வியாழன், 19 ஜனவரி, 2017

வாடகைப் புத்தக நிலையங்கள்..பட்டியலிடுவோம் வாரீர்..


நானே ஒரு குறுகிய கால வாடகைப் புத்தக நிலைய நிறுவனர்தான். இது போன்று எனது சொந்த ஊரான மணலூர்ப்பேட்டையில் ரப்பர் ஸ்டாம்ப் பதித்து இரண்டு வாடகை புத்தக நிலையங்கள் தங்கள் புத்தகங்களை வாடகைக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் எல்லா வாடகைப் புத்தக நிலையங்களும் தங்கள் பழைய புத்தகங்களை..சம்பாதித்துக் கொடுத்து ஓய்ந்து விட்ட புத்தகங்களை கேட்போருக்கு விற்று விட்டதும், வாடகைக்கு எடுத்தவர்கள் அப்படியே குறுகிய மனப்பான்மையுடன் ஆட்டையைப் போட்டு விட்டதும் நேர்ந்து இன்றோ காமிக்ஸ் என்பதே தமிழ் நாட்டில் லென்ஸ் வைத்துத் தேடும் அளவில் குறுகி விட்டது. தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் அவ்வப்போது இதனை உடைத்தே வந்திருக்கிறது.

நிற்க...உங்களிடம் உள்ள புத்தகங்களை எடுத்துப் பாருங்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாடகைப் புத்தக நிலையங்களைக் குறித்த பகுதியை மட்டும் ஒரு புகைப்படமோ முடிந்தால் ஸ்கான் செய்தோ இங்கே பகிருங்கள். எத்தனை வாடகை புத்தக நிலையங்கள் இயங்கின என்று சுமாராகவாவது கணக்கேடுப்போம். முன்வாருங்கள். உங்களிடம் உள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றுமே பொக்கிஷம்தான். அதில் அடங்கியுள்ள இது போன்ற தகவல்களும் பொக்கிஷங்களே. பின்னால் ஆராய்ச்சி செய்யப் போகும் மாணவர்கள் நலன் கருதியும் எதிர்காலம் எப்போதுமே இறந்த காலத்தை மறந்து போகக்கூடாது என்கிற தொலை நோக்கோடும் இந்தப் பதிவை இடுகிறேன். ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக் கொள்கிறேன். (எங்க ஊர் புக்கு வெச்சிருக்கிற நண்பர்கள் வெளியில வரும் நாள் எனக்கு ஒரு திருநாள்...)  எந்த புத்தகம் என்கிற விவரம் கூடத் தேவையில்லை. அது காமிக்ஸ்தானா? அதில் அடிக்கப்பட்டுள்ள முத்திரை அல்லது கையால் எழுதப்பட்ட விவரங்கள் போதும். நானெல்லாம் அந்தக் காலத்தில் ஸ்டாம்ப் அடிக்கிற அளவுக்கு வசதியில்லைங்க. எங்க ஊரில் ரெண்டு வாடகை புத்தக நிலையங்கள் இருந்தது என்று சொன்னேன் அல்லவா? அதில் ஒன்று என் சித்தப்பா திரு.ரபேல் வைத்து நடத்தியது. பின்னர் தொண்ணூறுகளில் என் சகோதரன் செந்தழல் ரவியின் இல்லம் அமைந்துள்ள மணம்பூண்டி பகுதி வாடகை நூல் நிலையத்தை அவன் எனக்கு அறிமுகம் செய்தபோது இரும்புக்கை நார்மன் முதலான எக்கச்சக்கப் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. அதில் திருக்கோவிலூர் கடைகளில் அப்போதுதான் வெளியாகி இருந்த சிரித்துக் கொல்ல வேண்டும்_பேட் மேன் சாகசம் மறக்கவியலாதது. இருந்த காசுக்கு அன்றைக்குக் கடையில் தொங்கிய நான்கு இதழ்களையும் வாங்க முடியாமல் ஏதோ ஒன்றிரண்டு வாங்கினோம். நாம் நம்ம வேலையைக் கவனிப்போம். வாடகைப் புத்தக நிலையங்களைப் பட்டியலிட்டு அவர்களுக்குரிய மரியாதையை செலுத்துவோமே?
1.பாரதி வாடகை நூல் நிலையம், 19, உலகளந்தார் மாட வீதி, (பஸ் நிலையம் அருகில்) காஞ்சிபுரம் 631502 
என்னிடம் உள்ள அனைத்துப் பெயர்களும் சிறிது சிறிதாகப் பட்டியலில் சேர்க்கப்படும். இன்றும் இந்த வாடகை நூல் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கலாம் உங்கள் பகுதியில்..அவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் வாடகை நூலகங்களை இப்பகுதியில் காண நேர்ந்தால் அதன் விவரங்களை இங்கே தெரிவிக்கலாம். புகைப்படம் எடுத்து அனுப்பலாம். இதே பதிவில் சேர்த்து விடுகிறேன். 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்...ஜானி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...