Friday, 15 December 2017

001-உயிரைத்தேடி....


வணக்கங்கள் நட்பூக்களே... 
மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத்  தேடியையே எடுத்துக் கொள்ளுங்களேன்.. மிக அபூர்வமான ஒரு புத்தகம். இன்று வெள்ளிக்கிழமை நல்ல தினத்தில் பதிவிட்டு ஒரு துவக்கம் கொடுத்துள்ளேன்.   
இதுவரையில் வந்து தரிசித்த நண்பர்களின் எண்ணிக்கை 225
போனிலும் முகநூல் மூலமாகவும் சில நண்பர்கள் மாத்திரமே தொடர்பு கொண்டு விரைவில் வெளியிடுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இங்கே வலைப்பூவை எட்டிப் பார்த்து விட்டு கிளம்பிச் செல்லும் நண்பர்களின் எண்ணங்கள் என்னவாக இருக்க முடியும்? அவர்கள் ஏன் எத்தனை முயற்சி எடுத்தாலும் ஒரு நாலு வரி பாராட்டியோ திட்டியோ எழுதுவதில்லை என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இணைய உலகில் எல்லாம் எளிதாக கிடைத்து விடுகிறதுதான். ஆனால் அந்த எளிதாக கிடைப்பதற்கும் ஒரு விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. யாரோ ஒருவர் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டே இந்த சாதனைகளை தவமாகப் புரிந்து எத்தனையோ தியாகங்களை மேற்கொண்டே செய்து தீர்க்கின்றனர். அவர்களை எந்த விதத்தில் நீங்கள் அங்கீகரிக்கபோகிறீர்கள்? உங்கள் நாலு வரி பாராட்டுக்கு  எத்தனை பலமுண்டு என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?
இந்த கதையைப் பொறுத்தவரை எனது சிறு வயதில் என் தாத்தா திரு.அமிர்தன் (தந்தை பெயர்இன்னாசி முத்து ) அவர்கள் என்னை தேநீர் அருந்தும் கடைக்கு அழைத்து செல்லும்போது அங்கே இருக்கும் சிறுவர் மலர் இதழை புரட்டுவேன். அதில் வந்த இந்தத் தொடர் என் மனத்துடன் ஒன்றிப் போனது. இந்தக் கதையில் வரும் பிங்கியோடு ஜானி என்ற என் பெயர் உள்ள தோழனும் இணைந்து இந்த அழிவால் பாதிக்கப்பட்ட உலகைச் சுற்றி வலம் வந்து யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்கிற தேடலை மேற்கொள்ளும்போது அவர்கள் படும் துன்பங்களும் சோதனைகளும் அவர்களுக்கு நேரிடும் அபாயங்களும் மிரட்டலாக அமைக்கப்பட்டிருக்கிறது... 

இந்தத் தொடர் துவக்கம் கண்டது...15,ஜனவரி-1988
அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை தினம்தான்..
நிறைவை எய்தியது மார்ச் 10 -1989 ல்.


சிறுவன் ஜானிக்கு ராணி காமிக்ஸ் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே இந்த தொடரும் வாசிக்கக் கிடைத்தது அவன் செய்த பாக்கியம். அந்த ஆனந்தத்தை உங்களோடு சேர்ந்து மீண்டும் ஒரு முறை... 
சாத்தியப்படுத்திய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும் ஒருங்கிணைத்த திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் சில பாகங்களை நேரில் சந்திக்காவிட்டாலும் கொடுத்தனுப்பி உதவிய அய்யம்பாளையத்தார் திரு.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும்..சில பாகங்களை ஸ்கான் செய்து தந்து உதவிய திரு.சதீஷ் ஈரோடு அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ளக்கடமைப்பட்டிருக்கிறோம். 
இந்தத் தொடர் தி வாக்கிங் டெட் என்கிற பிரபலமான காமிக்ஸ் தொடரை வெளியிட்ட பதிப்பகத்தின் ஆரம்பகால முயற்சிகளுள் ஒன்றாகும்..  
குறிப்புகள்:


மொத்தம் அறுபத்தொரு பாகங்களாக வெளியாகியுள்ளது இந்தத் தொடர்.. அதாவது அறுபத்தொரு வாரம். நினைத்துப் பாருங்களேன். இத்தனை வாரங்களும் வெள்ளிக்கிழமையன்று தேடித் திரிந்து பிடித்து வாசித்து கதையின் அடுத்தடுத்த பகுதிகளை துரத்திக் கொண்டு பட்டாம்பூச்சிகளாக வலம் வந்த அந்நாட்கள் நினைவில் இனிமையாக நிழலாடுகிறதா??? 

திரு.D.ஹார்ட்டன் எழுத்திலும் திரு.ஓர்டிஸ்  ஓவியத்திலும் அசத்தலாக உருவான இந்தக் கதை வெளியான ஈகிள் இதழின் வெளியீட்டு எண் 279.. 
  
ஈகிள் பத்திரிகையில் வெளியானது 25,july-1987 saturday 
கறுப்பு வெள்ளையில்..தினமலர் நமக்கு வண்ணத்தில் அதுவும் இலவசமாக வழங்கி நமது இளமைப்பருவத்துக்கு பரிசளித்து மகிழ்ந்தது என்றால் மிகையாகாது. அதற்காக தினமலர் நிர்வாகத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்..

நன்றிகள் தினமலர்... 

இந்த தொடரை பாதுகாத்து தன் பொக்கிஷ அறையில் இருந்து வெளிக்கொணர்ந்து உதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்கள் இல்லத்தில் விசேஷம் நடக்கவிருக்கிறது. வரும் இருபத்தெட்டாம் தேதி அவரது பெண்ணுக்குத் திருமணம் நடக்கவிருக்கிற இந்த தருணத்தில் கொண்டாட்டத்துடன் கொண்டாட்டமாக இந்தத் தொடரைத் துவக்கியிருக்கிறோம். விரைவில் மீத பாகங்களை நண்பர்கள் உதவியுடன் கொண்டு வரவிருக்கிறோம்.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி...

9 comments:

 1. முழு தொடர்க்காக வெயிட்டிங்!

  ReplyDelete
 2. தொடர்க உங்கள் சேவை.

  ReplyDelete
 3. அன்பின் ஜான் சைமன்,

  பல வருட தேடுதல் ஒரு நிறைவுக்கு வந்தது குறித்து முதலில் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே.!

  இந்த மெகா தொடரை 'பளிச்' ஆக்கிய சொக்கருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.!

  ஸ்கேன்கள் வழங்கிய நண்பர்களுக்கும், மாவீரர் அலெக்ஸாண்டர் அவர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.!

  அப்புறம் ரொம்ப நாளாகவே ஒரு தகவல் சொல்லணும்ன்னு, அது ஒரு பெரிய குறைன்னும் சொல்லலாம்.

  நம்ம லயன் ப்ளாகில் கமெண்ட்ஸ் போட்டா டக்குன்னு பப்ளிஸ் ஆயிடுது.ஆனா உங்க ப்ளாகில் ஏகப்பட்ட செக்யூரிட்டிஸ் இருக்குறப்பல ஒரு பீல் ஸாரே.! போலீஸ்கார் ப்ளாகுக்கு எதுக்கு செக்கியூரிட்டிங்கிறேன்..????

  அத்தனையும் தாண்டி கமெண்ட்ஸ் போட சலிப்பா இருக்கு ஸாரே... :((((

  உங்க செக்யூரிட்டிஸ் என்னை உங்க கிட்ட கமெண்டவே விடமாட்டேங்கிறாங்க.!

  அதை உடனே மாத்தி ...'காவல்துறை உங்கள் நண்பன்' ன்னு காட்டுங்களேன்...ப்ளிஸ்..! (கை கூப்பும் பிங்கி படம் 61 )

  நட்புடன்
  மாயாவி.சிவா

  ReplyDelete
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். இந்த டெம்ப்ளேட் மாற்றியதில் ஏதாவது பிழையா என தெரியவில்லை. நான் சோதித்தவரையில் Anyone can comment என்பதை மட்டும் மாற்றியுள்ளேன். இந்த புத்தகத்தை ப்ளீச் செய்தது நானேதான். கணினியை சரி செய்து ஏதேனும் திருத்தம் எனில் ஆலோசனை கொடுத்து வருவதில் திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அண்ணனின் உதவி தொடர்கிறது. நன்றியும் அன்பும்.

  ReplyDelete
 5. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 நன்றி சொல்வதற்க்கு
  தமிழில் வார்த்தைகள் ஒன்றுமில்லை போலிஸ்கார்

  அதனால்தான் சிம்பல்ஸ்

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி சம்பத் ஜி. உங்களைப் போன்ற நல்ல இதயங்கள் உதவி செய்ததால்தான் நான் இன்று அதனைத் தொடர்கிறேன். அந்த உதவிகளுக்கு என்னால் முடிந்த பிரதி உபகாரம் இது. அவ்வளவுதான்.

   Delete
 6. please can i get the links for this masterpiece work i would appreciate it a lot please

  ReplyDelete
  Replies
  1. Yes. Soon all chapters will be available.

   Delete
 7. Salute it 4 ur comics love...we are with u sir

  ReplyDelete

IND-78-ஜனாதிபர் ஜாலம்..

Credits kumar Tirupoor and ganesh https://www.mediafire.com/file/fxilaesi9egs0ke/KR+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0...