Posts

Showing posts from January, 2017

ஜடாயு...மீண்டு வந்த நாயகன்...மீண்டும் வந்த நாயகன்...

Image
வணக்கங்கள் பிரியமானவர்களே...!
தமிழ்..உச்சரிக்கையிலேயே இனிக்கும் மொழி..இதில் வெளியாகி ஐநூறு இதழ்களை வெற்றிகரமாகக் கொண்டு வந்து அத்தனையையும் சரித்திரமாக்கியது தினத்தந்தியின் பெருமை மிகு இதழ் ராணி காமிக்ஸ்.
அதில் சாகசம் செய்த நாயகர்கள் அனைவருமே யாராவது வாசகர்களை ஈர்த்தே வந்துள்ளனர். இன்று வரையிலும் நினைவு கூறப் பட்டும் வருகிறார்கள்.


கழுகு மனிதன் ஜடாயு..
இவனது சாகசங்கள் எங்கள் தலைமுறையினரை அதாவது தொண்ணூறுகளின் வாசகர்களைத் தாண்டி மில்லினிய வாசகர்களை அதிகம் கவர்ந்திருப்பது நிறைய வாசக நண்பர்கள் தங்கள் விருப்ப நாயகர்களாக கழுகு மனிதன் ஜடாயுவையும், கரும்புலியாரையும் (இவர் பெயரைக் கேட்டாலே அலறி அடித்து ஓடிய கூட்டத்தில் நானும் ஒருவன்..கதைகள் வேதாளர் வாசித்தவர்களுக்குக் கடுப்பேற்றும். அதுதான் உண்மையான காரணம். நான் வேதாள மாயாத்மா அபிமானி..) குறிப்பிட்டது கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன்.

நிற்க..
கழுகு மனிதன் ஜடாயு 27.01.2017 முதல் மீண்டு வந்திருக்கிறார். தினமலர் - சிறுவர் மலர் வாயிலாக....தினத்தந்தியின் ராணி காமிக்ஸ் வாசகர்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது போல தின மலர் சிறுவர் மலர் வாயிலாக காமிக்ஸ் வாசிக்கு…

இசைக்கலாம் இளையோரே!

போலீஸுக்கு ஒரு சல்யூட் :) (y)
ஆட்டோவில் தீவைக்கும் வீடியோ, வீட்டிற்கு தீவைக்கும் வீடியோ, ஓடி ஓடித் துரத்தி பெண்களை - குழந்தைகளை லத்தியால் அடிக்கும் வீடியோவைப் பார்த்துக் கொதித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் என்னைக் கழுவி ஊத்த தயாராகிக் கொள்ளுங்கள்.
மாணவர் போராட்டத்தில் மிகச் சிறப்பாய் பணியாற்றிய காவல்துறையினருக்கு என் பாராட்டுக்கள்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாய் இரவு பகல் பாராமல் மாணவர்களைக் காத்தீர்கள். மாணவர்களின் அனைத்து சிரமங்களையும் உங்கள் சிரமங்களாய் பகிர்ந்து கொண்டீர்கள். ஆகப்பெரும்பாலும் அவர்களைப் போலவே உணர்வு கொண்டவர்களாய் நீங்களும் இருப்பதால் உணர்ச்சி வேகத்தில் யூனிஃபார்மில் கோசம் போட்டு கடமையிலிருந்து தவறி போராட்டக்காரராகவே மாறிப் போன காவலர் பற்றியும் ஒரு நாள் கேள்விப்பட்டேன்.
நிர்வாகத்திற்கான - பேச்சுவார்த்தைக்கான கலெக்டரோ, எம் எல் யோவோ, மினிஸ்டரோ, மேயரோ தன் பொறுப்பினைப் புறம் தள்ள, போராட்டக்காரர்களிடம் நீங்களே பேச்சு வார்த்தை நடத்தி புதிய சரித்திரம் படைத்தீர்கள். பேச்சுவார்த்தைக்கு என்று தலைவர்கள் இல்லாத வித்தியாசமான போராட்டச் சூழலில் மைக் வைத்துக் கொண்டே எல்லா நகர்களில…

அமைதி நிலைக்க...

Image
சமீபத்தில் முயற்சித்த சில சித்திரக்கதைப் பக்கங்கள்...

ரிங் கொடுங்க மரக் கன்றை அள்ளுங்க

Image

ஒரு வினாடி நில்லுங்க பாஸ்..

நண்பர் சம்பத்தின் பார்வர்ட் செய்தி இது. தகவல் பயனுள்ளதாகத் தோன்றியது.
வாசித்து யோசிங்கப்பா.

ஆறுவது_சினம்

மலரச் செய்த முகங்களை மெல்லச் சுருங்கச் செய்து, சுளிக்க வைக்கிறது இந்தப் போராட்டம்.

மத்திய, மாநில அரசுகள் மீது வைக்கப்பட்ட எதிர்மறை  விமர்சனத்துக்கு அனைவரும் எதிர்பார்த்ததை விட பலன் கிடைத்திருக்கிறது.

நிரந்தரச் சட்டம் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதை நிறைவேற்றுவதற்குரிய சிறிது கால அவகாசத்தை அளித்திட வேண்டும். வலையில் சிக்கிய மீன் எங்கும் நழுவி விடப் போவதில்லை. எதிர்தரப்பும் மெச்சத் தகுந்த விதமாய் நடத்தப்படுவதே போராட்டத்துக்கு அழகு.

உலகின் கவனத்தை ஈர்த்துவிட்டோம். அவசரச் சட்டம் வந்தாயிற்று. நிரந்தரச் சட்டத்துக்கு சிறிது அவகாசம் கேட்கிறார்கள். அவ்வளவே. உச்சபட்ச வானளாவிய அதிகாரம் படைத்த அரசாங்கத்திடம் இதற்கும் மேல் எதிர்பார்ப்பது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அழகல்ல. களத்தில் எதிரிக்கும் உரிய மரியாதையை அளிப்பதே சிறந்த வீரனுக்கான லட்சணம்.

உணர்ச்சிக் கொந்தளிப்பும், குழு மனப்பான்மையும் வரையரைக்குள் இருக்கும் வரைதான் போற்றத்தக்கது.

போதுமான அளவு போராடியாகி வி…

எங்க உலக நாயகர்களிடம் இருந்து ஆதரவு...ஏறு தழுவுதலுக்கு....

Image
மேலும் சில படங்களைக் காண  https://www.facebook.com/photo.php?fbid=1219743491434639&set=gm.707780439383019&type=3

வலேரியன் - விண்வெளி நாயகன்...

Image
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... நாம் இப்போது பார்க்கப்போவது வலேரியன் காமிக்ஸ். இது ஒரு பிரெஞ்சு காமிக்ஸ். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கதைகள் தொடராக இந்தத் தலைப்பில் வெளியாகி விற்பனையில் சாதித்துக் கொண்டிருக்கின்றன. பியரே கிறிஸ்டின் கதையில் ஜீன் கிளாட் மேசியர்ஸ் கைவண்ணத்தில் உருவாகியுள்ள படைப்பு இது.  ஓவியர் ஜீன் கிளாட் மெசியரெஸ் அவர்களைத் தனது புதியதோர் அறிவியல் புனைகதைத் திரைப்படத்துக்கான செட் டிசைனை 1991 ன் முடிவில் திரைப்பட இயக்குனர் லக் பெஸ்ஸன் வரைந்து தரக் கோரினார். அவருக்கு இருபத்தைந்து ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருந்த வலேரியன் காமிக்ஸ் மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். 

எனவே தான் பணியாற்றிக் கொண்டிருந்த தி சர்க்கிள் ஆப் பவர் கதையுடன் நிறுத்தி விட்டு திரைப்படத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். 
இது இருபத்து மூன்றாம் நூற்றாண்டில் ராக்கெட் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. அவர் வேற்று கிரகப் பெண்ணுடன் காதல் கொண்டு பின்னர் இருவரும் இணைந்து உலகை மற்ற கிரகங்களின் அச்சுறுத்தல்களில் இருந்து எப்படிக் காப்பாற்றுகிறார்கள்? என்பதை மையமாக்கிய கதைதான் வலேரியன்.
எத…

வாடகைப் புத்தக நிலையங்கள்..பட்டியலிடுவோம் வாரீர்..

Image
நானே ஒரு குறுகிய கால வாடகைப் புத்தக நிலைய நிறுவனர்தான். இது போன்று எனது சொந்த ஊரான மணலூர்ப்பேட்டையில் ரப்பர் ஸ்டாம்ப் பதித்து இரண்டு வாடகை புத்தக நிலையங்கள் தங்கள் புத்தகங்களை வாடகைக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் எல்லா வாடகைப் புத்தக நிலையங்களும் தங்கள் பழைய புத்தகங்களை..சம்பாதித்துக் கொடுத்து ஓய்ந்து விட்ட புத்தகங்களை கேட்போருக்கு விற்று விட்டதும், வாடகைக்கு எடுத்தவர்கள் அப்படியே குறுகிய மனப்பான்மையுடன் ஆட்டையைப் போட்டு விட்டதும் நேர்ந்து இன்றோ காமிக்ஸ் என்பதே தமிழ் நாட்டில் லென்ஸ் வைத்துத் தேடும் அளவில் குறுகி விட்டது. தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் அவ்வப்போது இதனை உடைத்தே வந்திருக்கிறது.
நிற்க...உங்களிடம் உள்ள புத்தகங்களை எடுத்துப் பாருங்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாடகைப் புத்தக நிலையங்களைக் குறித்த பகுதியை மட்டும் ஒரு புகைப்படமோ முடிந்தால் ஸ்கான் செய்தோ இங்கே பகிருங்கள். எத்தனை வாடகை புத்தக நிலையங்கள் இயங்கின என்று சுமாராகவாவது கணக்கேடுப்போம். முன்வாருங்கள். உங்களிடம் உள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றுமே பொக்கிஷம்தான். அதில் அடங்கியுள்ள இது போன்ற தகவல்களும் பொக்கிஷங்களே. பி…

கவனியுங்கள் காளையரே!

Image
மாடு -- செல்வம் என்பது பொருள். செல்வத்தை இழக்க யார்தான் சம்மதிப்பார்? எம் மண்ணின் மைந்தராம் காளை மாடுகள் வளம் பெற வேண்டும். இனப்பெருக்கத்துக்கு பொலி காளைகளாகப் பெரும்பாலும் இருப்பவையே தவிர, அவற்றையும் ஏறு தழுவப் பயிற்றுவிப்பதும் உண்டு.  மற்ற அனைத்துக் காளைகளும் பெட்ரோல் போடத் தேவையில்லாத தாவர உண்ணியான உழைக்கும் வர்க்கம்தான். வண்டி இழுக்கும். ஆளில்லா விட்டாலும் தன் வீட்டுக்குத் தனது வண்டியை இணையாக இழுத்து நடந்து செல்லும் காளையர் உண்டு எம் மண்ணில். முன்னே மழலைகள் வந்தாலும் தவிர்த்துச் செல்வதை எம் கிராமங்களில் இன்றளவும் பார்க்கலாம். வண்டி யோட்டி வண்டியிலேயே படுத்துறங்கி வீடு சேர்வதை எம் தெருக்ககளில் காணலாம். நமது உழைப்புக்கான மரியாதை நமது உறவினங்களான மாடுகளே. மாடுகளான செல்வத்தைக் காத்துக் கொள்வதால் விவசாயிகளைக் காக்கும் தன்மைக்குத் தானாகவே ஆதரவுக் கரம் நீட்டுகிறோம். மனத்தில் வைங்க. மாடுன்னா செல்வங்க. மாடுன்னா கெத்துங்க.

பசுவோடு பழகுங்க பாஸ்..

ஒரு மாட்டை வளர்த்திருக்கிறீர்களா? அதன் கழுத்தின் கீழே தடவிக் கொடுத்திருக்கிறிர்களா? நாய் மட்டுமா பாசம் காட்டும்? பசுக்களும், கன்றுகளும், காளைகளும் குடும்பத்தில் ஒருவராகப் புழங்கும். என் தந்தையார் பால் கறக்க அமர்வார் அருகில் போய் அமர்ந்து காம்பைத் திருகிப் பால் கறப்பதை வேடிக்கை பார்ப்போம். அது போல் அமர்ந்து பார்த்ததுண்டா நீங்கள்? மாட்டுப் பொங்கல் சமயம் காளை வைத்திருப்போர் கொம்புகளை உப்புத்தாள் வைத்துத் தேய்த்து வண்ணம் தீட்டி மகிழ்வர். பசு வைத்து இருந்த நாங்கள் கிறிஸ்தவரெனினும் பசுவுக்கும் கன்றுக்கும் குளியல் போட வைத்து  தோட்டத்து மலர்களை மாலையாகக் கட்டி மாலையிட்டு, அலங்கரித்து குங்குமமும் மஞ்சளும் சேர்ந்த பொட்டு வைத்து சந்தனத் தூளைத் தண்ணீர் கலந்து தெளித்து கற்பூரம் கொளுத்தித் தீபம் காட்டி எமக்கு உன் இரத்தத்தைப் பாலாக ஆண்டு முழுவதும் தந்து உதவுவதற்கு நன்றி தாயே என வணங்கி ஆக்கி வைத்தப் பொங்கலை ஊட்டி மகிழ்வோம். தாய்க்குப் பின் பாலைத் தரும் பசுக்களுக்கு எம் பகுதிகளில் ஆதரவு அதிகம்.  காளைகள் பொதுவாக ஒரு வயதுக்குப் பின்னர் உழவுப் பணிகளுக்கும், பிற மாநில உணவுத் தேவைகளுக்கும் அதிக நாட்கள் தங…

வால்ட் டிஸ்னி..டிராகுலா வெர்ஷன்..

Image

சும்மா சில பக்கங்கள்..

Image