Posts

Showing posts from November, 2016

ஒரு நிமிடம் சிந்தீப்பீரா பெற்றோரே...

தி இந்து நாளிதழில் வந்த மிகச் சிறந்த கட்டுரை.


பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக படித்து அதன்பின்பு  தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்.


எதற்காக  இப்படி ஓடுகிறோம் ?


சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகள் ஆக்குகின்றன பள்ளிகள்.


நம் எல்லோருக்குமே வாரிசு நலன் முக்கியமானதாக இருக்கிறது. எல்லோருடைய உயர்ந்தபட்ச ஆசை, கனவு, நோக்கம், லட்சியம் எல்லாவற்றிலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் உட்கார்ந்திருக்கிறது. இதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராகவும் இருக்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிந்திக்கிறோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், அடிப்படையான அம்சங்களில் கோட்டை விடுகிறோம்.


சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன்.

அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது.

அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள்.

பள்ளி செல்லும் வயதுடைய…

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்...

இன்றிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம் பிரதமர் மோடி ரூ.500 ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். நவம்பர் 10 முதல் வங்கி அல்லது தபால் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் பிரதமர் மோடி ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து ரூ.500,ரூ1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிகொள்லாம். மருத்துவமனைகளில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும். நவம்பர் 11-ம் தேதி இரவு வரை விமானம்,ரெயில் டிக்கெட் வாங்க மற்றும் மருந்தகங்களில் ரூ.500,ரூ.1000 நோட்டுகள் செல்லும். நவம்பர் 9-ம் தேதி 10ம் தேதிதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காது. டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,காசோலை மற்றும் டிடி பரிவர்த்தனையில் எந்த மாற்றமும் இல்லை. ரூ.2000 ரூபாய் நோட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது..  இதில் பதறவோ, அதிர்ச்சியோ தேவையில்லை.

ஞானமிகு பேரரசர் சாலமன் _விவிலிய கதை வரிசை_013

Image
வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே.. இம்முறை விவிலியத்திலிருந்து பேரரசர் சாலமனின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்ள உங்களை அழைத்துப் போகிறேன்....இறைவன் அவரிடம் அவரது சிறு வயதில் உனக்கு அளவற்ற செல்வம் வேண்டுமா இல்லை அளவற்ற ஞானம் வேண்டுமா என்று கேட்டார்...எதனை சாலமன் தேர்ந்தெடுத்தார் தெரியுமா? அவர் ஞானத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்த ஞானம் அவருக்கு அளவற்ற செல்வத்தை மட்டுமல்ல பூமியின் கடைக்கோடி எல்லையில் வசித்த ஜனங்களும் அவரது கீர்த்தியையும் புகழையும் அறிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பானதொரு வாழ்க்கையை தேடித் தந்தது.
பேரரசர் சுலைமான் என்று இஸ்லாமிய சகோதரர்களால் குறிப்பிடப்படும் இவரது வரலாறு விவிலியப் பார்வையில் உங்கள் முன் காட்சித் தொகுப்புகளாக விரிகிறது. நல்ல ஞானத்தைத் தேடுகிறவன் அதனுடன் அளவற்ற செல்வத்தையும், புகழையும் அடைகிறான் என்பதே இந்தக் கதை நமக்குக் கூறும் நீதியாகும். இனி உங்கள் கைகளில் பேரரசர் சாலமன்....