர். நீங்கள் அந்த விளையாட்டை எவ்விதத்திலும் விளையாடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இது என் அன்புக் கட்டளை. முப்பது யானைகளின் நிறை உள்ள என் சொல்லுக்கு செவி மடுப்பீர்கள்தானே? தீயன விலக்கி நல்லன அறிந்து கொள்வதே விவேகமாகும். ஆகவே உங்களை சுற்றியுள்ள நண்பர்கள் யாராவது இந்த விளையாட்டை விளையாடுவதைக் கண்டால் நமக்கு ஏன் வம்பு என்று விட்டு விடாமல் அவர்களது பெற்றோர், உற்றார், உறவினர்களுக்கு தகவல் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவது உங்களின் கடமை. திமிங்கலமாகிய என் பெயரைக் கெடுக்கும் இந்தப் போலி விளையாட்டால் எத்தனை சிறுவர், சிறுமியர் பலியாகி இறந்துள்ளனர் தெரியுமா? செய்தித் தாள்களைத் திருப்பினால் என் பெயரைக் கண்டு அலறும் நிலை இன்று. ஆகவே கவனமாக இருங்கள். உங்கள் வாழ்க்கையை வேறு யாருடைய வக்கிர புத்திக்காகவோ அழித்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையை ஜெயிப்பது வேறு விளையாட்டில் ஜெயிப்பது வேறு. உங்களுக்கு அந்த விளையாட்டு வேண்டாம். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்கிற பழமொழிக்கு இலக்கணமாக நீங்கள் திகழ வேண்டும். போய் வருகிறேன். இதே போன்ற ஒரு திகில்இசை தோன்றி மனிதர்களை மிகவும் சோதித்தது. அது குறித்து திகில் காமிக்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த விவரம் உங்கள் பார்வைக்கு...

  

Tuesday, 19 September 2017

பால்கன் காமிக்ஸ் வரிசை -004


பால்கன்
மாதமிருமுறை
மலர் : 1
இதழ் : 4
29 பிப்ரவரி 1968 (leap year)
இலங்கை - 75
மேற்கு ஆப்பிரிக்கா,கிழக்கு ஆப்பிரிக்கா-1 ச,
மலேசியா மற்றும் சிங்கப்பூர் - 45  


சித்திரக் குறிப்புகள்
போர்க்கருவிகள் வளர்ந்த விதம்

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் இது போன்ற கண்ணிகள் ஆறுகளிலேயே உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மிதக்கும் கண்ணி
Image result for floating mine
இது கடலில் செல்லும் கப்பலைத் தகர்க்க உதவும் கண்ணி வெடி.
விதவிதமான கண்ணி வெடிகள் நடப்பில் உள்ளன. அவற்றைப் பற்றியதொரு சித்திரம் உங்கள் பார்வைக்கு...

இந்த இதழில்தொடர்கள்
ஹீரோஸ் -ஸ்பார்ட்டன் வீரன்

சோதனைக்கு ஒருவன்
டான் டேர் - வானவெளியில் சந்தித்த கறுப்புக் கொம்பன்
வெள்ளிக் கிரகத்தை சந்தித்த கறுப்புக் கொம்பனால் பூமிக்கு ஆபத்தா?


கடல் வீரர் கண்ட கடல் குரங்கு
கடல் குரங்கைக் கண்டு பிடிக்கப் போன பீட்டர் காணமல் போகிறான் மேற்கொண்டு நடந்தது என்ன?


தெய்வத்தின் சாபம்

கிரேக்கக் கடவுள் ஜீயஸ் டெலாசுக்கு சொந்தமான வில்லைக் கண்டுபிடிக்குமாறு ஏரியனுக்குக் கட்டளையிட்டது கண்டு பிடிப்பானா?
இரும்பு மனிதன்
நியூயார்க்கில் டாக்டர் பயங்கரத்தின் இயந்திர மனிதர்கள் தாக்குதல். தப்புமா ந்யூயார்க்?


கறுப்பு வில் சென்னா
டாக்டர் ஜிம் கொலைகாரனைப் பிடிப்பாரா?
தனிக்கதை
விதியின் கை -அஞ்சா நெஞ்சம்

-விடுதலை வேட்கை
கலிபோர்நியக் கைதி தப்பினாரா?


கட்டுரை:
நேருவைத் தள்ளிய குதிரை -குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா முதன்முதலாக தமிழ்க் கவிஞர் ஒருவரின் படைப்பு இதில் இடம்பெற்றுள்ளது. அதுவும் புகழ் பெற்ற கவிஞர் ஒருவரது படைப்பு...

எதிர்காலத்தில் வரப்போகும் காற்று மிதவை கப்பல்


சிறுவர் சித்திரத் தொடர்கள்
பழங்கால நாய் ஜில்லி
தீராத விளையாட்டுப் பிள்ளை - புரூன்


சிறுவர் பகுதி
புதிர் களஞ்சியம்
சண்டைக்கார வண்டுகள்
பத்து முக்கோணங்கள்
பத்துப் பொற்காசுகளா இருபது பொற்காசுகளா?
பாலமும், லாரியும்
வேடிக்கைத் துணுக்கு  
புதிர் விடைகள்  

பூந்தோட்டம் பகுதியில் -
சின்னத்தம்பி கவிதை -பூமாலை

சில நிமிடங்கள்

தூக்க மருந்து 

பால்கன் காமிக்ஸ் வரிசை -003

வணக்கங்கள் இனிய தோழமை உள்ளங்களே...
இம்முறை நாம் குறிப்பிடவிருக்கும் சித்திரக்கதை பால்கன் இதழ் 003.
ஆங்கிலத்தில் FALCON காமிக்ஸ் என்கிற பெயரில் குறிப்பிடப்படுகிறது. கழுகு ஒன்று தன் இரையைப் பற்றிப் பிடிக்கவிருக்கும் தோற்றத்தில் அமைந்த சின்னத்துடன் வெளியான பால்கன் காமிக்ஸ் கிட்டத்தட்ட ஈகிள் காமிக்ஸின் முத்திரையைப் போன்றே அமைக்கப்பட்டிருக்கிறது. ஈகிள் சின்னம் மேலெழும்பும் கழுகைக் குறித்து நிற்கும். 


பால்கன்
மாதமிருமுறை
மலர் : 1
இதழ் : 3
14 பிப்ரவரி 1968
இலங்கை - 75
மேற்கு ஆப்பிரிக்கா,கிழக்கு ஆப்பிரிக்கா-1 ச,
மலேசியா மற்றும் சிங்கப்பூர் - 45  
சித்திரக் குறிப்புகள்
போர்க்கருவிகள் வளர்ந்த விதம்
குறுக்கு வில் கையாளும் முறை
ஹெரால்ட் மன்னரின் ஆங்கிலேய வீரர்கள் பின்வாங்கி ஓடும் நார்மண்டி மன்னரின் பிரெஞ்சுப் படையைத் துரத்திச் சென்றனர். ஹேச்டிங்க்ஸ் கடற்கரை வந்ததும் பிரெஞ்சுப் படையினர் திடீரென திருப்பித் தாக்கினர். 1066ல் நடந்த இந்தப் போரில் குறுக்கு வில்லைப் பயன்படுத்தித்தான் பிரெஞ்சுப் படை வென்றதாம்.
பிரெஞ்சுப் படையில் நிறைய ஜெனீவா வீரர்கள் இருந்தனராம். ஹெரால்ட் மன்னரைக் கொன்றவனும் ஒரு ஜெனீவா வீரன்தானாம்.
  
தொடர்கள்
ஹீரோஸ் -ஸ்பார்ட்டன் வீரன்
சோதனைக்கு ஒருவன்
டான் டேர் - வானவெளியில் கண்ட பயங்கரக் காளான்
கடல் குரங்கு
கடல் குரங்கைக் கண்டு பிடிக்கப் போன பீட்டர் காணமல் போகிறான் மேற்கொண்டு நடந்தது என்ன?
தெய்வத்தின் சாபம்
கிரேக்கக் கடவுள் ஜீயஸ் டெலாசுக்கு சொந்தமான வில்லைக் கண்டுபிடிக்குமாறு ஏரியனுக்குக் கட்டளையிட்டது கண்டு பிடிப்பானா?
பறக்கும் தட்டு வீரர்கள்
அரகான் நாட்டு புத்தர் கோவிலில் சிலை தொலைந்தது. நாட்டுக்கு ஆபத்தா?
இரும்பு மனிதன்
நியூயார்க்கில் டாக்டர் பயங்கரத்தின் இயந்திர மனிதர்கள் தாக்குதல். தப்புமா ந்யூயார்க்?
கறுப்பு வில் சென்னா
டாக்டர் ஜிம் கொலைகாரனைப் பிடிப்பாரா?
தனிக்கதை
-விடுதலை வேட்கை
பாதாள சாக்கடை வழியே இங்கிலாந்துக்கு..
சிறைக் கைதிகள் தப்பினாரா... பரபரப்பான சித்திரங்களில்.. 

கொள்கைக்காக உயிர் விடும் வீரர்கள்....
தனிச்சண்டை
பால்கன் ஆல்பம் படங்கள் : உலகிலேயே சிறந்த மோட்டார் கார் ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ

சிறுவர் சித்திரத் தொடர்கள்
பழங்கால நாய் ஜில்லி
தீராத விளையாட்டுப் பிள்ளை - புரூன்

சிறுவர் பகுதி
புதிர் களஞ்சியம்
பறவைத் தீவிலிருந்து கடல் தீவுக்கு
ஒரு வழிப் படம்
நகைச்சுவை
ஊசியின் காது வழியே ஒட்டகம் செல்லும்
புதிர் விடைகள்  
தனது நினைவுகளின் ஊடாக நம்மை ஒரு பயணம் மேற்கொள்ள வைக்கும் திரு.ராஜேந்திரன் என்கிற சின்னஞ்சிறு கோபு அவர்களது கருத்தைக் கோரியதில்..."அப்போது எனக்கு பதினான்கு வயது. சின்னஞ்சிறுகோபு கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்திருந்த நேரம்.அப்போதுதான் பால்கன், பொன்மலர் இரண்டும் வெளிவர ஆரம்பித்தது. பத்திரிகையின் சைஸ் மிகப் பெரியது.ஏராளமான படங்கள்.நிறைய படக்கதைகள். 'ரெமி' டால்கம் பவுடர் போன்ற விளம்பரங்கள் கூட வெளிவந்தது. இந்திரஜால் காமிக்ஸ் பத்திரிகையையும் தாண்டி பிரமிக்க வைத்த இதழ். பால்கனில் காமிக்ஸ்கள் அதிகம். பொன்மலரில் படக்கட்டுரைகள் அதிகம். இந்தியிலும் வெளிவாந்தது என்று நினைக்கிறேன். என்ன இருந்தென்ன, இந்த பத்திரிகைகள் ஒரு வருடத்தை முழுமை செய்ய வில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழில் இவ்வளவு பெரிய சைஸில் வேறு எந்த சிறுவர் பத்திரிகையும் வெளிவரவில்லை என்றுதான் நினைக்கிறேன்."
-சின்னஞ்சிறுகோபு.
என்று தெரிவித்துள்ளார். பொன்மலர் இதே சந்தமாமா பிரசுரத்தாரால்  வெளியிடப்பட்ட இதழாகும்.  இதே போன்ற பெரிய அளவிலும் இதே போன்ற தோற்றத்திலும், கட்டமைப்பிலும் கொண்டுவரப்பட்டு பின்னர் கால வெளியில் எங்கோ சிக்கிக் கொண்டுள்ளது. இவற்றையும் நாம் இரசித்து உணரும் விதமாக புத்தகங்களை வைத்திருப்போர் வெளிக்காட்டி உதவலாமே? 

குறுக்கு வில் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு..
https://en.wikipedia.org/wiki/Crossbow

இவ்விதழில் இடம்பெற்ற விளம்பரங்களில் ஒன்று...

Saturday, 16 September 2017

பால்கன் காமிக்ஸ் வரிசை -002

வணக்கங்கள் பிரியமான உள்ளங்களே,
இம்முறை நாம் காணவிருப்பது பால்கன் இதழின் இரண்டாம் இதழ்.
சந்தமாமா பிரசுரத்தாரின் இந்த நூல் வெளியான ஆண்டுகளில் தான் நமது பிரபல முத்து காமிக்ஸ் நிறுவனர்களுள் ஒருவரான திரு.எம்.சவுந்திர பாண்டியன் அவர்கள் அங்கே பணியாற்றி வந்ததாக நமது வாசகர்கள் மத்தியில் அவரே ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். எனவே காமிக்ஸ் உலகை நாற்பதாண்டுகளாக தன் பிடியில் வைத்திருக்கும் முத்து-லயன் காமிக்ஸ் நிறுவனத்தின் விதை விழுந்து முளைத்து, வேர்விட்டு இன்று ஆலமரமாக நம் முன் நிற்பதற்குக் காரணமான இதழ் இந்த பால்கன் காமிக்ஸ் வரிசை என்கிற வகையில் இந்த இதழ்களின் வரிசை மிகவும் அபூர்வமானதும், அசத்தலானதும் அரிதானதுமாகும். இந்தப் புத்தகத்தை வாசிக்கக் கொடுத்து உதவிய திரு.முருகன் தியாகராஜன் அவர்களிடம் மட்டுமே இவ்விதழின் பிரதி இன்றைய காலக்கட்டத்தில் இருக்கிறது போலும். மிகவும் அபூர்வமான இந்த நூலில் இருந்து சில கைபேசி புகைப்படங்களும், நூற் குறிப்பும் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.  

இதழின் பெயர்: பால்கன்
மாதமிருமுறை
மலர் : 1
இதழ் : 2
30 ஜனவரி 1968
இலங்கை - 75
மேற்கு ஆப்பிரிக்கா,கிழக்கு ஆப்பிரிக்கா-1 ச,
மலேசியா மற்றும் சிங்கப்பூர் - 45 
சித்திரக் குறிப்புகள்
போர்க்கருவிகள் வளர்ந்த விதம்
வான வெடி அம்பு...
Medieval hand cannon from around 1350 (Photo Credit: National Firearms Museum)

துப்பாக்கிகளுக்கு முன்னோடியான இவை 1364 ஆண்டுகள் துவக்கத்திலேயே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மனித வரலாற்றில் முதன்முதல் தோற்றமாக இந்த ஆண்டு குறிப்பிடப்படுகிறது. அதிலிருந்து வெறும் பதினான்கே ஆண்டுகளுக்குள் ஐரோப்பா முழுவதுமே கைத்துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.   
எறியும் விதம்
ஜெர்மனி-பிரான்ஸ் போரில் உபயோகித்த வான வெடி அம்பு நீண்ட தோல் குழாயால் செய்யப்பட்டிருந்தது. அதனுள் வெடி மருந்து நிரப்பி முடிவில் திரி வைக்கப்பட்டிருந்தது. அதன் மறுமுனையில் 16 ராத்தல் வெடி குண்டு இருக்கும். திரியில் தீ வைத்ததும் தோல் குழாயில் உள்ள மருந்து வெடித்து அம்பு மேல் நோக்கிப் பாய்ந்து அரை மைல் தூரத்துக்கு அப்பால் விழும். கீழே விழுந்ததும் அதன் முனையில் உள்ள வெடி குண்டு 120 ராத்தல் அழுத்தத்துடன் வெடிக்கும்.  

தொடர்கள்
ஹீரோஸ் -ஸ்பார்ட்டன் வீரன்
சீசர் தன் தளபதி ருடீலியசிடம் ஹீரோசைக் கொல்லச் சொல்கிறான். அவ்விதமே ருடீலியஸ் ஹீரோசை இருபது வீரர்களுடன் கோட்டையை முற்றுகையிட அனுப்பினான்.அதன் பின் நடந்தது என்ன? 
விடை தெரிய தேடிப்பிடித்து வாசியுங்கள்...பால்கன் காமிக்ஸ்..

சோதனைக்கு ஒருவன்
வீரமிக்க இளைஞன் மைக் லேன் கடுமையான சோதனையில் வெற்றியடைந்து அரசாங்க விஞ்ஞான கூடத்தின் பரிசோதனை மனிதனாகிறான். புரபசர் கர்னீலியஸ் தீ அவனைத் தன்னுடைய அபூர்வக் கண்டுபிடிப்பான மாத்திரையை விழுங்கச் சொல்கிறார். மைக் மாத்திரையை விழுங்கினானா? அதன் பின் நடந்தது என்ன? 
விடை தெரிய தேடிப்பிடித்து வாசியுங்கள்...பால்கன் காமிக்ஸ்...

டான் டேர் - வானவெளியில் கண்ட பயங்கரக் காளான்
வான வெளி வீரர் டான் டேர் மனித விரோதி மீகோனின் ஆயுதத்தை தடுத்து நிறுத்துவாரா? விடை தெரிய தேடிப்பிடித்து வாசியுங்கள்...பால்கன் காமிக்ஸ்..


கடல் குரங்கு
நீரிலும் நிலத்திலும் வாழும் அதிசயக் கடல் குரங்கை கண்டுபிடிக்கப் போன பீட்டர் காணாமல் போகிறான். அவனைத் தேடிக் கடல் வீரர் மேசன் தன் விசைப்படகு ராஜாளியில் போனார். சுமத்திராவின் அருகே கடலில் நொறுங்கி நின்ற பீட்டரின் கப்பல் வெண் புறாவைக் கண்டார். தன் உதவியாள் குவாரோவுடன் அதனுள் போகிறார். அதன் பின் நடந்தது என்ன? விடை தெரிய தேடிப்பிடித்து வாசியுங்கள்...பால்கன் காமிக்ஸ்...
தெய்வத்தின் சாபம்
பறக்கும் தட்டு வீரர்கள்
ஜீடா துணைக் கிரகத்தின் வெளிக் கிரக மனிதர்கள் மேஜர் கிரண்ட், பாபின் பெயிலி இருவரையும் பறக்கும் தட்டு வீரர்களாக்கினார். சமூக விரோதிகளை ஒழிக்க அவர்களுக்குப் பறக்கும் தட்டும் அதிசயக் குழலும் கொடுத்தனர். அதன் பின் நடந்தது என்ன? 
விடை தெரிய தேடிப்பிடித்து வாசியுங்கள்...பால்கன் காமிக்ஸ்...  


இரும்பு மனிதன்


கறுப்பு வில் சென்னா

தனிக்கதை
விடுதலை வேட்கை

கொள்கைக்காக உயிர் விடும் வீரர்கள்....
தனிச்சண்டை


சிறுவர் சித்திரத் தொடர்கள்
பழங்கால நாய் ஜில்லி
தீராத விளையாட்டுப் பிள்ளை - புரூன்

சிறுவர் பகுதி
ஆறு வேலிகள்
புள்ளிகளும் கோடுகளும்...
கறுப்புப் பந்து
விநோதப் பறவை -புதிர்

புதிர் விடை 
பால்கன் ஆல்பம் : படங்கள்..நாளைய மோட்டார் கார்
இத்தனை விவரங்களுடன் அற்புதமாக வெளியாகி அன்றைய நாட்களில் ஆச்சரியத்தையும், வாசகர்களுக்கு புத்துணர்வையும் இந்த இதழ் வரிசை கொடுத்து இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் அளவு என்ன தெரியுமா? A3!!!  
விடை பெறுகிறேன் நண்பர்களே.. உங்கள் தேடல்கள் இது போன்ற அபூர்வமான இதழ்களை நோக்கியே இருக்கட்டும்...
சமீபத்தில் துவங்கப் பட்டு வரவேற்பை பெற்றுள்ள சில முக நூல் பக்கங்கள் குறித்த லிங்க் கீழே கொடுக்கிறேன். இணைந்து வாசித்து மகிழுங்கள்...

COMICS PDF TIMES

படக்கதை பகிர்வுகள்

என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.... 

Friday, 1 September 2017

பால்கன் காமிக்ஸ் வரிசை -001

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே! 
அபூர்வம் என்ற சொல்லுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மாற்றம் நிகழ்ந்து வரும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். இன்றைக்கு அபூர்வம் என்று கூறப்படும் சித்திரக்கதை மறுநாள் வேறு ஒரு அபூர்வமான  சித்திரக் கதை வெளிப்படும்போது அதன் அபூர்வம் என்கிற அந்தஸ்தை இழந்து தவிக்கிறது. ஒரேயொரு இதழ் வரிசை ஒரேயொருவரிடம் மாத்திரமே கிட்டுமாயின் அதன் விலை மதிப்பற்ற தன்மையும், அதன் அபூர்வமான இருப்பும், அதனைப் பாதுகாத்து வந்த அரிய மனிதரும் முக்கியத்துவம் பெறுகின்றனர். அந்த வகையில் அரிதினும் அரிதாக வெளியாகி, இன்றளவில் வேறு எவரிடமுமே இல்லாமல், ஆச்சரியமாக ஒரேயொருவரிடம் இருந்து வெளிப்பட்டு தகவல்களை அள்ளித்தரும் எந்தப் படைப்புமே அபூர்வம் என்ற அடைமொழியோடு போற்றிப் பாதுகாக்கத் தக்கதாகும். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் எவ்வித சோதனைகளையும் தாங்கிக் கொண்டு காலத்தால் அழியாமல் அட்டகாசமானதோர் இரசிகரால் பாதுகாக்கப்பட்டு வரும் புத்தகம்தான் எத்துணை அழகானதும், இனிமையானதுமானதாகும்? இந்த முறை நாம் ஆராயவிருக்கும் புத்தகமும் அப்படிப்பட்ட அபூர்வ வகை சித்திரக் கதைதான். 
    இந்தக் கதையைப் பாதுகாத்து, தங்க டிராகன் முட்டையைப் போன்று அடைகாத்து, அதன் இருப்பை உறுதிப்படுத்தி, இன்றைக்கு நம்மிடம் அதன் தரிசனத்தை வெளிக்காட்டி, இப்படியும் சித்திரக் கதைகள் வெளியாகி ஒரு காலத்தில் தமிழ் உலகைக் கலக்கின என்கிற தகவலை நம் அனைவருக்கும் பகிர்ந்து கொண்ட அபூர்வ மனிதர் திரு.இரா.தி.முருகன் அவர்களுக்கு நம் அன்பினையும் நன்றிகளையும் உங்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
     இந்தப் பதிவில் நாம் காணவிருப்பது பால்கன் இதழ் வரிசை. இதில் இதுவரை கிடைத்தவை இருபது புத்தகங்கள் மாத்திரமே. முதல் இதழ் வெளியான ஆண்டு மற்றும் மாதம் jan-15-1968 இறுதி இருபதாவது தமிழ் இதழ் காணக் கிடைப்பது oct-11-1968 வரையில். விலை 75 பைசாக்கள். அதே நேரம் ஆங்கிலத்தில் முதல் இதழ் வெளியான ஆண்டாகக் கருதப்படுவது jan -15-1968 இறுதி இதழ் வெளியான தேதி nov-25-1968 விலையில் மாற்றமின்றி அதே 75 காசுகளே. ஆக மொத்தம் 22 இதழ்கள் வெளியாகியுள்ளன. தமிழில் இருபது மட்டுமே காணக் கிடைக்கிறது. பால்கன் லோகோ ஈகிள் லோகோவில் இருந்து சற்றே மாறுபட்டுள்ளதாகக் காணப்படுகிறது. இரையைப் பற்றக் கீழே இறங்கும் வடிவில் பால்கனும் மேலே பறக்க ஆயத்தமாகும் விதத்தில் ஈகிளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இதழின் பக்கங்களில் கீழே அச்சிடப்பட்டுள்ள All material appearing in this publication is the copyright of odhams Press Ltd., England 1965 என்கிற வரிகள் ஓதம்ஸ் பதிப்பகம் இங்கிலாந்தில் 1965ல் கொண்டு வந்த இதழ் இது என்ற தகவலை நமக்கு அளிக்கின்றன. source:https://en.wikipedia.org/wiki/Odhams_Press
அதன் பின்பு சுமார் 3 ஆண்டுகள் கழித்து 1968 ஆம் ஆண்டில் நமக்கு இந்த இதழ் அறிமுகமாகியுள்ளது. இதழ் குறித்த விவரங்களைப் பட்டியலிடுகிறேன்.

பால்கன்
மாதமிருமுறை
மலர் : 1
இதழ் : 1
15 ஜனவரி 1968
இலங்கை - 75 பைசா
மேற்கு ஆப்பிரிக்கா,கிழக்கு ஆப்பிரிக்கா-1 ரூபாய்,
மலேசியா மற்றும் சிங்கப்பூர் - 45
அளவு:டேப்லாய்ட் அளவு

படங்கள் இணைக்க அனுமதி கிடைத்தபின் ஒரு சில இணைக்கப்படும். 
சித்திரக் குறிப்புகள்
போர்க்கருவிகள் வளர்ந்த விதம்
நம்பர் 1 முதல் விமான குண்டு
குண்டு வெடிக்கும் விதம்
கொள்கைக்காக உயிர் விடும் வீரர்கள்....

தனிச்சண்டை
உலகத்தின் வேகமான போர் விமானம்

இந்த இதழில் இடம்பெற்ற தொடர்கள்
ஈகிளில் வந்த தொடரில் இருந்து அறிமுகத்துக்காக மட்டும் ஹீரோஸ் தி ஸ்பார்டன் படம் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோஸ் -ஸ்பார்ட்டன் வீரன்

சீசரின் கோபத்துக்காளான மாவீரன்ஹீரோஸ் பகைவரிடையே சிறு படையுடன் அனுப்பப்படுகிறான். அதன் பின்??

சோதனைக்கு ஒருவன்அறிவியல் சோதனைக்கு வந்த வீரனை பல்வேறு சோதனைக்குள்ளாக்குகிறார்கள். பிழைப்பானா அவன்?
   
டான் டேர் - வானவெளியில் கண்ட பயங்கரக் காளான்
மீகோன் எனும் வலுமிக்க எதிரியுடன் பொருதும் தீரன் டான் டேர்...


a page from eagle magazine

கடல் குரங்கு

தெய்வத்தின் சாபம்


பறக்கும் தட்டு வீரர்கள்

இரும்பு மனிதன்


கறுப்பு வில் சென்னா

from a page from eagle

தனிக்கதை
விடுதலை வேட்கை

சிறுவர் சித்திரத் தொடர்கள்
பழங்கால நாய் ஜில்லி

தீராத விளையாட்டுப் பிள்ளை - புரூன்

சிறுவர் பகுதி
புதிர் களஞ்சியம்

நகைச்சுவை
காணாமல் போன சீட்டுத் துண்டு
புதிருக்கு விடை
ஆகியவை இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.
இந்த இதழில் இடம்பெற்றுள்ள சில விளம்பரங்கள் மக்கள் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய,  காலத்தால் அழியாத சாட்சிகளாக மாறி நிற்கின்றன. முதல் விளம்பரமாக யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விளம்பரத்தைக் கூறலாம். போபால் விஷ வாயு சம்பவத்தால் இன்று வரை பேசப்பட்டு வரும் யூனியன் கார்பைடு நிறுவனம் அந்த காலத்தில் உற்பத்தி செய்த பொருள்கள் சினிமா ப்ரோஜெக்க்ஷனுக்கான ஆர்க்குகள், ரேடியோ பாட்டரிகள் சிறுவர் இதழில் தன் விளம்பரத்தை கொடுத்து சிறார்களையும் ஈர்த்த ஒரு நிறுவனம் யூனியன் கார்பைடு. அங்கே நடந்த போபால் விஷ வாயுக் கசிவுக்குப் பின்னரான பலிகளுக்கு மட்டும் காரண காரியங்களை அலசி வரும் நமக்கு அந்த நிறுவனம் மக்களோடு எத்தனை அன்னியோன்னியம் பாராட்டி வந்தது அந்த காலத்தில் என்கிற தகவல் புதிது.

https://en.wikipedia.org/wiki/Union_Carbide


https://en.wikipedia.org/wiki/Bhopal_disaster


அடுத்த விளம்பரமும் அட்டகாசமான ஒன்றுதான். தன் புன்னகையால் தமிழ் மண்ணை ஈர்த்த தங்கத் தாரகை.. மறைந்தாலும் மக்கள் மனத்தை விட்டு அகலாத காவியத் தலைவி ஜெயலலிதா அவர்களது அட்டகாசமான போஸில் வெளியான ரெமி ஆயில் மற்றும் பவுடர் விளம்பரம்.
 


மொத்தப் பக்கங்கள் இருபது. இருபதும் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தவறவிடக்கூடாத அற்புதமான கதைத் தொடர் இது. வாசித்தமைக்கு நன்றி. தேடலில் இந்த இதழினையும் இணைத்துக் கொள்ளுங்கள் தோழர்களே...
ஆங்கிலத்திலும் அழகுத் தமிழிலும் ஒரே நேரத்தில் சந்தமாமா குழுவினரால் டால்டன் பிரசுரத்தால் வடபழனியில் இருந்து வெளியிடப்பட்டு அட்டகாசம் நிகழ்த்தியுள்ள இந்த இதழ் மிகவும் சுவையானதொன்று. இந்த நூலைப் பற்றிய இன்னும் அதிகமான செய்திகளை அறிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். 
ஆராய்ச்சியில் அன்னையின் உறுதுணை... திருமதி.விஜயா சின்னப்பன் 
வேறென்ன தோழமைகளே புதுக்கதைகளைப் பற்றி எக்கச்சக்கமான வார்த்தைப் பிரயோகங்களை தோழர்கள் இணைய வெளியில் நிகழ்த்திக் கொண்டுள்ளனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவற்றைப் பார்வையிடுங்கள். வாசிப்பை இன்னும் உயிர்ப்போடு வைத்திருங்கள். அவ்ளோதான்.

என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.
மகாபாரதம் முழுவதும் காமிக்ஸ் வடிவில்:

நண்பர் ஸ்ரீராம் லெட்சுமணனின் உதவியோடு திரு.இரா.தி.முருகன் அவர்களது புத்தகங்களைப் பெற்று ஸ்கேனித்து ஆவணப்படுத்தியுள்ள மகாபாரதம் முழு வடிவத்...