திங்கள், 19 டிசம்பர், 2016

உத்துப் பாரு..சூதுகள் நூறு..

அது ஒரு பிரபலமான உணவகம். நான் குடும்பத்தாருடன் உணவருந்திய பின்னர் அதன் துணைக் கட்டடத்தில் இடம் பெற்ற நொறுக்குத் தீனி வகைகளைப் பார்வையிட்டேன். மகனின் கோரிக்கைக்கு செவிசாய்த்து எனது துணைவியார் ஒரு ஐஸ் குச்சியை (மாங்காய் ருசி) 63 ரூ. கொடுத்து வாங்கி வந்தார். நான் மகன் பிரிப்பதற்குள் அதனை வாங்கி விலையை நோக்க ₹.10 என அச்சிப்பட்டிருந்தது. அதைக் கேட்டால் வேறு பொருளுக்குரிய விலையை வாங்கியிருந்தனர். அவர்தம் கணினியில் அந்ப் பொருளே பட்டியலிடப்படவில்லை. ஏன் என்று கேட்டால் அங்கே போனைப் போடுகிறார்கள். இங்கே போனைப் போடுகிறார்கள். ஆனால் ஒரு முடிவுக்கும் வரத் தயங்குகிறார்கள். மகனை சமாதானப்படுத்தி ஸ்டிக்கை வாங்கித் திருப்பிக் கொடுத்து விட்டேன். நீதி:கடையைப் பார்த்து எடையைப் போடாதீங்கோ. கொஞ்சம் உற்றுப் பாருங்க பில்லை..இது எனது சொந்த அனுபவமே. என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

சர்க்கரையில்லாப் பொங்கல்..கொண்டாட வாருங்கள்.

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.
ஒரு முட்டையை உண்ண வேண்டுமானால் அதில் உள்ள மஞ்சள் கருவைத் தவிர்த்து விடுங்கள் என்பது போன்ற எண்ணங்களை  உள்ளடக்கிய எளிமையான உணவு  அட்வைசைத்தான்  கேட்டிருப்பீர்கள். அதனைத் தகர்த்தெறிந்து புது விதமான உணவு முறையை கைக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற்று உலவும் நடமாடும் உதாரணம் என் சகோதரன் செந்தழல் ரவியின் பேட்டியை தினகரன் நாளிதழ் வசந்தம் இணைப்புப் புத்தகத்தில் வெளியிட்டுப் பெருமை சேர்த்திருக்கிறது.

வாங்கி வாசிக்க மறவாதீர். ஒரு வார இடைவெளியில் அவரது பேட்டி இங்கே இடம்பெறும். அதுவரை நீங்கள் உலவி வர :

http://paleogod.blogspot.in/2016/10/basic-blood-test-details.html







நன்றி..என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.

வியாழன், 1 டிசம்பர், 2016

சினிமா மாணவர்களுக்கு : சில நல்ல வெப்சைட்கள்_படித்ததில் பிடித்தது...


வணக்கம் தோழமை நெஞ்சங்களே.

படித்ததில் பிடித்த ஒரு சங்கதியை இங்கே பகிர்கிறேன்.


சக சினிமா மாணவர்களுக்கு...

நமது தலைமுறையின் வரப்பிரசாதம், இண்டர்நெட். சமையலில் ஆரம்பித்து சினிமா வரை, நீங்கள் எதை கற்றுக்கொள்ள நினைத்தாலும் அதற்கு இண்டர்நெட் உங்களுக்கு உதவும்.

நான் அடிக்கடி சொல்வது, எனக்கு நானே சொல்லிக்கொள்வது ‘இண்டர்நெட் போன்ற விஷயங்களை நாம யூஸ் பண்ணனும்..இல்லேன்னா, அது நம்மளை யூஸ் பண்ணிடும்!’. நிறைய வெட்டி அரட்டைகள், பாலியல் தேடல்கள், போராளிச் சீற்றங்கள் என நமது நேரத்தை விழுங்கும் விஷயங்கள் பல இங்கே உண்டு. கொஞ்சம் கவனமாக இருந்தால், இண்டர்நெட் போன்ற வரப்பிரசாதம் வேறில்லை.




அந்தவகையில் சினிமா மாணவர்கள் படிக்க வேண்டிய சில வெப்சைட்கள் இங்கே. தினமும் இந்த வெப்சைட்களை படித்து வருகின்றேன். நண்பர்களுக்கும் இவற்றை பரிந்துரைக்கிறேன்.

1. No Film School :
சினிமா கற்றுக்கொள்ள ஃபிலிம் ஸ்கூல் தேவயில்லை எனும் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்ட தளம், http://nofilmschool.com/. திரைக்கதையில் ஆரம்பித்து சவுண்ட் மிக்ஸிங் வரை
ஆர்டிக்கிள்ஸ் கொட்டிக்கிடக்கும் வெப்சைட் இது. தேடல் பொறியை சரியாக உபயோகித்தால், பல அற்புதமான லின்க்ஸ் கிடைக்கும்.

2. Jamuura:
இதுவொரு இந்திய வெப்சைட் என்பதால், இந்தியாவில் இருக்கும் டெக்னிஷியன்களின் பேட்டி, இந்தியப் படங்கள் என்று லோக்கல் ஃபீல் கொடுக்கும் ஆங்கில தளம்,
http://www.jamuura.com/blog/
மணிரத்னம் படங்கள் முதல் அனுராக் காஷ்யப் வரை அவ்வப்போது அலசுவார்கள். சில நேரங்களில் முத்தான அறிவுரைகள் சிக்கும்.

3. Film Maker IQ:
வெவ்வேறு வெப்சைட்களில் வெளிவரும் நல்ல சினிமா கட்டுரைகளை, பாடங்களை வெளியிடும் தளம், http://filmmakeriq.com/
இங்கேயும் தேடினால், பல நல்ல விஷயங்கள் சிக்கும். ஃபிலிம் நுஆர் பற்றி எழுதியபோது, இந்த வெப்சைட்டின் லின்க்கை ஏற்கனவே நான் கொடுத்திருக்கிறேன்.

4. Rain Dance:
இன்னொரு முத்தான தளம். அவ்வப்போது செம இண்டரஸ்டிங்கான டாபிஸ் சிக்கும். பலரின் ஃபிலிம் மேக்கிங் அனுபவங்கள் நமக்கு உபயோகமாக இருக்கும். லின்க்:
http://www.raindance.org/articles/

5.Cinephilia Beyond: கொஞ்சம் கடினமான, கரடுமுரடான, ஆழமான கட்டுரைகளை விரும்புவோருக்கான தளம், http://www.cinephiliabeyond.org/
பல நல்ல பேட்டிகள், படங்களைப் பற்றிய தீவிர அனலைஸிஸ் என சீரியஸான தளம்.

6. Youtube:
ஆமாம் பாஸ், நம் ரேஷ்மா புகழ் யூடியூப் தான். ஆக்ட்டிங் கோர்ஸில் ஆரம்பித்து எடிட்டிங் வரை புட்டுப்புட்டு வைக்கிறார்கள். தமிழில் BOFTA மாஸ்டர்கிளாஸ் மட்டும் கிடைக்கிறது. ஆனால்
ஆங்கிலேயக் கனவான்கள் நம் ஆட்கள் போல் கஞ்சர்கள் அல்ல, தினமும் தங்கள் அனுபவத்தை, அறிவை பகிர்ந்து தள்ளுகிறார்கள். கூகுள் போன்றே இங்கும் சரியாகத் தேடினால், சரியானது சிக்கும்.

7. தமிழில் :
உலக சினிமா ரசிகன், கீதப்ரியன், கருந்தேள், முரளிக்கண்ணன், சுரேஷ்கண்ணன், செங்கோவி(!) போன்ற வலைப்பதிவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வப்போது நாங்கள் வனவாசம் போனாலும், மன்னித்து தொடருங்கள்.

ஆனந்த விகடனில் இரண்டு அருமையான தொடர்கள் வருகின்றன. பஞ்சு அருணாச்சலம் மற்றும் வெற்றிமாறன் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். பஞ்சு ஐயாவின் ஆரம்ப காலம், கொடுமையானது. ஆரம்பித்த படங்கள் எல்லாம் பாதியில் நிற்க, ‘பாதிப்பட பஞ்சு’ என்று கேலிசெய்யப்பட்டதில் ஆரம்பித்து இளையராஜாவை கண்டுபிடித்துக் கொண்டுவந்தது வரை பல சுவாரஸ்யமான விஷயங்களை கொடுக்கிறார். தவற விடக்கூடாத தொடர் இது.

தமிழ் ஹிந்துவில் எஸ்.பி.முத்துராமன் ஐயாவின் அனுபவத்தொடர் வருகிறது. நான் எதிர்பார்த்த அளவிற்கு டெக்னிகலாக இல்லையென்றாலும் படிக்க வேண்டிய தொடர். கூடவே, என் பிரியத்திற்கு உரியபிரபுதேவாவின் கதையும் வருகிறது. ஒரு திறமை எப்படி சுற்றியுள்ளோரால் கண்டுணரப்பட்டு, வளர்க்கப்பட்டது என்று எளிமையாக விவரிக்கிறார்.
இவற்றைத் தவிர நண்பர்கள் கமெண்ட்டில் சொன்ன சில நல்ல வெப்சைட்ஸ்:

1.        https://www.criterion.com/

2.        http://www.tasteofcinema.com/

3.        http://blog.vijayarmstrong.com/

4.        http://www.thecinemaholic.com/

5.        http://www.filmcomment.com/

6.        http://theplaylist.net/

சனி, 19 நவம்பர், 2016

ஒரு நிமிடம் சிந்தீப்பீரா பெற்றோரே...

                        தி இந்து நாளிதழில் வந்த மிகச் சிறந்த கட்டுரை.


பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக படித்து அதன்பின்பு  தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்.


எதற்காக  இப்படி ஓடுகிறோம் ?


சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகள் ஆக்குகின்றன பள்ளிகள்.


நம் எல்லோருக்குமே வாரிசு நலன் முக்கியமானதாக இருக்கிறது. எல்லோருடைய உயர்ந்தபட்ச ஆசை, கனவு, நோக்கம், லட்சியம் எல்லாவற்றிலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் உட்கார்ந்திருக்கிறது. இதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராகவும் இருக்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிந்திக்கிறோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், அடிப்படையான அம்சங்களில் கோட்டை விடுகிறோம்.


சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன்.

அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது.

அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள்.

பள்ளி செல்லும் வயதுடையவர்கள். பின்னர், மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

நிலைகுலைய வைத்த சூழல் நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலிழப்புக்கான  காரணங்களைப் பட்டியலிட்டவர், குழந்தைகள் பாதிக்கப் படுவதற்கான காரணங்களில்  ஒன்றாக நம்முடைய பள்ளிகளில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப்பிட்டார்.

“குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியேறுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்?” என்று கேட்டபோது கூட இந்தப் பிரச்சினையின் முழு உக்கிரத்தை நான் உணரவில்லை.


பின் இதுபற்றி சிறு பிள்ளைகள் பலரிடமும் பேசினேன். பள்ளிச் சூழலை அவர்கள் சொன்ன விதம், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரான என்னையே நிலை குலையச் செய்தது.


பல பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சிறுநீர், மலத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பழகியிருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பயந்து, வெட்கப்பட்டு, நடுங்கி

ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நல்லது. ஒரு வாரம் கூட உண்ணாவிரதம் இருக்கலாம். உடல் அதை ஏற்றுக் கொள்கிறது.


ஆனால், ஒரு மணி நேரம் சிறுநீர் / மலம் கழிப்பதைத் தள்ளிப் போடுவது கூட நல்லதல்ல. அன்றாடம் இதை மணிக்கணக்கில் செய்யும்போது உடல் சித்ரவதைக்கு உள்ளாகிறது.

உடல் உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை
எனக்குத் தெரிந்து, காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பும் மழலைகள் இருக்கிறார்கள். அவர்கள் கே.ஜி. வகுப்புகள் படிக்கிற பள்ளிக் கூடங்களுக்கு ஐந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் செல்ல வேண்டும்.

அந்தப் பள்ளி வாகனங்கள், வழியில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் சென்று குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும். பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பதற்றத்துடன் வீட்டிலிருந்து ஓடிவந்து வாகனங்களில் ஏறும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடனேயே சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க என்று கழிப்பறைக்கு ஓட முடியுமா?


ஆசிரியர்கள் அனுமதிப்பார்களா?

இது அன்றாடம் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை.

ஆனால், அன்றாடம் இப்படிக் கழிப்பறைக்கு ஒரு குழந்தை அனுமதி கேட்டால், அதை நொறுக்கியே விடுவார்கள் ஆசிரியர்கள்.

வளர்ந்த பிள்ளைகளே கூட கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தயங்கும் சூழலே பள்ளியில் இருக்கிறது.

அப்படிக் கேட்பதைக் கேலிக்குரியதாக, ஏளனத்துக்கு உரியதாகவே நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம்.

உயர் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுக்கே இந்த நிலை என்றால், கே.ஜி. படிக்கிற சிறு குழந்தைகளின் நிலை என்ன?


பயமின்றிச் சொல்ல முடியுமா?

ஆசிரியர் என்ற சொல்லும், ஆசிரியர் என்ற பிம்பமும் சாதாரணமானதா அல்லது எளிதில் அணுகக் கூடிய சினேகம் மிக்கதா?


ஒரு நாளில் வகுப்பறையில் ஆசிரியர்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய வார்த்தை

 ‘ பேசாத!’ என்பதுதான்.

அதற்கடுத்த சொல் ‘ வாய மூடு!’ என்பது.


‘எனக்குச் சிறுநீர், மலம் வருகிறது’ என்று எத்தனை பிள்ளைகளால் பயமின்றிச் சொல்ல முடியும்?


தவறி வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்து விடுகிற குழந்தைகள் எப்படியான கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளாகிறார்கள் என்பதை ஏனைய குழந்தைகள் பார்த்துக் கொண்டேதானே வளருகிறார்கள்!


யோசித்துப் பார்த்தால், நம்முடைய ஒட்டுமொத்தக் கல்வி அமைப்புக்குமே இதுகுறித்து இன்னும் பிரக்ஞை வரவில்லை என்ற முடிவை நோக்கித்தான் நகர வேண்டியிருக்கிறது. நம்மூரில் எத்தனை பள்ளிகளில் போதுமான அளவுக்குக் கழிப்பறைகள் இருக்கின்றன?


இரண்டாயிரம் பேர் படிக்கிற பள்ளிக்கூடத்தில் இடைவேளையின் போது ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் அத்தனை பிள்ளைகளும் கழிப்பறையைப் பயன்படுத்திவிட முடியுமா?

அந்த அளவுக்கு வசதி கொண்ட பள்ளி என்று தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளைக் காட்ட முடியும்?


கூட்டத்தில், வரிசையில் நின்று சிறுநீர் கழிக்க, மலம் கழிக்கக் கூச்சப்படுகிற குழந்தைகள் உண்டு.


கூட்டமாக இருக்கிறது, வரிசையில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சிறுநீர் கழிக்காமல் திரும்பி வந்து விடுகிற பிள்ளைகள் உண்டு.

சிறுநீர் கழிப்பதற்காக, மலம் கழிப்பதற்காகக் காத்திருந்த நேரத்தில் மணி அடித்துவிட்டது, நேரமாகிவிட்டது ‘மிஸ் திட்டுவார்கள்’ என்று கழிவை வெளியேற்றாமல், அடக்கிக்கொண்டு அப்படியே ஓடிவந்து விடுகிற பிள்ளைகளும் உண்டு.


குழந்தைகள் பள்ளி செல்லும் காலத்தில் மதிப்பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை.


அரை லிட்டர் போதாது
பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளில் அநேகம் பேர் அரை லிட்டர் தண்ணீருக்கு மேல் எடுத்துச் செல்வதில்லை. ஒரு பகல் முழுவதும் ஒரு குழந்தைக்கு அரை லிட்டர் தண்ணீர் போதாது. ஆனாலும், ஏன் கொஞ்சம் தண்ணீரையே எடுத்துச் செல்கிறார்கள்? காரணம் இதுதான்.

காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டுச் செல்கிற பல குழந்தைகள், பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவுடனேயே கழிப்பறைக்கு ஓடுவதைப் பார்க்கலாம்.


இது ஒரு சமூகம் நிகழ்த்தும் வன்முறையின் குறியீடுகளில் ஒன்று. ஒருபுறம், கழிவுகளை உரிய நேரத்தில் வெளியேற்றாததால், இன்னொருபுறம் தேவையான நேரத்தில் தண்ணீர் குடிக்காததால் உடல் பாதிப்புக் குள்ளாகிறது.

இதனால், பல நோய்களுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர்.

இப்படித்தான் சிறுநீரகப் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள் என்பதை மருத்துவர் என்னிடம் விளக்கினார்.

“மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். சிறுநீரை அடக்கி அடக்கி வைப்பதால், சிறுநீர் வெளியேற வேண்டிய பாதையில் கழிவுகள் அடைப்புகளாக மாறி, நெஃப்ரான்களைச் செயலிழக்க வைத்து, சிறுநீரகத்தைச் சுருங்க வைக்கின்றன. சிறுநீரகம் செயல்படாததால் செயற்கை முறையில் டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டிய நிலை.

சிறுநீரகம் செயலிழந்தால், மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை இரண்டுதான் தற்போதிருக்கும் வழிகள்.

இவை இரண்டுமே முழு ஆயுள் உத்தரவாதம் இல்லாதவை.


எதற்காக ஓடுகிறோம் என்பதையே உணராமல் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறை நம்முடையது”

என்றார் மருத்துவர்.
எனவே குழந்தைகள் உச்சா போக வேண்டும் எனும்போது எங்கு சென்று விட வேண்டும் என்று அறிவுறுத்தல் கொடுத்து அனுப்ப மட்டுமே செய்ய வேண்டும்.
ஆத்திரத்தை அடக்கலாம்...மூத்திரத்தை அடக்கக் கூடாது என்று பெரியவர்கள் அறிவுறுத்துவது இதனை ஒட்டியே என்பதையும் நினைத்துப் பாருங்கள்...என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன்  ஜானி...

புதன், 9 நவம்பர், 2016

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்...

இன்றிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம் பிரதமர் மோடி
ரூ.500 ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். நவம்பர் 10 முதல் வங்கி அல்லது தபால் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் பிரதமர் மோடி ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து ரூ.500,ரூ1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிகொள்லாம்.
மருத்துவமனைகளில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும். நவம்பர் 11-ம் தேதி இரவு வரை விமானம்,ரெயில் டிக்கெட் வாங்க மற்றும் மருந்தகங்களில் ரூ.500,ரூ.1000 நோட்டுகள் செல்லும். நவம்பர் 9-ம் தேதி 10ம் தேதிதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காது. டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,காசோலை மற்றும் டிடி பரிவர்த்தனையில் எந்த மாற்றமும் இல்லை. ரூ.2000 ரூபாய் நோட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.. 
இதில் பதறவோ, அதிர்ச்சியோ தேவையில்லை.  

ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஞானமிகு பேரரசர் சாலமன் _விவிலிய கதை வரிசை_013


வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே..
இம்முறை விவிலியத்திலிருந்து பேரரசர் சாலமனின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்ள உங்களை அழைத்துப் போகிறேன்....இறைவன் அவரிடம் அவரது சிறு வயதில் உனக்கு அளவற்ற செல்வம் வேண்டுமா இல்லை அளவற்ற ஞானம் வேண்டுமா என்று கேட்டார்...எதனை சாலமன் தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
அவர் ஞானத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்த ஞானம் அவருக்கு அளவற்ற செல்வத்தை மட்டுமல்ல பூமியின் கடைக்கோடி எல்லையில் வசித்த ஜனங்களும் அவரது கீர்த்தியையும் புகழையும் அறிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பானதொரு வாழ்க்கையை தேடித் தந்தது.

பேரரசர் சுலைமான் என்று இஸ்லாமிய சகோதரர்களால் குறிப்பிடப்படும் இவரது வரலாறு விவிலியப் பார்வையில் உங்கள் முன் காட்சித் தொகுப்புகளாக விரிகிறது. நல்ல ஞானத்தைத் தேடுகிறவன் அதனுடன் அளவற்ற செல்வத்தையும், புகழையும் அடைகிறான் என்பதே இந்தக் கதை நமக்குக் கூறும் நீதியாகும்.
இனி உங்கள் கைகளில் பேரரசர் சாலமன்....




































ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு கல்வெட்டாகக் கருதத் தகுந்தவையாகும். ஏதோ ஒரு நூலை நீங்கள் வாசிக்கையில் உங்களை அறியாமலேயே உங்கள் ஆழ்மனதில் அந்த நூல் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கை தடம் மாறுவது உங்களை அறியாமலேயே நிகழும் அற்புதமாகும். கிடைத்தற்கரிய புத்தகங்களை எப்படியாவது ஆவணப்படுத்துவதே என் கனவாகும். அந்த நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்து இன்று உதவிடும் நண்பர்கள் பின்னர் ஒரு நாள் இந்த என் முயற்சிக்கு உறுதுணையாக நின்றமைக்கு நிச்சயம் பெருமைப்படும் வண்ணத்தில் அவர்கள் கொடுத்த நூலை என்னால் முடிந்த அளவுக்கு மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு உங்கள் கரங்களில் இல்லையென்றாலும் ஆவணமாகப் படித்து இன்புறும் விதத்தில் கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளேன். இந்த நூலை வெகுகாலமாகப் பாதுகாத்து என் முயற்சிகளைக் கேள்விப்பட்டுத் தானாக முன்வந்து கொடுத்து உதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், இந்த நூலை செம்மைப்படுத்தி உங்கள் பார்வைக்குக் கொண்டு வரும் முயற்சியின் ஒவ்வொரு இழையிலும் உடனிருந்து உதவிய திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் என் நன்றிகளை இந்த நேரத்திலும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..  

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

வலைத் தளத்தில் நூல்கள் வாசிக்கும் பழக்கம்..

வணக்கங்கள் தோழமை  உள்ளங்களே. 
வலைதளத்தில் இயங்குகின்ற சில தளங்கள் இணைய இணைப்பிலேயே தங்கள் புத்தகங்களைப் படித்தலையும் அவ்வாறு  படித்து  நன்றாக இருந்தால் தங்கள் நூல்களை  அருகாமையில் உள்ள அங்காடிகளில் வாங்கிக் கொள்ளுவதையும் ஊக்கப்படுத்துவது என்பது உலகுக்குப் புதிய புதுமையானதொரு  செய்தியல்ல. அதே போல  பிடிஎப் ஆகக்  கூட  வாங்கிப்  படித்தல், டவுன்லோட்  செய்து  கொள்ளத் தனிக் கட்டணம்  என்பவையும் உலகமெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு சங்கதியே. உங்கள் பார்வைக்கு  சில ஆன் லைனில் அணுகிப் படிக்கக் கூடிய  வாசிப்புத் தளங்களை இணைத்துள்ளேன். உறுப்பினராகுங்கள். இலவசப் புத்தகங்களை வாசித்து  அனுபவியுங்கள். சில  கட்டண விகிதங்களுக்குட்பட்டவை. பல இலவசத் தளங்கள். முயற்சியுங்களேன். 

dc Comics Reading
நிற்க தமிழகத்தில் இருந்து உலகளாவிய சர்வதேச தமிழ் சமூகம் தங்கள் அடையாளத்தை நிலைநாட்டிடும் முயற்சிகளில் பெரு வெற்றி கண்டு வரும் இந்த சூழலில் அவர்களுக்காகவும், தமிழ் மொழி வழங்கிடும் அத்தனை இந்து இடுக்குகளுக்கும் காமிக்ஸ் அனுபவத்தைக் கொண்டு சேர்க்கும் விதமாகவும் புதியதொரு மன்றம் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.
உறுப்பினராவதும், அதில் உள்ள இலவசப் புத்தகங்களை வாசிப்பதும், தேவை எனில் சந்தாக் கட்டணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது வரையில் இருபது, இருபத்திரண்டு  புத்தகங்கள் மட்டுமே காணப்படுகிறது. பின்னர் சேர்க்கப்பட்டு கிடைக்கும்  வாய்ப்புள்ள  புத்தகங்கள் முக நூல் முகவரியிலும் காணக் கிடைக்கின்றன. முயன்று பாருங்களேன். யார் கண்டது. இதனை அடியொற்றி நிறைய வலைத் தள வாசிப்பு தளங்கள் துவக்கம் காணலாம். இது தமிழின் முதல்  முயற்சி என்பது மட்டும் இப்போதைய சேதி.

இதற்கிடையில் நண்பர்கள் பல வலைப் பூக்களை இப்போது புதிதாகத் துவக்கி இருக்கிறார்கள். 
மற்றும் நமக்கு நன்கு தெரிந்த ரஞ்சித் ஆகியோர்.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். 
புதிய வாசிப்பு  முறைகள்  அனைத்தும் வெல்லட்டும். 
என்றும் அதே அன்புடன்
உங்கள் இனிய நண்பன் ஜானி

அரசர் தாவீது_விவிலிய சித்திரக்கதை வரிசை_012

வணக்கங்கள் தோழமை  உள்ளங்களே..
வெகு  நாட்களாகக்  காத்திருந்த  தாவீது  அரசரின் வரலாற்றின் இறுதிப் பகுதி  இந்தக் கதை...
முதல் பாகம் இங்கே: http://johny-johnsimon.blogspot.in/2016/09/011.html
(நன்றிகள் சுட்டிக் காட்டியமைக்கு திரு.வைரம் அவர்களுக்கு)
இந்த  விவிலிய சித்திரக்கதையினை வெகு காலமாக பாதுகாப்பாக வைத்திருந்து நமக்காகக் கொடுத்துதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், அன்னாரது  முயற்சிகளுக்கு  உறுதுணையாக  நின்றுதவிய குடும்பத்தாருக்கும் இறைவனின்  ஆசீர் கிடைக்கட்டும்.
 ரிலையன்ஸ் புண்ணியவான்களின்  தயவில்  இந்தப் பதிவினை  வலையேற்றுவதால் அவர்களுக்கும் என் நன்றிகள்.
அரசர் தாவீது தான்  சவுலின் கொலை வெறிக்குத்  தப்பி ஓடி ஒளிந்த காலத்திலும் சரி, மன்னராக முடி சூட்டப்பட்ட  காலத்திலும் சரி இறைவனுக்கு  புகழ் சேர்க்கும் கீதங்களையும், இசைக் கோர்வைகளையும்  இசைத்து  மகிழ்வாக  இருப்பார். அதனால் அவருக்கு விவிலியம் வழங்கிய சிறப்புப் பெயர் ஒன்று  உண்டு. அது சங்கீதக்காரன். இவரது பாடல்கள் அதிகமாகக் கொட்டிக் கிடக்கும்  இடம் விவிலிய நூலின் சங்கீதங்கள் பகுதியாகும்.



























வலைப் பூவில் ஒவ்வொரு பூவையும் மலரச் செய்வது என்பது பெரிய தவமாகும். முகநூலில் உள்ளது போன்ற இருவழிச் செய்திகளும் வேகவேகமான உரையாடல்களும், கிண்டல் கலாட்டாக்களும் இங்கே சாத்தியமல்ல. அமைதி  இங்கே உறைந்த ஒன்றாகும். இந்த நூலின் மின் பதிப்பு  வடிவினை நீங்கள் எங்கேனும் பகிரலாம். வெறுமனே  வலைத்தளத்தில்  கிடைத்தது  என்று மாய முரசு ராணி காமிக்ஸை நண்பர்  ஒருவர்  சமீபத்தில் தனது வலையில் பதிவேற்றினார். அந்த நூலை மின் வடிவாக்கம்  செய்த முயற்சிக்கு இந்தியா டுடேவில் நமது வலைப் பூவுக்கு மத்தியில் இடம் ஒதுக்கி சிறப்பு சேர்த்தார்கள் என்பதை அறிவீர்கள். மாயா மாயா டொம்ம் டொம்ம் டொம்ம் என்கிற அந்த மாய முரசொலியை இன்னுமொரு முறை இரசிக்க  இங்கே செல்லுங்கள். இது போன்று உரிய புத்தகங்களை உரிய நேரத்தில் வாசிக்கவும், மின் தடவல் மேற்கொள்ளவும் கொடுத்துதவிய அனைத்து நண்பர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள். கடவுளும்காலமும் அனுமதித்தால் அடுத்த கதையான..  
சாலமன் அரசரின் வரலாறுடன் தங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது  உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன். 
உங்களுக்குப் பிடித்தமான கதைகளை தமிழில் வாசிக்கவும் நேசிக்கவும்  
சந்தா  கட்டலாமே நண்பர்களே...



புதிய முயற்சியாக மலர்ந்துள்ள 
மன்றத்தில் இணைவதையும் யோசியுங்கள். 
பை...






எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...