செவ்வாய், 24 மே, 2016

சிறுமியர் காமிக்ஸ்_தமிழில் முதல் முறையாக_கால இயந்திரம்...!

வணக்கங்கள் தோழமை நிறை நெஞ்சங்களே. இதோ உங்களுக்காக ஜூடி. சிறுமியருக்கென்றே வடிவமைக்கப்பட்டதொரு சித்திரக்கதைப் புதையல். பூக்கள் என்ன நினைக்கும்? மலர்கள் எப்படி வாசம் வீசும்? தென்றல் எப்படித் தழுவிச் செல்லும்? அதுதான் சிறுமியர் சித்திரக்கதைகள். 
அதில் ஜூடிக்குப் பெரும் பங்கு உண்டு. இன்று தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் மூலமாகத் தமிழகத்தில் காலூன்றி இருக்கிறாள். அவளது அட்டகாசங்களுக்கு இது ஒரு சிறிய துவக்கப் புள்ளிதான். இதனை நெடும்பயணம் ஆக்குவதற்குத் தமிழ் மண்ணில்  உள்ள  சித்திரக்கதைப் பத்திரிகைகள் குறிப்பாக லயன்  குழுமம் ஆர்வம் காட்டினால் மிகவும் மகிழ்வேன். 






குறிப்பு:

அப்படியே pdf, cbr கொடுத்து விடுங்கள்  தோழர்களே. அது உங்கள்  கடமை. ஆங்காங்கே  முகநூலிலும் உங்கள் டைம் லைனில் பகிர்ந்தாலும் மகிழ்ச்சியே. 

என்றும் அதே  அன்புடன், உங்கள் இனிய நண்பன் ஜானி.

திங்கள், 9 மே, 2016

காயீன் & ஆபேல் _விவிலியப் படக்கதை_001

 இறைவனின் பேரன்புக்குப் பாத்திரமான இறைவனின் இனியவர்களே. இனிய வணக்கங்கள். அன்னையர் தின நல்வாழ்த்துகள் சகோதரிகளே. 
 இது விவிலிய சித்திரக்கதை வரிசையில் வந்த காயீன் & ஆபேலின் அடுத்த கட்ட பரிணாமம். இதனை வண்ணத்தில் உருவாக்கிட உழைத்த எல்பின் & தியோவுக்கு வாழ்த்துக்கள். இது தேவசி மற்றும் பென்னி ஆகியோரால் வரையப்பட்டு கதை புனையப்பட்ட விவிலியப் படக்கதை வரிசையில் முதலாவது நூலாகும். புத்தகங்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு எண்கள், மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவகாசி ஜேம்ஸ் ஆர்ட்ஸ் இதனை பிரசுரித்துள்ளது. இந்தத் தொடர் துவக்கத்தில் நீங்கள் வாசித்த அதே காயீன் & ஆபேல் இரு வண்ண சித்திரக்கதையின் ஓவியங்கள் மற்றும் கதை ஓட்டம்தான். வண்ணத்தில் அசத்தி இருக்கின்றனர். தமிழும் புதிய தலைமுறைக்குகந்த விதத்தில் வடிவமைப்புக்குள்ளாகி இருக்கிறது. படித்து மகிழுங்கள். இறைவனின் அன்பை ருசியுங்கள். பொறாமையும், அன்பும் சந்திக்கும் தருணங்களை மனதில் என்றும் நினைவு கொள்ளுங்கள். அன்பே வெல்லட்டும். அன்பே இறைவன். அன்பே நித்யம்.  




































அன்பே உருவான ஆபேலின்  வாழ்க்கை உங்கள்  வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தால் அதுவே இந்த சித்திரக்கதையின் சிறப்பாகும். இறைவனது முன்னிலையில் பொறுமையும், மனத் தாழ்ச்சியும் மட்டுமே நன்மைகளைக் கொண்டு வரும் பிரியமானவர்களே. இந்த நூலை நமக்காக கொடுத்துதவிய விசுவாச நூலகம், புனித தாமஸ் மலை தேசிய திருத்தலத்தைச் சார்ந்த  ரோமன் கத்தோலிக்க சபையினர் அனைவருக்கும்  தமிழ் காமிக்ஸ் டைம்ஸ்  வாசகர்கள் சார்பில் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். இந்த கூட்டு  முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும், வாசித்து மகிழ்ந்த அனைவருக்கும் இறைவனது இனிய ஆசீர் கிடைப்பதாக. 
நன்றி.
என்றும் அதே கிறிஸ்துவின்  அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 
குறிப்பு: பழைய விவிலிய சித்திரக்கதை வரிசை அதன் போக்கில் தொடரும். இந்த புதிய வண்ண விவிலியப் படக்கதை கிடைத்த நூல்கள் வரை தொடரும். 

ஞாயிறு, 1 மே, 2016

சவுல்_விவிலிய சித்திரக் கதை வரிசை_010

வணக்கங்கள் நண்பர்களே,
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
உங்கள் காலம் அரசர்கள் காலத்துக்கு முந்தைய காலமாக இருந்தால் என்ன நிலை நீடித்திருக்கும்? ஆளுக்காள் நாட்டாமை என்கிற நிலைதானே இருந்திருக்கும்? ஆனால், யூத மக்களுக்கு ஒருவரும் அரசராக இல்லாமல் இறைவனே நேரடி ஆட்சி நடத்திய காலம் ஒன்று உண்டு. அப்போது அவர் நியமிக்கும் தலைவர் மக்களை வழி நடத்துவார். அவர் வழிகாட்டி மட்டுமே. மக்களை ஒருங்கிணைத்தல் மட்டுமே அவர் பணி. வரி வசூல் செய்தல், நாட்டு நலன் திட்டங்கள், போர் என்கிற சங்கதிகள் இல்லாத ஒரு கட்டம். சாமுவேல் சரித்திரம் சென்ற விவிலியக் கதையில் வாசித்திருப்பீர்கள். இறைவன் நேரடியாக சாமுவேலுடன் பேசினார். அவர் மக்கள் பணியில் இருந்தார். மக்கள் தங்கள் எதிரிகளிடம் இருந்து தங்களைக் காக்க ஒரு அரசன் வேண்டும் என்று அடம் பிடித்த போது இறைவன் யாரும் எதிர்பாராத விதமாக ஆடு, மாடு மேய்த்து வந்த சவுலை அழைத்து யூத மக்களை ஆளும் மன்னராக்குகிறார். யூத மக்களின் முதல் அரசன் சவுல். சவுலின் வரலாறு இதோ.  

































அப்புறம் நண்பர்களே ஒரு வித்தியாசமான கோரிக்கை. வித்தியாசமான நண்பரிடம் இருந்து தமிழ் காமிக்ஸ் டைம்ஸில் விடுக்கப்பட்டது. அதன் தமிழாக்கம் இதோ.
"நீங்கள் இப்போது மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வரும் நண்பர்கள் நிதி திரட்டல் மூலமான சித்திரக்கதை வெளியீட்டு உத்திகள் பற்றி அறிந்திருக்கலாம். நிறைய சித்திரக்கதை வாசகர்களையும், ஆர்வலர்களையும் கொண்டுள்ள நம் மத்தியில் நம் ஒவ்வொருவரிடம் இருந்தும் சிறு தொகையை முதலீடு செய்து நாம் ஏன் நமது சொந்த சித்திரக்கதைகளை உருவாக்கக் கூடாது? பக்கங்களை உருவாக்குவதில் (ஓவியங்கள் மற்றும் பக்க லே அவுட்) எனது பணியை நான் நல்லதொரு தொகையில் செய்து தருகிறேன். நமது சித்திரக்கதைக்காக நான் குறைவான விலையில், எனது பங்காக விலையைக் குறைத்து செய்து தருகிறேன். இங்கே இருக்கும் மற்ற ஆர்வமுள்ள ஓவியர்களும் இதில் இணைந்து பங்கு கொள்ளலாம். அதே போன்று பதிப்பகத் துறையில் இருக்கும் நமது தோழர்கள் பதிப்புப் பணிகளை உங்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாமே. கதைகளுக்கான யோசனைகள் நம்மில் எவரும் கொண்டு வரலாம். அந்தக் கதைகளை, நாமே உருவாக்கும் ஒரு குழு வளர்த்தெடுக்கலாம். எனில் விரைவிலேயே நமது சொந்த சித்திரக்கதைப் புத்தகம் நமது கரங்களில் தவழும்...! அதனைத் தொடர்ந்து மேலும் பல சாதனைகள் கை கூடும்.
இது ஒரு யோசனைதான். அனைவரும் இது குறித்த உங்கள் சிந்தனைகளுடன் வெளிப்படையாக விவாதித்திட முன்வாருங்கள்."
-வின்சென்ட் மோசஸ் ராஜா.
(நண்பர் திரு மோசஸ் v. ராஜா அவர்கள் ஏற்கனவே அம்புலி மாமா, இந்து, சுட்டி விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றி மற்றும் பங்களித்தவர். இப்போது சர்வதேசப் பதிப்பகங்களுக்கும் நடப்பில் பங்களித்துக் கொண்டிருப்பவர். _ஜானி) 
மீண்டும் உங்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள் கூறிக் கொண்டு விடைபெறுவது உங்கள் இனிய நண்பன் ஜானி!

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...